சம்பவங்கள் தான் மனிதனை தேடிவருது மாதிரி குழப்படிய புரிஞ்சிக்கிட்டு அதுக்கு ஓட்டும் போட்டு பிரபல பதிவா மாத்தின நண்பர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி. பதிவு தவறுதலா பிரபலமாகறத கூட குதர்க்கமா பார்த்து குயுக்தியோட விமர்சிக்கிற அன்பர்களை பசித்த புலி தின்னட்டும்.
இந்த பதிவை பிரபலமாக்க வாக்களிப்போருக்கு வடக்கு திசையிலிருந்து செக்கும் (ரப்பர் செக் இல்லிங்கண்ணா) , கிழக்கு திசையிலிருந்து நல்ல தகவலோ ( வயசுக்கேத்த) வரும். சரி காண்ட்ரா வர்சியெல்லாம் எதுக்கு? இந்த பதிவுல ஹ்யூமன் மைண்டை எதெல்லாம் பாதிக்குதுனு ஒரு ஏரியல் வ்யூ பார்க்கலாம்.
எழுதுவதெல்லாம் எழுத்தல்லங்கற தலைப்புல எழுதற பாமரன் கூட ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல என்னை மாதிரி"பலான " பார்ட்டிகளை காட்டமா காச்சி பிறகு அந்த பதிவை நீக்கிட்டதா ஒரு சம்சயம். இதை நான் இங்கே ரெஃபர் பண்ண காரணம் இன்னைக்கு சரினு பட்டது நாளைக்கு தவறுன்னும் படலாம்.ஸோ நான் எழுதறது எல்லாமே உங்க பரிசீலனைக்குத்தான். இதெல்லாம் ஜஸ்ட் வாதங்கள். தீர்ப்பு? நீங்க தான் கொடுக்கனும் மை லார்ட்! இந்த வேண்டுகோள் இந்த பதிவுக்கும் பொருந்தும்.
இந்த உலகத்துல எல்லாமே உண்மைதான். எல்லாமே பொய் தான்.ஆனால் எந்த பொய்யும் 100 சதம் பொய் கிடையாது. எந்த நிஜமும் 100 சதம் நிஜம் கிடையாது. எந்த பொய்யும் 24 மணி நேரம்,365 நாளும் பொய்யா இருக்க முடியாது. எந்த நிஜமும் 24 மணி நேரம்,365 நாளும் நிஜமா இருக்க முடியாது. மாறாதது எதுவுமில்லே மாற்றத்தை தவிர.
மனுஷன் யோசிக்கிறது ஒன்னு. இவன் யோசனைக்கு கூட சிக்காதது வேறொன்னு
பேசறது ஒன்னு .. செய்யறது ஒன்னு. செய்ததா சொல்லிக்கிறது ஒன்னு. இதனால இவனோட மனோபலம் சிதறி சின்னாபின்னமா கிடக்கு. உடைஞ்சி சிதறிப்போன பவர் க்ளாஸ் வழியா பார்த்தா எப்படி காட்சி துண்டு துண்டா தெரியுமோ அதே இழவுதான் இவன் பார்வையிலயும் சாவெடுக்குது.
நானும் ஒரு காலத்துல இதே சாதியாதான் இருந்தேன். ஏதோ அந்த நேரத்துல மைண்ட் ஃப்ரெஷ்ஷா இருந்ததாலே இப்படியே காலத்தை ஓட்டினேன்.ஆனால் போக போக வறுமை காரணமா பொய் மேல பொய் சொல்லி,அதனால மேலும் கேலிக்கு இடமாகி , பொய்யால உபயோகம் கூட இல்லேனு சலிச்சு போய், சனங்களோட பொய்க்கு வெறுத்து போயி தாளி நம்ம கிட்ட பணம் தான் இல்லே வேற எப்படி இவிகளை பீட் பண்றதுன்னு எதிராளிய அதிர்ச்சிக்குள்ளாக்கற பிரயத்தனமா உண்மைய கசிய விட ஆரம்பிச்சேன். சனங்க ரெஸ்பான்ஸு தூளா இருக்கவே போட்டு உடைக்க ஆரம்பிச்சேன்.
இது எந்த அளவுக்கு போயிருச்சுரான்னா எவன் கிட்டேனா கடன் வாங்க போனா கூட கான்வர்சேஷன் இப்படி தான் நடக்கும்.
"வாங்க சாமி என்ன இந்த பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு"
"ஹும்.. உன்னை ஏற்கெனவே ஒரு நூறு ரூபா ஏமாத்தியாச்சு. வேற சில சர்க்கிள்ள ஏமாற ஆளிருந்தது அதையெல்லாம் ஒரு ரவுண்டு முடிச்சுட்டு வந்தேன். மேலும் உன்னை ஏமாத்தினத நீ மறக்கனுமே அதுக்காக தான் கேப் கொடுத்து வந்தேன். இப்போ ஒரு நூறு ரூபா ஏமாந்தா நல்லாருக்கும்."
எதிராளியோட எதிர்வினை எப்படியிருக்கும்னு பாருங்க.
இப்படி உண்மைகளை போட்டு உடைக்க உடைக்க மைண்ட் காலியாயிருச்சு. வீடு கட்டறப்ப கூட எலிவேஷன் விடறோம். ஹார்ட் டிஸ்க்ல இருக்கிற ட்ரைவ்ஸ்ல ஃபைல்ஸ் லோட் பண்றப்ப கூட கொஞ்சமாச்சும் காலி விடறோம். ஆனால் மூளைய மட்டும் பொய்களால நிரப்பி வச்சா என்ன ஆகும். பிராசஸ் லேட்டாயிரும்.
