என்.டி.ஆரோட தோல்வி கடுப்பை தந்தாலும் அவர் கட்சியோட லோக்கல் வேட்பாளர் தோத்து ஜகன் ஜெயிச்சது சந்தோஷமாவே இருந்தது. ரிசல்ட் வந்ததுமே ஜகன் சாரை ( சுயேச்சை) வாழ்த்த போயிருந்தோம். "என்ன சார் அடுத்து மந்திரி தானே"ன்னேன்.
அவர் "பச்சபுள்ளயாட்டமே இருக்கிறே தம்பி.. நெறய தெரிஞ்சிக்கனும்"னாரு எனக்கு புரியலை.
இப்பவாச்சும் கூகுலாண்டவர் இருக்காரு. தட்டினா அப்படியே இன்ஃபர்மேஷன் கொட்டும். ஆனா என்.டி.ஆர் தோத்துப்போன 1989ல இந்த வசதி கிடையாதே. மேலும் லேங்குவேஜ் ப்ராப்ளம் வேற . நாம் தெலுங்குல கத்துக்கிட்ட முதலெழுத்து தலைவரோட பேர்ல முதலெழுத்துதான். நாம கத்துக்கிட்ட முதல் பேர் அவரோட அவரோட பேர் தான். சினிமால டைட்டில்ஸ் போடும்போது தலைவர் பேர் வரும்போது தியேட்டர் அதிருமில்லே அதை வச்சு ஜிலேபி ஜிலேபியா வந்துட்டு இருக்கிற பேர்கள்ள தலைவர் பேரை ஐடெண்டி ஃபை பண்ணிக்கிறது. இப்படி கத்துக்கிட்ட தெலுங்கு இவ்ளோ பெரிய விஷயத்துக்கு எப்படி போதும்.
மாயாகிட்டே தெலுங்கு கத்துக்க ஆரம்பிச்சேன். குமுதத்துல சில்க் மாதிரி இல்லாம ஒழிங்காவே கத்துக்கொடுத்தாள்.
என்.டி.ஆரோட தோல்விக்கு காரணங்களை ஒரு ஆறு மாசம் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்ச பிறகுதான் ஜன நாயகம்னா என்ன? தேர்தல்னா என்ன? ஜெயிக்கிறவங்க எப்படி ஜெயிக்கிறாங்க? தோற்கறவங்க எப்படி தோற்கறாங்கங்க? ஆந்திர அரசியல் என்ன? எத்தனை ஜாதி? அதுல எதெல்லாம் ரூலிங் கேஸ்டுங்கறதெல்லாம் கொஞ்சமா புரிஞ்சது.
அடுத்து மந்திரி தானேன்னப்ப ஜகன் ஏன் "பச்ச புள்ளயாவே இருக்கப்பா நிறைய தெரிஞ்சிக்கனும்னு ஏன் சொன்னார்னும் புரிஞ்சது. காங்கிரஸ்ல எங்கயும் எப்பயும் ரெண்டு க்ரூப் இருக்கும். ( ஏரியல் வ்யூல பார்த்தா) ஒரு க்ரூப் பிள்ளையார் டைப்பு. கட்சி தலைமைய சுத்தி வந்து வேலைய முடிச்சுக்கும். ஆனால் டம்மி பீஸுங்களா இருக்கும்.சொந்த பெண்டாட்டி கூட இவனுகளுக்கு ஓட்டு போட்டிருக்கமாட்டா. இன்னொரு க்ரூப் நம்ம தமிழ் கடவுள் மாதிரி. ஸ்டேட் மொத்தம் சுத்தி வெட்டி முறிச்சு என்னென்னமோ பண்ணுவாங்க. தலைம கிட்டே லாப்யிங் பண்றதுல கோட்டை விட்டுருவாங்க.தலைமையும் சதா அடுத்த வாரிசுக்கு ப்ளேஸ்மெண்ட் எப்படிரானு இருக்கிறாதால டம்மி பீசுங்களூக்கே பட்டம் கட்டுவாங்க. அவிக தானே வாரிசோட செருப்பை தலைல வச்சி தூக்க தயாரா இருப்பாங்க.
