முன் கதை சுருக்கம்:
நான் சமீபத்துல காலேஜ் முடிச்சு (படிப்பை இல்லிங்கண்ணா) அப்பாவோட ஃப்ரெண்டுக்கு சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸை பார்த்துக்கிட்டிருந்தேன். பேய்க்கு வேலை கொடுத்த கணக்கா வேலை கொடுக்கவே கச்சா முச்சானு ஒர்க் அவுட் பண்ணேன் .ஓனரோட ரெண்டு பஸ்ஸும் தொடர்ச்சியா ரோட்ல இருக்கிறாப்ல பண்ணேன். என்ன நானே வெளியவும் சுத்தி கணக்கு,வழக்குன்னு உள்வேலையும் பார்க்க வேண்டி வந்ததால லேசா திணற, ஓனர் மாயானு ஒரு பொண்ணை எனக்கு உதவியா அப்பாயிண்ட் பண்ணார்.அவள் என்னைவிட பத்துவயசு மூத்தவ. என்னோட துருதுருப்பு அவளையும்,அவளோட மெச்சூரிட்டி என்னையும் கவர கொஞ்சம் கொஞ்சமா நெருங்கினோம். ஒரு நாள் அவள் ரூமுக்கு போனா பூச்சி மருந்து குடிச்சு மயங்கி கிடக்கா. எப்படியோ காப்பாத்தி அவளுக்காக வில்லேஜ்ல தர்ம அடி வாங்க நெருக்கம் இன்னம் கொஞ்சம் அதிகமாச்சு. ஓனர் சம்சாரத்துக்கு ஆப்பரேஷன். மெட்ராஸ் அப்போலோல மாயா தான் நாலு நாள் இருந்து எல்லாத்தயும் கவனிச்சுக்கிட்டா. ஓனர் மாயாவ பத்தி ஆஹா ஓஹோன்னு புகழ எங்கப்பா அந்த பொண்ணு ஏண்டா தனியா ரூம் எடுத்துக்கிட்டு அவஸ்தை படனும் . இதுவும் பொம்பளையில்லாம நாறிக்கிட்டிருக்கிற வீடுதானே தெரு ரூமை ஒழிச்சு கொடுத்தரலாம் இங்கயே தங்கிக்கட்டும்னாரு. நான் மாயா வீட்டோட வந்துட்டா.ஸ்டுடியோ வச்சோம்.லோக்கல் பேப்பர் ஆரம்பிச்சோம். பாட்டிக்கு துடைல எலும்பு முறிவு. பெரிய அண்ணன் ஹைதராபாத்லருந்து டைஃபாய்டோட வீட்டுக்கு வந்தான். பாட்டிய பார்த்துக்க நர்ஸ போட்டோம். சமையலுக்கு ஒரு அய்யரம்மாவ போட்டோம். அப்பா, சின்ன அண்ணன் ஸ்டுடியோ, தம்பி காலேஜு, மாயாவும் நானும் ட்ராவல்ஸு, ஃப்ரீ ஹவர்ஸுல நகர தூதாவுக்கு விளம்பரம் சேகரிக்கிறதுன்னு பிசியா இருந்தப்ப பக்கத்து வீட்டு பரிமளத்தோட பெரிய அண்ணனுக்கு லவ்ஸுனு தெரியவந்தது. அப்ப அதையே முடிச்சுரலாம்னு சொல்ல, நானு "அவ லோலாயி.நம்மாளு ஒன்னும் லவ்ஸ் பண்ற கேரக்டரில்ல. எனக்கு கல்யாணம் பண்ணுனு உனக்கு க்ளூ கொடுக்கறான் அவ்ளதான்"ன்னேன். அப்பா " நீயே பேசு நீ ரைட்டுன்னா ரைட்டு.. லெஃப்டுன்னா லெஃப்டுன்னாரு"
பக்கத்து வீட்டு பரிமளத்துக்கு சின்ன டெஸ்ட் வச்சு அவளுக்கு தேவை வைபரேட்டர், அண்ணனுக்கு தேவை பெண்டாட்டினு முடிவு பண்ணி கல்யாணத்தை முடிச்சோம். மாயாவை வெறுப்பேத்த அந்த கல்யாணத்துக்கு வந்த அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் மகளை சீண்டிக்கிட்டிருக்க மாயா "யுவார் டூ லேட் அவதான் உன் வருங்கால அண்ணி"ன்னு சொன்னாள். தீர விசாரிச்சா நிஜம் தான் தெரிஞ்சது. பெரிய அண்ணன் கல்யாணத்துலயே சின்ன அண்ணன் கல்யாணம் நிச்சயமாச்சு. அதையும் அடிச்சு விட்ட பிறகு நம்ம ட்ராவல்ஸ் ஓனர் ஒரு குண்டை தூக்கி போட்டார். எனக்கு ரொம்ப தடமாட்டமா இருக்கு எனக்கப்புறம் என் பையன் தொடர்ந்து நடத்துவான்ற நம்பிக்கை எனக்கில்லை.ரெண்டு ரூட் பஸ்ஸையும் விலை பேசிட்டேன் வித்துட்டேன். உன்னால முடியும்னா டூர் பஸ்ஸை நீயே வாங்கிக்க"ன்னிட்டார்.