மனித மூளைய ஆகா ஓகோனு புகழறாங்க. ஆனால் மெமரி எப்பவுமே நம்பிக்கைக்குரியதல்ல,ஏண்டான்னா .............
மனுசன் எது சொல்லப்படுதோ அதை மட்டும் கேட்கறதில்லை.
எது காட்டப்படுதோ அதை மட்டும் பார்க்கிறதில்லை.
அதுல கலப்படம் பண்ணித்தான் உள்ளே அனுப்பறான்.
வெளிய விடறப்பவும் கலப்படம் பண்ணித்தான் அனுப்பறான்.
ஹ்யூமன் மைண்டை பாதிக்கிற முதல் விஷயம் அவனோட தன் முனைப்பு, ஈகோ. ஈகோவை சிம்பிளா எக்ஸ்ப்ளெயின் பண்ணனும்னா.. ஈகோயிஸ்டான மனிதனோட பார்வை கலர் கண்ணாடி வழியா பார்த்தமாதிரி இருக்கும். சுஜாதா கதைல ஒரு டாக்டர் வருவார். சில்ட் ரன் ஸ்பெஷலிஸ்ட் .ராயரோ என்னவோ பேரு. அவருடையது பூச்சிகள் நெளியும் உலகம்.கதைல ஹீரோ கடுமையான மனச்சிக்கல்ல வருவான்.மனச்சிக்கலால வரிசை கொலைகள் செய்யப்போறவன் அவன். டாக்டர் அவனுக்கு பேதி மாத்திரை எழுதி கொடுத்தனுப்புவார்.
இதை படிச்சி சிரிக்கிற நீங்களும், இதை ரெஃபர் பண்ண நானும் கூட பல சந்தர்ப்பத்துல இப்படித்தான் பிஹேவ் பண்றோம். ப்ரம்மங்காரு தன் சிஷ்யன் சித்தய்யாவ கேட்டாராம் " சித்தா ! லோகம் எட்டா உந்திரா?"( உலகம் எப்படியிருக்கு?)
அதுக்கு சித்தய்யா சொன்னாராம்" எவரி லோகம் வாரிதி குருதேவா.." (அவனவன் உலகம் அவனவனுது)
நாமளும் அப்படித்தான் இருக்கோம். மனைவிகள் உலகம் தனி. கணவர்கள் உலகம் தனி. குழந்தைகள் உலகம் தனி. அதிலயும் பெண் குழந்தைகள் உலகம் தனி. ஆண் குழந்தைகள் உலகம் தனி. கலைஞரோட உலகம் தனி. எந்த பேரனுக்கு எந்த பதவி வாங்கி கொடுக்கலாங்கறது தான் அவர் முன்னாடி இருக்கிற இமாலய பிரச்சினை.
உங்க பார்வை , என்னோட பார்வைய பொறுத்து காட்சி மாறாது. காட்சி ஒன்னுதான். நாமதான் யானைய தடவின குருடங்க மாதிரி தூண், கயிறுனு கதை பண்ணிக்கிட்டிருக்கோம்.
இந்த ஈகோவுக்கு பலர் பல வியாக்யானங்கள் செய்துக்கிடறாங்க.
"என் வயசென்ன ? உன் வயசென்ன? எனக்கு இவன் சொல்லவந்துட்டான்"
அய்யா வயசாளி.. பழைய உலகத்தை பொருத்தவரை எங்களை விட நீ சீனியரா இருக்கலாம். ஆனா புது உலகத்தை பொருத்தவரை நீ ஜூனியர்தானு சொன்னா பார்ட்டி நொந்துரும். சொன்னவனை "திமிர் பிடிச்சது"னு ஹிட் லிஸ்ட்ல வச்சுரும். காரியவாதிங்க "அய்யா! நீங்க அனுபவசாலி. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்"னு காரியத்தை முடிச்சுக்கிட்டு வெளிய போய் டீ கடைலயோ டாஸ்மாக்லயோ உங்களை பத்தி நக்கலடிச்சிக்கிட்டிருப்பான்.
" நான் சிட்டீஸ்லயே வேலை செய்தவன் எனக்கு இவன் சொல்லவந்துட்டான்"
"நான் பார்க்காத குட்டியே இல்லை எனக்கு இவன் சொல்லவந்துட்டான்"
" நான் அடிக்காத சரக்கே இல்லை எனக்கு இவன் சொல்லவந்துட்டான்"
இப்படி அனேகம். இதுல உச்சக்கட்டம் என்னன்னா " எனக்கு ஈகோவே கிடையாதுங்க"
இந்த உலகத்துக்கு உங்களை மைய புள்ளியா வச்சி யோசிக்கிறிங்களே அதான் ஈகோ.
உண்மையான உலகத்துக்கு ஒபாமா கூட மையப்புள்ளி கிடையாது. ஃபெடல் காஸ்ட் ரோவோட வெள்ளை தாடி மயிரை கூட பிடுங்க முடியாம போயிருச்சு அமெரிக்காவால.
உஸ் அப்பாடா......................மொக்கைலயே ஒரு பதிவை முடிச்சாச்சு. ஆமாங்கண்ணா உனக்கு 22 எனக்கு 32 ல என்.டி.ஆர் வியாபிச்சதால ஒன்ற முடியலயா? இல்லே அதுவும் மொக்கையாயிருச்சா.. என்.டி.ஆர் இடத்துல வேற ஒரு பார்ட்டிய (உங்களுக்கு பிடிச்ச) கற்பனை பண்ணிக்கிட வேண்டியதுதானே......
No comments:
Post a Comment