நம்ம ஜகன் சாருக்கு ஒரு ஐடியல் ஹி. அவர்தான் டாக்டர் ஒய்.எஸ். ஒய்.எஸ்ஸுக்கு ஆந்திரா டைகர்னு ஒரு பேர் உண்டு.அவரோட சரித்திரத்துல தோல்விங்கறதே கிடையாது. புலி போய் செருப்பை தூக்குமா? ஊஹூம்.தன்னோட ப்ரிய சிஷ்யன் ஜகனுக்கு டிக்கட் அலாட் பண்ணவே முடியாத நிலைம.அதனால தான் ஜகன் இன்டிபெண்டன்டா கன்டெஸ்ட் பண்ணாரு. யாரோ கிழவாடிய சி.எம் ஆக்கிட்டாங்க. அது ஜல் ஜக் பார்ட்டி. நம்மாளு ஒய்.எஸ் க்ரூப். இதுல மந்திரி பதவியெல்லாம் எங்கே கிடைக்கிறது.
இந்த ஆராய்ச்சியெல்லாம் ஒரு பக்கம் நடந்துக்கிட்டிருக்க அப்பா ஒரு நாள் ரெண்டு பேரையும் கூட்டி வச்சு க்ளாஸ் எடுத்தார்.எல்லாம் வாரிசு விஷயமாத்தான். என்னடா நடக்குது? கல்யாணமாயி ஒன்னரை வருசம் ஆகுது. இன்னும் ஒரு விசேஷமும் இல்லே. என்னம்மா மாயா! நீ என்ன சின்ன பொண்ணா ? இந்த வயசுல கன்சீவ் ஆனாலே பிரச்சினைங்கறாங்க. இதுல இன்னும் லேட் பண்ணிக்கிட்டே போனா எப்படி? எங்க சைட்லயாகட்டும் உங்க சைட்லயாகட்டும் இன்ஃபெர்டிலிட்டிங்கற கேள்வியே கிடையாது. உங்க ரெண்டு பேருக்குள்ள எதுனா பிரச்சினையான்னா அதுவும் கிடையாது. 24 மணி நேரம் ஸ்கூல் டீச்சரும், ஸ்டூடண்டுமா கெக்கே கெக்கேனு சிரிச்சிக்கிட்டுதான் இருக்கிங்க வேர் ஈஸ் தி ரிசல்ட். பெரியவன் ரெண்டை பெத்தாச்சு. சின்னவன் ஒன்னை பெத்துட்டு அடுத்தது வயித்துல இருக்கு. எனக்கு காரணமெல்லாம் தேவையில்லே.. கரெக்டா ஒரு வருஷம் தான் டைம். எனக்கு பேரன், பாட்டிக்கு கொள்ளு பேரன் கைல தவழனும். வேணும்னா இன்னொரு ஹனி மூன் கூட போங்க. இந்த தடவையாவது கோழிக்கடை, மாட்டு பிரியாணி கடைனு இல்லாம ஏதாச்சும் நல்ல இடமா போங்க"னிட்டாரு.
மாயா ரொம்பவே டீலாயிட்டா. நானு 'ஏய்! நான் எதுக்கு இருக்கேன். டோன்ட் வொர்ரி"னு சைகை காட்டினேன்.
ரூமுக்கு வந்ததும் "என்ன முகேஷ்! உங்கப்பா இப்படி சீரியஸ் வார்னிங் கொடுக்கிறாரு?ன்னா திகிலா.
"மாயா! என்ன நீ இவ்ள மந்தமா இருக்கே. சைக்காலஜி தெரிஞ்சுக்க. மனுஷனை ரொம்ப பயமுருத்தி விரட்டற விஷயம் மரணம். எங்கப்பனுக்கு என்ன வயசுங்கறே. இந்த செப்டம்பர் 63 ஆகுது. முதுமைங்கறது மரணத்துக்கான முன்னோட்டம். மரண பயத்துல இருக்கிறவங்களுக்கு ரிலீஃப் கொடுக்கிறது ஜனனம். அவர் கடைசியா பார்த்த ஜனனம் என் தம்பியோடதா இருக்கும். அந்த ஞா எல்லாம் மழுங்கி போயிருக்கும். ஒருபக்கம் முதுமையும், மரணபயமும் விரட்ட ஒரு புது ஜனனத்துக்காக துடிக்கிறது சகஜம்."
"உன் சைக்காலஜியும் நீயும். அவரோட துடிப்புக்கு காரணமெல்லாம் எனக்கு தேவையில்லே. ஒன்னரை வருஷம் ஆகியும் நான் ஏன் கன்சீவ் ஆகல. நான் எந்த முன்னெச்சரிக்கையும் எடுத்துக்கறதில்லை. நீ பேக் டு நேச்சர் ஆளு. பின்னே ஏன் ? ஒரு வேளை உங்க அத்தை சொன்னது ...."
