அல்லாருக்கும் வணக்கம்னா!
மகளிர் மசோதா ஆண்வர்க சதின்னு ஒரு பதிவு போட்டேன். அதை படிக்காதவுக மட்டும் இங்கே அழுத்தி படிச்சுருங்க. அப்புறம் என்ன ..மறுபடிஅவள் தொடர்கதைய மஸ்தா பேரு படிக்கிறாப்ல இருக்கு ஆனால் மறுமொழி மட்டும் நஹி.. என்னா போச்சு.. இப்ப இந்த லேட்டஸ் ட் சாப்டரை படிங்கண்ணா ! வுடு ஜூட்
ஸ்டுடியோ வச்சி ஒரு மாசமாயிருச்சு.கணக்கு பார்த்தா கைய கடிக்குது. அப்பா என்னவோ "மாயா ! இதெல்லாம் ஒரு கணக்கே இல்லை. கை நிறைய பென்ஷன் வந்தும் ஏறக்குறைய லைப்ரரிலயே குடியிருந்தேன், மண்டை சூடும், இன்சோம்னியாவும் தான் மிச்சம்.என்.ஜி.ஓ ஹோம் போய் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆனவனுக்கெல்லாம் ரெப்ரசன்டேஷன் எழுதிக்கொடுத்துக்கிட்டிருந்தேன் எண்ணெய் செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருந்தேன். பொழுது போறதுக்காக உடுப்பில டிஃபன் சாப்டறது அஜீரணம்,அசிடிட்டினு அவஸ்தை பட்டேன்., கண்டவன் கல்யாணத்துக்கு,கருமாந்திரத்துக்கு போறதுன்னு வெட்டியா செலவு பண்ணிக்கிட்டிருந்தேன். இப்போ பாரு ஐம் ஹேல் அண்ட் ஹெல்தி. ராத்திரி பத்துக்கெல்லாம் அருமையா தூக்கம் வருது. மாத்திரை செலவு பாதியா குறைஞ்சுருச்சு"ன்னுதான் சொன்னாரு.
ஆனா மாயா,"அங்கிள் ! இந்த காலத்துல (1988லயே) விளம்பரம்ங்கறது ரொம்ப முக்கியம். அதுக்காக பேப்பர்ல விளம்பரம் பண்றது வீண் வேலை. நமக்கு வித் இன் தி டவுன் விளம்பரம் போதும். நாமே ஒரு பேப்பர் ஆரம்பிச்சா என்ன?"
மாயா மேற்படி கேள்விய கேட்ட நேரம் எல்லாரும் வீட்டு மாடில மூன் லைட் டின்னர் சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். பிளாஸ்டிக் பாய் விரிச்சிருக்க ஆளுக்கொரு சாஸர் வச்சிக்கிட்டு பாட்டியும் மாயாவும் சேர்ந்து ப்ரிப்பேர் பண்ண சித்திரான்ன வகையறாக்களை சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். என் தம்பி தன் சாஸரை பாட்டிப்பக்கம் நீட்டி "இந்த தயிர் சோத்துல கொஞ்சம் காராசேவு போடு"ன்னான். சின்ன அண்ணன் கர்ண கடூரமா ஒரு ஏப்பம் விட்டு "சாரி"ன்னான்.
எனக்கு கண்ணை கட்டுது. "பேப்பருன்னா சின்ன விசயமில்ல கண்ணு. பிரபல தினசரிகளையே டீ கடைலயும், சலூன்லயும் ஓசில படிச்சுட்டு போற காலம் .. ஃபேமில் பட்ஜெட்ல பத்தாக்குறை வந்தா முதல் வெட்டு பேப்பருக்குதான்"ன்னேன்.
மாயா ," நோ முகேஷ் ! நாம நம்ம பேப்பரை விற்கப்போறதில்லை. இலவசமா தரப்போறோம்"
""யம்மாடி நீ வித்தாலும் எவனும் வாங்க மாட்டான். " - இது நான்
"அப்போ பேப்பரு,ப்ரிண்டிங்க் செலவெல்லாம் கோவிந்தாவா?" - இது என் தம்பி.
" இல்லப்பா.. நான் பல விதமா யோசிச்சு பார்த்துட்டுதான் இந்த ப்ரபோசலை பத்தி பேச்செடுத்தேன்... நாம ஆஃபீஸுக்கு ஷேர் ஆட்டோல போற வழில தினசரி ரெண்டு புது பேனரையாவது பார்க்கிறோம். ஆட்டோ இறங்கி ஆஃபீஸ் போறதுக்குள்ள நாலஞ்சு பாம்லெட்டையாவது பார்க்கிறோம்.. அப்படின்னா என்ன அர்த்தம்?"
