முன் கதை சுருக்கம்:
நான் சமீபத்துல காலேஜ் முடிச்சு (படிப்பை இல்லிங்கண்ணா) அப்பாவோட ஃப்ரெண்டுக்கு சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸை பார்த்துக்கிட்டிருந்தேன். பேய்க்கு வேலை கொடுத்த கணக்கா வேலை கொடுக்கவே கச்சா முச்சானு ஒர்க் அவுட் பண்ணேன் .ஓனரோட ரெண்டு பஸ்ஸும் தொடர்ச்சியா ரோட்ல இருக்கிறாப்ல பண்ணேன். என்ன நானே வெளியவும் சுத்தி கணக்கு,வழக்குன்னு உள்வேலையும் பார்க்க வேண்டி வந்ததால லேசா திணற, ஓனர் மாயானு ஒரு பொண்ணை எனக்கு உதவியா அப்பாயிண்ட் பண்ணார்.அவள் என்னைவிட பத்துவயசு மூத்தவ. என்னோட துருதுருப்பு அவளையும்,அவளோட மெச்சூரிட்டி என்னையும் கவர கொஞ்சம் கொஞ்சமா நெருங்கினோம். ஒரு நாள் அவள் ரூமுக்கு போனா பூச்சி மருந்து குடிச்சு மயங்கி கிடக்கா. எப்படியோ காப்பாத்தி அவளுக்காக வில்லேஜ்ல தர்ம அடி வாங்க நெருக்கம் இன்னம் கொஞ்சம் அதிகமாச்சு. ஓனர் சம்சாரத்துக்கு ஆப்பரேஷன். மெட்ராஸ் அப்போலோல மாயா தான் நாலு நாள் இருந்து எல்லாத்தயும் கவனிச்சுக்கிட்டா. ஓனர் மாயாவ பத்தி ஆஹா ஓஹோன்னு புகழ எங்கப்பா அந்த பொண்ணு ஏண்டா தனியா ரூம் எடுத்துக்கிட்டு அவஸ்தை படனும் . இதுவும் பொம்பளையில்லாம நாறிக்கிட்டிருக்கிற வீடுதானே தெரு ரூமை ஒழிச்சு கொடுத்தரலாம் இங்கயே தங்கிக்கட்டும்னாரு. நான் மாயா வீட்டோட வந்துட்டா.ஸ்டுடியோ வச்சோம்.லோக்கல் பேப்பர் ஆரம்பிச்சோம். பாட்டிக்கு துடைல எலும்பு முறிவு. பெரிய அண்ணன் ஹைதராபாத்லருந்து டைஃபாய்டோட வீட்டுக்கு வந்தான். பாட்டிய பார்த்துக்க நர்ஸ போட்டோம். சமையலுக்கு ஒரு அய்யரம்மாவ போட்டோம். அப்பா, சின்ன அண்ணன் ஸ்டுடியோ, தம்பி காலேஜு, மாயாவும் நானும் ட்ராவல்ஸு, ஃப்ரீ ஹவர்ஸுல நகர தூதாவுக்கு விளம்பரம் சேகரிக்கிறதுன்னு பிசியா இருந்தப்ப பக்கத்து வீட்டு பரிமளத்தோட பெரிய அண்ணனுக்கு லவ்ஸுனு தெரியவந்தது. அப்ப அதையே முடிச்சுரலாம்னு சொல்ல, நானு "அவ லோலாயி.நம்மாளு ஒன்னும் லவ்ஸ் பண்ற கேரக்டரில்ல. எனக்கு கல்யாணம் பண்ணுனு உனக்கு க்ளூ கொடுக்கறான் அவ்ளதான்"ன்னேன். அப்பா " நீயே பேசு நீ ரைட்டுன்னா ரைட்டு.. லெஃப்டுன்னா லெஃப்டுன்னாரு"
இப்போ தொடர்ந்து படிங்க:
விஷயத்தை மாயாவுக்கு சொன்னேன். மாயா," நான் அந்த பொண்ணுகிட்டே பேசிப்பார்க்கிறேன். நீ உன் அண்ணன் கிட்டே பேசு" ன்னா.