"தூத்தெறி .. அந்த நாற முண்டை எப்பவோ எதையோ உளறி வச்சத இன்னமும் போட்டு குழப்பிக்கிறியா.. நீதான் வாரத்துக்கு 7 நாளு. அதுல ஒரு நாளுதான் உம்மா மிச்ச நாளெல்லாம் அம்மானு அக்ரிமென்ட் எல்லாம் போட்டே."
" நான் என்ன சுத்தமா காய போட்டேனா. 6 நாள் சேமிப்பு, ஒரு நாள் செலவு"
"எனக்கு இந்த ஒரு விஷயத்துல தான் மனுஷங்கள பார்த்தா எரியுது. இந்த படைப்போட ஆரம்பம் தெரியுமா உங்களுக்கு ? பூமியோட வயசு என்ன தெரியுமா உங்களுக்கு? பூமி குளிர்ந்து பல ஆயிரம் கோடி வருசங்க ஆன பிற்பாடுதான் இங்கே வந்திங்க.எப்படி வந்திங்க தெரியுமா? இதெல்லாம் ஜஸ்ட் ஆக்சிடெண்ட் .. இதெல்லாம் ஜஸ்ட் இயற்கையோட கருணை. பச்சையா சொன்னா பிச்சை. உங்களுக்கெல்லாம் என்னா மண்டை கர்வம் தெரியுமா? யுவார் பவுண்ட் டு ஒபே தி நேச்சர். படு யுவார் ட்ரீமிங் டு கமாண்ட் தி நேச்சர்."
" அய்யய்யோ நீ திட்றேனு புரியுது .. எதுக்கு திட்றேனு சொல்ட்டு திட்டுடா"
" யு ஃபூல் ! ஆணும்,பெண்ணும் அவிகளுக்கு வசதியான நாள்ள படுத்துக்கிட்டா கர்பமாயிரும்னு நினைச்சியா நீ.. மனித உடல்ல இயற்கை நடத்தற நாடகம் தெரியுமா உங்களுக்கு. நீங்க மணியடிச்சா நாடகம் துவங்காது கண்ணு.. "
"என்னமோ புரியற மாதிரி இருக்கு. ஆனா புரியல"
"புரியற மாதிரி சொல்றேன். மென்சஸ்னா என்னனு தெரியுமில்லியா? ஒரு பெண் பிறக்கும்போதே அவள் தன் வாழ் நாள்ள ரிலீஸ் பண்ண வேண்டிய முட்டை கருக்கள் அத்தனையையும் ரெண்டு ஓவரில வச்சுருது இயற்கை. ஒரு ப்ரி டிட்டர்மின்ட் அஜெண்டாவின்படி ஒவ்வொன்னா ஓவரிலருந்து புறப்பட்டு கருப்பைக்கு வந்து ஆணோட உயிரணுக்காக குறிப்பிட்ட காலம் காத்திருந்து உயிரணு வந்து சேரலன்னா டெக்கே ஆகி வெளிய வர்ர முட்டைக்கருதான் மென்சஸ்."
"ஓகேடா. ஒரு அஜெண்டா படி ரிலீஸ் ஆகுது காத்திருக்குது. டெக்கே ஆகி வெளிய வந்துருது. அந்த அஜெண்டாவை எப்படி தெரிஞ்சுக்கறது.. எப்போ இன்டர் கோர்ஸ ப்ளான் பண்றது அதை சொல்லு. அதுக்கு முன்னாடி இந்த சப்ஜெக்ட்ல உனக்கென்ன இன்டரஸ்ட். இதையெல்லாம் நீ ஏன் தெரிஞ்சிக்கிட்டே அதை சொல்லு"
"மேரேஜுக்கு முன்னாடி சாரி.. நீ அறிமுகமாகி நெருக்கமாகறதுக்கு முன்னாடி இந்த செக்ஸுவல் அர்ஜுங்கறது நமக்கு பெரிய டிஸ்டர்பன்ஸ். அவசரத்துக்கு அங்கே இங்கே ஒதுங்கறதுண்டு. ஆறிலிருந்து அறுபதுவரைனு சொல்ல முடியாட்டாலும் 18 லருந்து 38 வரை கிடைச்ச குட்டிய விட்டு வச்சதா சரித்திரமே கிடையாது. நோய் பயம் பெரிசா இல்லாட்டியும், கர்ப பயம் அதிகம். அதுக்காகத்தான் இதையெல்லாம் ஜஸ்ட் தொட்டுக்கிட்டேன்"
"அதாவது கர்பத்தை தடுக்க"
"யப்பாடி எப்படியோ .. வாழத்தண்டு பத்திக்கிச்சுப்பா"
"அப்படியே ரிவர்ஸ்ல வாடா .. கண்ணா. எப்படியாவது என்னை கர்பமாக்கிரு. உங்க அப்பா எங்கனா மதிய நேர டிடி டிவி சீரியல் மாதிரி உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிர போறாரு"
" இந்த பாயிண்டெல்லாம் ஒன் பை செவன் ப்ளானை ப்ரபோஸ் பண்ணப்பவே ரோசிச்சிருக்கனும்"
" நான் தான் சின்ன பொண்ணு .. உனக்கு தெரியுமில்லயா.. நீ அப்படியில்லடி.. இப்படிடினு சொல்லியிருக்கலாமில்லே"
"அப்போ நீ வேற 70 எம் எம் சினிமா ஸ்க்ரீன் மாதிரி இருந்தியா . இதுல பெத்து இறக்கி நீ வேற பிந்து கோஷ் மாதிரி ஆயிட்டா என்ன பண்றதுனு பயந்துகிட்டு அடக்கி வாசிச்சிட்டேன்."