"அவனவன் ஏதோ புதுசா திறக்கப்போறான், விக்கப்போறான், தள்ளுபடி தரப்போறானு அர்த்தம்"
" பேனர் ஒரே இடத்துல தான் இருக்கும், பாம்லெட்னாலே ஒரு அலட்சியப்போக்கு இருக்கும் இந்த கைல வாங்கி அந்த கைல கீழே விட்டுர்ராங்க .. நாம விளம்பரத்துக்காகவே ஒரு பேப்பர் நடத்தறோம்னு வை.. இந்த பார்ட்டிங்க எல்லாம் அவங்க பேனர் செலவை, பாம்ல்ட் செலவை 20 சதவீதம் குறைச்சிக்கிட்டு அந்த பட்ஜெட்ல நம்ம பேப்பருக்கு விளம்பரம் கொடுத்தா போதாது.. "
"அது சரி எல்லார் கிட்டயும் காசு வாங்கி பெரிய பாம்லெட்டா போட்டு டிஸ்ட்ரிப்யூட்
பண்றேங்கறிங்க" -இது சின்ன அண்ணன்.
"நோ நோ..பாம்லெட்டுனு ஏன் நினைக்கிறிங்க. ஒரு தினசரிக்குண்டான லே அவுட் பண்றோம். மக்களுக்கு உபயோகமான தகவல்கள் கொடுக்கிறோம்னு வைங்க .. நாம வித் இன் தி டவுன் விளம்பரம் தேவைப்படறவங்களை மட்டும் காண்டாக்ட் பண்றோம். ஃபார் எக்ஸாம்பிள் எங்க ட்ராவல்ஸுக்காக்வே மாசத்துக்கு ரெண்டு தடவையாவது பாம்லெட் போடறோம். மேட்டர் கொடுக்க, ப்ர்ஃப் பார்க்க, டெலிவரி வாங்க அலையறது ஒரு பக்கம்னா அதை டிஸ்ட் ரிப்யூட் பண்றது பெரிய தலைவலி. நான் எங்க பாஸ் கிட்டே பேசி மாசத்துக்கு ரெண்டு விளம்பரம் ரெகுலரா வராப்ல பண்றேன்.."
"அது சரி விளம்பரம் வாங்கறது யாரு?" - இது தம்பி
"ஏன் நாமதான் வாங்கனும் .. ஆரம்பத்துல நாமே கான்செப்டை சொல்லி கொஞ்ச நாள் விளமபரம் கலெக்ட் பண்ணி நடத்திட்டா அதுக்கப்புறம் நம்ம பேப்பருக்குனு ஒரு குட்வில் வந்துரும். அப்ப வேணம்னா அதுக்குன்னு ஒரு பையனை போட்டுக்கிட்டா போவுது. இன்னும் கொஞ்ச நாள் போனா பை ஃபோன் விளம்பரம் புக் ஆகவும் வாய்ப்பிருக்கு "
லெமன் ரைஸ்ல இருந்த வேர்கடலைகளை பொறுக்கி இன்னொரு சாஸர்ல வச்சிக்கிட்டிருந்த அப்பா "மாயா ! வெறுமனே பேசினா புரியாது. நீ எனன பண்றே ஒரு டம்மி மாடல் தயார் பண்ணு. பட்ஜெட் போடு. அப்புறம் ஒரு நாள் பேசலாம்"னாரு.
அப்புறம் வேற சில விஷயங்களை பேசியபடி மூன் லைட் டின்னர் முடிஞ்சது.
திருக்குரான்ல ஒரு விஷயம் சொல்ப்பட்டிருக்காம் ஒவ்வொரு நாளும் ஒரு கோல்டன் செகண்ட் வருதாம்,. அந்த செகண்ட்ல யார் என்ன நினைச்சாலும் நடந்துருமாம். அந்த மாதிரி கோல்டன் செகண்ட்லதான் மாயா அந்த ஐடியாவ கொடுத்திருக்கனும்.
அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் நடத்த முடியாம வச்சிருந்த "நகர தூதா"ங்கற மாதமிருமுறை பேப்பரோட டைட்டிலை கொடுக்க, சின்ன அண்ணன் தன் ஃப்ரெண்டும் ப்ரிண்டருமான கிராஃபிக் ரவியை அறிமுகப்படுத்த நான் என் ஃப்ரெண்ட் அம்ருதா ஆர்ட்ஸ் சங்கரை லே அவுட் ஆர்ட்டிஸ்டா அறிமுகப்படுத்த, எல்லாருமா சேர்ந்து டம்மியும், பட்ஜெட்டும் தயாரிச்சு அப்பாக்கிட்டே தர அவரு க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாரு. களத்துல குதிச்சோம்.