"த்ஸு..அங்கதான் தப்பு பண்றே.. ஆப்போசிட் செக்ஸ் டீல் பண்ணாதான் விஷயம் ஒர்க் அவுட் ஆகும். பஸ்ஸுல லேடி கண்டக்டர் கூட எந்த ஆண் பிரயாணியும் தகராறு பண்ணமாட்டான் .. லேடீஸ்தான் நாஸ்தி பண்ணிக்கிட்டிருப்பாங்க ஸோ நான் பரிமளா நீ எங்கண்ணன் கிட்டே பேசு"
"அய்யய்யோ உங்கண்ணனை பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாதே"
"அண்ணன் என்ன உலகத்துல இருக்கிற எல்லா ஆண் மக்களையும் ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி புரிய வைக்கிறேன். ஆம்பளைங்க எல்லாம் பலான விஷயத்துல சரண்டர் ஆயிருவாங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்கு, அது விஷயம் முடியறவரை, விஷயம் தீர்ந்து போற வரைதான். ஆனால் ஆணினம் சரண்டர் ஆகறது தாய்மை கிட்டேதான். ஏற்கெனவே சொல்லியிருக்கேனே இந்த கடா குட்டிங்கல்லாம் பை பர்த் சில்றைங்க. ஆனா பொட்ட குட்டி பிறக்கறப்பவே தன்னிறைவோட பிறக்குது. அவள் வாழ் நாள் முழுக்க வெளிப்படுத்த வேண்டிய கருமுட்டைகள் கூட பை பர்த் அவகிட்டே ஸ்டோர் செய்யப்பட்டுருது. அவளுக்கு இயற்கை கொடுத்திருக்கிற அஜெண்டா படைப்பு. அதனால அவள் பிறக்கும்போதே தாயா பிறக்கறா. என்ன ஒரு சோகம்னா சைல்ட் ஹுட்ல இருக்கிற பிரக்ஞை டீன் ஏஜ்ல மங்கி போயிருது. அதனால நிறைய பெண்கள் தங்களுக்குள்ள இருக்கிற தாயை,தாய்மை ஏக்கத்தை உணர்ரதில்லே.. ஆண்களும் இப்படித்தான் இருக்காங்க. தனக்கு தேவை ஒரு தாய்ங்கற ரியலைசேஷன் சாமான்யத்துல வர்ரதில்லை. பெண்ணோட முலை அவனை கவர காரணம் தாய்மைக்கான ஏக்கம்.. இவ்ள ஏன் உடலுறவே கருப்பைக்குள்ள மீண்டும் புகுந்துக்கறதுக்கான முயற்சின்னு சைக்காலஜி சொல்லுது
அதுலயும் எங்கண்ணன் இருக்கானே.. போஸ்ட் கிராஜுவேஷன் படிக்க அவனை திருப்பதி ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டாங்க. அதனால ஹோம் சிக், இன் செக்யூரிட்டி,உள்ளூற உறவுகளுக்கான ஏக்கம் ஏக்கரா கணக்குல இருந்தாலும் மேலுக்கு எனக்கு எவனும் தேவையில்லேங்கர பில்ட் அப். மேலும் கொஞ்சம் ஃபீமலிஷ் கேரக்டர். சுய நலம் ஜாஸ்தி, என் டூத் பேஸ்ட்,என் சோப்பு, என் பவுடர்னு இருப்பான். இதெல்லாம் ஹாஸ்டல் லைஃபோட எஃபெக்ட். மணி கணக்குல தர்கமா பேசுவான். பெண்டாட்டியோட செகண்ட் ஷோ போறப்ப எவனா குடிகாரன் லந்து பண்ணா பெண்டாட்டிய விட்டுட்டு ஓடியே போயிருவான்"
"தபார்ரா .. நீ மட்டும் ஜாக்கி சான் கணக்கா ஃபைட் பண்ணுவயோ?"