"சரி சரி.. இனி என்ன ஏது எப்படினு டிசைட் பண்ணு"
" அது ஒன்னும் பெரிய அல்ஜீப்ரா கிடையாது மாயா ! பீரியட்ஸ் முடிஞ்சு அஞ்சு நாள் கழிச்சு, அடுத்த பீரியடுக்கு அஞ்சு நாள் முந்தி வரை ட்ரை பண்ணனும் தட்ஸால். ஒரு வேளை ஆணுக்கு கவுண்ட் குறைச்சலா இருக்குனு வை. அவன் இந்த டேட்ஸுக்கு முந்தி ஒரு பத்து நாள் செக்ஸ் இல்லாம இருந்தா நல்லது. சேன்ஸ் இன்னும் அதிகரிக்கும்"
மாயா ரெண்டு கை விரல்களையும் மடக்கி நிமிர்த்தி ஏதேதோ கணக்கு போட்டுட்டு
சின்ன குழந்தைகளை கூப்பிடறமாதிரி ரெண்டு கையையும் விரிச்சு" வா"ன்னா.
போய் அவள் அணைப்புல சரணடைஞ்சேன். மறு மாசமே மாயா மாசமாயிட்டா. ரெகுலர் செக் அப்ஸ், டாக்டர் அட்வைஸ் படி உடற்பயிற்சிகள்னு காலம் நகர பத்தாவது மாசம் மாயா ஒரு ஆண்குழந்தைக்கு தாயானாள். கடந்த ஒன்னரை வருஷத்து ப்ளாண்ட் லைஃப் காரணமா நார்மல் டெலிவரிதான் ஆச்சு. பிறந்த குழந்தை என்னவோ மனுஷன் குரங்குலருந்து தான் வந்தான்ங்கறதுக்கு லேட்டஸ்ட் எவிடென்ஸ் மாதிரி தலைல கொஞ்சூண்டு மயிர வச்சுக்கிட்டு உடம்பெல்லாம் பூனை முடியோட இருந்தது. மாயாவை தவிர யார் தொட்டாலும் ஸ்பீக்கர் ஆன் பண்ணிக்கிட்டு இருந்தாலும். அதனோட நிறம் முகம் சுருக்கி அழறதுக்கு பண்ற பிரயத்னமெல்லாம் சுவாரஸ்யமாவே இருந்தது. அப்பாவும் பாட்டியும் தான் அதனோட அவயவங்களை பல பாகமா பிரிச்சு இது தாத்தா ஜாடை, இது அப்பன் ஜாடைனு பேசிட்டிருந்தாங்க . எனக்கென்னவோ அதெல்லாம் ஒன்னும் தெரியல.
இந்த குழந்தை பிறப்பு களேபரத்துல என் ஆராய்ச்சியெல்லாம் கொஞ்சம் தள்ளி போய் மாயாவோட ப்ரசன்ஸ் இல்லாத குறைய ஈடு கட்ட நான் டபுள் டூட்டி பார்க்க வேண்டி இருந்தது. மாயா கொஞ்சம் போல தளர்ந்து போய் வீக்கா இருந்தாலும் அவள் முகத்துல உலகத்தையே ஜெயிச்ச திருப்தி. காலனி ஜனம், அக்காவுங்க , ஊர்காரவுங்கல்லாம் வந்தது வந்ததாவே இருக்க பாட்டிக்கும்,அப்பாவுக்கும் ஒரே பெருமை.
No comments:
Post a Comment