அப்பாவோட க்ளீன் இமேஜ், மாயா கெனட்டிக் ஹோண்டாவை ட்ரைவ் பண்ண நான் பின்னாடி உட்கார்ந்து விளம்பர சேகரிப்புக்கு போறதுல சனத்துக்கு கிடைச்ச த்ரில் இப்படி சகல அம்சங்களும் உதவியா இருந்தது. புது பேப்பரை நம்பி முன் கூட்டி விளம்பர காசு கொடுக்க வியாபாரிகள் தயங்க மாயா தான் அடிச்சு விட்டா " காசு இப்ப கொடுக்க தேவையில்லிங்க. பேப்பர் பப்ளிஷ் ஆகி டிஸ்ட்ரிப்யூட் ஆன பிறகு கொடுத்தா போதும்"
மாயா திமுக மாதிரி குடும்ப உறுப்பினர்களுக்கெல்லாம் பதவிகளை வாரி வழங்கினாள். அப்பா ஹானரபிள் எடிட்டர் & பப்ளிஷர், நான் எக்ஸிக்யூடிவ் எடிட்டர் . சின்ன அண்ணன் அட்வர்டைஸ்மென்ட் மேனேஜர். தம்பி அட்வர்டைஸ்மென்ட் எக்ஸிக்யூட்டிவ். மாயா பெண்கள் பகுதி இன்சார்ஜ்.பாட்டி பாட்டி வைத்தியம்& சமையல் பகுதிக்கு இன்சார்ஜ். ஊர் கூடி தேர் இழுத்த கதையா குடும்பமே நாலு பக்கத்துக்கு மேட்டர் செட் பண்ணி விளம்பரங்களை செட் பண்ணி முடிச்சுருச்சு.
பேப்பர் ப்ரிண்ட் ஆகி வந்தது. பஸ் ஸ்டாண்ட்ல பஸ்கள் நின்னதும் ஃப்ளோர் க்ளீன் பண்ணிட்டு கண்டக்டருங்க கிட்டே ரெண்டு ரூபாக்கு கெஞ்சற க்ளீனர் பசங்களை பிக் அப் பண்ணிக்கிட்டு வந்து டவுன் மொத்தம் வினியோகம் பண்ணி முடிச்ச பிறகுதான் அப்பா கணக்கு பார்த்தார். "மாயா! எல்லா செலவும் போக ரெண்டாயிரத்து இரு நூற்று நாற்பது மிச்சமாகுதும்மா" என்றார் குதூகலமாக.
மாயா "நோ அங்கிள் அதுல நமக்கு வரவேண்டிய விளம்பர பாக்கி எவ்ள பாருங்க. அதெல்லாம் வந்தா தானே லாபம் ? மேலும் ஃபர்ஸ்ட் இஷ்யூவுக்கு ச்சும்மா கொடுத்து தான் பார்க்கலாமேன்னு நினைக்கிற பார்ட்டிங்க கூட கொடுத்திருப்பாங்க .அவங்க எல்லாம் அடுத்த இஷ்யூல கழண்டுக்குவாங்க. ஒரு ஆறு மாசம் தொடர்ந்து வெளிவரனும். அதாவது 12 இஷ்யூ. "
பன்னெண்டு இஷ்யூ வெளிவரதுக்குள்ள சின்ன அண்ணன், தம்பி ரேஞ்சே மாறிப்போச்சு. பிரஸ்ஸுன்னு போட்டிருக்கிற மாயாவோட கெனட்டிக் ஹோண்டாவை சொல்லிட்டு ஒரு தடவை சொல்லாம ரெண்டு தடவை எடுத்துட்டு போனதுல அதுக்கிருக்கிற மரியாதை தெரிஞ்சுபோக மாயா கிட்டே அவிக பழகற விதத்துல செம மரியாதை.
நடுவுல ஒரு தடவை ஹைதராபாத்ல இருந்து பெரிய அண்ணன் ஊருக்கு வந்திருந்தான். டைபாயிட் வந்து பேஸ்தடிச்சாப்ல இருந்தான். பக்கத்து வீட்டுக்கு தயிர் பச்சடி கொடுக்க போன பாட்டிய மாடு ஒன்னு முட்டித்தள்ள பாட்டி கீழ விழுந்து தொடைல ஃப்ராக்சர்.பாட்டிக்கு ஒரு நர்ஸை போட்டு, சமையலுக்கு ஒரு அய்யரம்மாவ போட்டும் மாயாவுக்கு செம ட்ரில். காலைல எந்திரிச்சு காஃபி,டிஃபன் , லஞ்ச் பிரிப்பரேஷன் எல்லாம் சூப்பர் வைஸ் பண்ணிட்டு கிளம்பனும். மத்தியில ஒரு தரம் வீட்டுக்கு வந்து பாட்டிக்கு லஞ்ச் கொடுக்கனும். மறுபடி ராத்திரி வந்து சமையல்.