"அப்படின்னு சொல்லலே. அட்லீஸ்ட் நம்ம கெட்டப்பை பார்த்து மேற்படி குடிகாரனே ஒதுங்கி போயிருவான். அப்படியும் லொள்ளூ பண்ணா ஸ்ட்ரீட் ஃபைட் டெக்னிக்ஸ் சிலதெல்லாம் தெரியும் ..முடிஞ்ச வரை சமாளிச்சு பார்ப்பேன். அப்படியும் முடியலன்னா வயித்துல ஒரு முட்டு, இல்லை தொடை இடுக்குல முழங்காலால ஒரு இடி.. அப்புறம் என்ன ஆட்டோ கிடைக்கிற வரை பி.டி.உஷாதான்.."
"சரிடா உங்கண்ணன் கிட்டே எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது"
"என்னா நீ ..எல்லாத்தயும் நானே சொல்லிக்கொடுத்துட்டா அப்புறம் நீ என்னா கிழிக்கிற மாதிரி.. சரி சரி இது ஒன்னும் கெட்ட வார்த்தையில்லே.. ஏன் கிள்றே.. நேர போ.. கங்ராஜுலேஷன்ஸ்.. சீக்கிரத்துல உங்களுக்கு கல்யாணமாமேன்னு கொளுத்தி போடு"
"சரி..பரிமளா கிட்டே போய் நீ என்ன பேசுவ?"
"மச்சங்களுக்கான பலன்கள் இருக்கு..உனக்கெதுனா டவுட் இருக்கான்னு கேட்பேன்"
"ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"
"அட அவ உண்மையிலயே என் அண்ணனை லவ்ஸ் பண்றாளா இல்லையா தெரிஞ்சுக்க இது ஒரு பரீட்சை கண்ணு.. ஆமாடா ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சிருந்தேன் தொடைல இப்படி ஒரு மச்சமிருந்தா என்ன? ன்னு கேட்டா அவளுக்கு தேவை வைபரேட்டர்..ஏய் என்ன உடம்பு எப்டி இருக்கு உங்கண்ணன் கிட்டே சொல்லவான்னா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சுன்னு அர்த்தம்"
"எப்படியோ தொலை..ஆமா உங்கண்ணனுக்கு கல்யாணம் பண்றதுல உனக்கென்ன இன்ட்ரஸ்ட்?"
"ஆமா வந்த வேலைக எதுக்கும் போகாம ஊர் சுத்திக்கிட்டிருந்த என் சின்ன அண்ணனுக்காக ஸ்டுடியோ வச்சு, லோக்கல் பேப்பர் வச்சு கலக்க வச்சுட்டயே அதுல உனக்கென்ன இன்டரஸ்ட்?"
"ஏதோ வேலை வெட்டியில்லாம சுத்தி வராரேன்னு ஒரு மனிதாபிமானம்"
"டைஃபாயிட் வந்தப்ப வென்னீர் வச்சு குடுக்க பெண்டாட்டி இல்லாம அவஸ்தை படறானேன்னு ஒரு மனிதாபிமானம்"
"ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"
"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"
"சரி உண்மைய சொல்லு"
" முதல்ல நீ சொல்லு"
"முதல்ல நீ"
" என்னா இது யு ஷோ யுவர்ஸ் ஐ ஷோ மைன்ங்கற மாதிரி"
சரி.. எப்படியோ எங்க பேச்சு வார்த்தைகள் சக்ஸஸ் ஆகி பரிமளத்துக்கு தேவை ஒரு வைபரேட்டர். பெரிய அண்ணனுக்கு தேவை ராத்திரிக்கு ஒரு பொம்பளன்னு ஜட்ஜ் பண்ணிக்கிட்டு அப்பாவுக்கு கீர் (பாதம் கீர் இல்லிங்கண்ணா Gear) போட்டுவிட்டதுல நாலு பொண்ணை பார்த்து ஒரு பொண்ணை ஓகே பண்ணி நிச்சயதார்த்தம் நடந்துச்சு.
அம்மாவோட டெத்துக்கப்புறம் முதல் முதலா நடக்குற இந்த அலுவலை சாக்கா வச்சி சொந்த காரவுக,அப்பாவோட வெளியூர் (வெளி மாவட்ட) ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்து போக இருந்ததுல விட்டுப்போன சொந்தங்க எல்லாம் ஒட்டிக்கிச்சு. மாயாதான் பி.ஆர்.ஓ மாதிரி எல்லாரையும் வரவேத்து ஜூஸும்,காஃபியும் கொடுத்து பேசிக்கிட்டிருந்தா அவிக கரண்ட் அட் ரஸு ஃபோன் நெம்பரெல்லாம் கலெக்ட் பண்ணி டைரில எழுதிக்கிட்டிருந்தா.
கல்யாண தேதியும் வந்தது .கல்யாணத்துல அப்பாவோடஃப்ரெண்ட் ஒருத்தரோட பொண்ணு கொஞ்சம் மானிறமா, பானுப்ரியா ரேஞ்சுல நின்னு விளையாட்டிக்கிட்டிருக்க நான் மாயாவ வெறுப்பேத்த அதுகிட்ட நூல் விட மாயா தான் சொன்னா " யுவார் டூ லேட் கண்ணா! .. அது உனக்கு எதிர்கால அண்ணி"ன்னா. ஒரு கல்யாணத்துல இன்னொரு கல்யாணம் நிச்சயமாகுங்கறது சரியாயிருச்சு. அவிக தெலுங்கு, நாம தமிழு, அவிக ரெட்டி, நாம முதலியாரு. அப்பா, "டேய் ..சாதிங்கறது என்னடா? தொழிலை வச்சு சாதின்னாங்க. என் தாடிய நான் தான் சிரைச்சுக்கறேன், என் துணிய நானே துவைச்சி, நானே இஸ்திரி பண்றேன், என் ஷூவுக்கு நான் தான் பாலிஷ் பண்றேன், என் வீட்டு கம்மோடை நான் தான் கழுவறேன்"ங்கற பார்ட்டி. மூனு மாசம் கழிச்சு கல்யாணத்தை வச்சிக்கிறதா முடிவு பண்ணாங்க.
பெரிய அண்ணன் ரொம்பவே அறிவாளி ..அண்ணிக்கு அவிக வீட்ல கொடுத்த பாத்திர பண்டங்களை அப்படியே ஹைதராபாதுக்கு லாரி சர்வீஸ்ல புக் பண்ண சொல்லிட்டான்.
அதென்னவோ மூனு ராத்திரி தங்கனுமாமே .. படு பாவிங்க ராயலா மாடி ரூம்ல இருந்த என்ன ஹால்ல அப்பா குறட்டை சத்தம் , பாட்டி மூத்திர வாடைல உருள வச்சுட்டானுங்க.
அடுத்த குவார்ட்டர்ல சின்ன அண்ணனுக்கு கல்யாணம். புது ஜோடிய என்னோட மாடி ரூமுக்கு ஷிப்ட் பண்ணிட்டாங்க. இந்த ரெண்டு கல்யாணங்களோட புண்ணியத்துல மாயா எங்க சொந்தகாரவுக மத்தில ஏகத்துக்கு பிரபலமாயிட்டா. சுமாரா இருக்கிற பொண்ணுகள கூட ப்யூட்டி டிப்ஸ், ட்ரஸ்ஸிங்க் சென்ஸுன்னு கத்துக்கொடுத்து விதவிதமா ஃபோட்டோ எடுக்க வச்சி கல்யாண மார்க்கெட்ல வெல போக வச்சு தனக்குனு ஒரு இமேஜை க்ரியேட் பண்ணிட்டா.
எல்லாம் ஸ்மூத் கோயிங்கா இருக்கிற சமயம் ஓனர் குண்டை தூக்கி போட்டார். "முகேஷூ.. என் காலம் முடிஞ்சிருச்சி.எனக்கு பின்னாடி என் புள்ள இதையெல்லாம் மெயின்டெயின் பண்ணுவாங்கற நம்பிக்கை கிடையாது. அவன் வாடகை வட்டி வாங்கி சாப்பிடலாம்னு நினைக்கிற கேஸு. ரூட் பஸ் ரெண்டையும் பர்மிட்டோட வெல பேசிட்டன். இந்த ரெண்டு டூர் பஸ்ஸையும் கூட வித்துர சொல்றியா .இல்லே நீயே வாங்கிக்கறயா?"
No comments:
Post a Comment