இந்த பரபரப்புக்கிடையில "எனக்கு 24 உனக்கு 20" ன்னு வேற ஒரு கதை தனி ட்ராக்ல ஓடியிருக்கு.
நம்ம வீட்டுக்கு தயிர் பச்சடி கொடுக்க வந்துதானே பாட்டிக்கு ஃப்ராக்சர் ஆச்சுன்னு பக்கத்து வீட்டு பரிமளம் பாட்டிய அப்பப்போ வந்து பார்த்துட்டு போவாள் போல டைஃபாயிட் வந்து ரெஸ்ட்ல இருந்த அண்ணனையும் கண்டுக்கிட்டாப்போல இருக்கு.. ரெண்டு பேருக்கும் லவ்ஸாம். பாட்டிய பார்த்துக்க போட்டிருந்த நர்ஸுதான் விஷயத்தை ஒரு குன்ஸா கக்குச்சு.
அந்த குடும்பமே கச்சாடா குடும்பம்.அதுலயும் பரிமளம் சங்கினி ஜாதி ஸ்த்ரீ.பெரிய பெரிய கண்ணு, கீழ் உதடே ஏக்கரா கணக்குல இருக்கும். கண்ட நேரத்துல திங்கும், கண்ட நேரத்துல தூங்கும். ஒரு தரம் நான் மச்சங்களுக்கு பலன் புஸ்தவம் படிச்சிட்டிருந்தப்ப முகேசு.. தொடைல மச்சமிருந்தா என்னனு பார்த்து சொல்லேன்னுச்சு. நான் ஒரு பேச்சுக்கு அத எல்லாம் கண்ணால பார்க்காம எப்படி பலன் சொல்றதுன்னேன் .அவ்ளதான் எம்.எஸ்.ஆர் மூவி லேண்ட்ல ஸ்க்ரீன் மேல போகுமே அந்த மாதிரி அசால்ட்டா தூக்கி.. வேண்டாம்டா சாமி.இதுல அவளுக்கு நாலு மாமன். நாலு பேரும் லாரி டிப்பார்ட்மென்ட். இங்கே வீட்ல ஃபைனான்ஸ் கொஞ்சம் வீக்கு .மாமனுங்க கிட்டேருந்து வந்தாதான் சாப்பாட்டுக்கு நடக்கும்.
உடனே அப்பா காதுல விஷயத்தை போட்டேன். அவரு "இதுல என்னடா இருக்கு ஒரே ஜாதிதானே, பக்கத்து வீடேதானே .இவன் கல்யாண பேச்செடுத்தாலே ஜகா வாங்கிக்கிட்டிருந்தவன் ..ஏதோ காலம் கனிஞ்சு வந்திருக்கு.பரிமளாவோட அப்பாக்கிட்டே நான் பேசறேன்றாரு வெள்ளந்தியா"
நானு விஷயத்தை ஒரு மாதிரியா ஓப்பன் பண்ணேன். "அதில்லடா இந்த லவ் விஷயத்துல எல்லாம் நாம வேணான்னாதான் சூடேறும் .. ஓடிப்போறது.. அது இதுன்னு நடக்கும் ."னு அப்பா தயங்கினார்.
நான் "யப்போவ்.. நான் உன் புள்ளங்கறது அஞ்சு நிமிஷத்துக்கு மறந்துரு. உன் பெரிய புள்ள என்னை மாதிரி இல்லே .. காணாததை கண்டு மயங்கிட்டானே கண்டி அவன் சரியான கணக்குபிள்ளை. லாப நஷ்ட கணக்கில்லாம எதையும் செய்யமாட்டான். இத்தனை நாளு தனியா பீரு,பிரியாணின்னு கொண்டாடினான்.அவன் தொந்திய பார்த்தல்ல. இப்போ டைஃபாயிட் வந்து நரம்பு கழண்ட உடனே பெண்டாட்டியோட நெசஸிட்டி தெரிஞ்சிருக்கும். இத்தனை நாள் நீ குதிச்சே.இப்போ கண்டுக்காம விட்டுட்ட. மறுபடி கல்யாண சப்ஜெக்டை எப்படி எடுக்கறதுன்னு யோசனை பண்ணி இப்படி பரிமளத்துக்கிட்ட ஜொள் விட்டிருப்பான்.பரிமளாவ முடிக்கனும்னு நினைச்சா நர்ஸுக்கு தெரியாம முடிக்கலாமில்லயா நர்ஸுக்கு தெரியறமாதிரி ஏன் ஜொள்ளு விடனும்"ன்னேன். அப்பா யோசனையா "நான் ரெண்டுத்துக்கும் ரெடி. நீயே உங்கண்ணன் கிட்டே பேசு .. ரைட்டா லெஃப்டான்னு நீ தான் சொல்லனும்"னாரு
No comments:
Post a Comment