மாயாவுக்கு சொன்னா "பேசாம வாங்கிரலாம்னா. "வாங்க வேண்டியது பஸ்ஸு கண்ணு ! உன்னை மாதிரி மிஸ்ஸு கிடையாது.. லகரங்கள் வேணம்"ன்னேன். மாயா, "சரி அப்பா என்ன சொல்றாரு பார்க்கலாம்"னா.
ட்ராவல்ஸ் கணக்கெல்லாம் முடிச்சு ராத்திரி எட்டு மணி வாக்குல ஆஃபீஸ் க்ளோஸ் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வந்தோம். அப்பா மாடில இருக்காருன்னா பாட்டி. "ஏய் நீ எடுத்தேன் கவுத்தேன்னு போட்டு உடைக்காதே முதல்ல நான் போறேன். நீயும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு ,ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு ஃப்ரெஷ்ஷா வா"ன்னு மாயாவுக்கு சொல்லிட்டு நான் மேலே போனேன். எங்க வீட்டு ஜியாக்ரஃபி ஞா இருக்கில்லையா. (கிழக்கு பார்த்த வாசல். மேற்கோ மேற்கில் என் ரூம், பக்கத்துல பாத்ரூம் . என்னைக்குமில்லாத விசேஷமா அப்பா கிழக்கோ கிழக்கில் பால்கனிக்கு நெருக்கமா ஈஸி சேர்ல படுத்துக்கிட்டு எங்கயோ ரேடியோல வர்ர தமிழ் பாட்டை கேட்டுக்கிட்டிருக்கார். அதுவும் அந்த பாட்டு ஒசிபிசா கேட்கற என்னையே என்னமோ பண்ணுச்சு.
ஓராயிரம் பார்வையிலும் உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடியோசையிலே உன் காதலை நான் அறிவேன்
தமிழ் நாவல் மாதிரி பௌர்ணமி நிலா ஜெகஜோதியா ஒளி வீசிக்கிட்டிருக்கு. லெமன் லைட்டுங்கறாங்களே ( மீடியா வெளிச்சம்) அதெல்லாம் இது முன்னே ஜுஜுபின்னு தோணுச்சு. நான் நைஸா நழுவி ரூமுக்கு போய் பேண்ட் சட்டைய கழட்டிட்டு லுங்கி கட்டிக்கிட்டு ஃபேஸ் வாஷ் பண்ணிக்கிட்டு ரூமுக்குள்ளாறவே பொறுக்க ஒரு தம் போட்டுட்டு வெளிய வந்தேன். மாயா ஒரு கைல டீப்பாயும் இன்னொரு கைல ஹாட் பேக்குமா வந்து ஈஸி சேர் முன்னாடி வச்சா. நான் ரூம்ல இருக்கிற வாட்டர் ஜக்ல தண்ணி எடுத்துக்கிட்டு வந்து வச்சேன்.
எனக்கும் எங்கப்பாவுக்கும் பெரிசா அட்டாஸ்மென்டெல்லாம் கிடையாது. கம்பளி பூச்சி மாதிரி அடர்ந்த புருவம், வாத்தியார் ( எம்.ஜி.ஆருங்கண்ணா) மீசை மேல ஹிட்லர் மீசைய ஒட்டின மாதிரி ஒரு மீசை, எப்பயாச்சும் ஃபேமிலி பட்ஜெட் பத்தி அம்மா கூட பேசிக்கிட்டிருக்கிற சமயம் மூக்கை நுழைச்சு எதுனா சொல்லப்போனா "த பாரு நீங்க சின்ன பசங்க.. உங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம் உங்க வேலை படிக்கிறது போ போய் படி"ம்பாரு. மூனு மாசத்துக்கொருதரம் ஊர் வந்தா தங்கவேலு சலூன்ல தொள்ளிட்டு போயிருவாரு. இவரு 3 மாசத்துக்கு தேவையான சரக்கெல்லாம் வாங்கற வரை என் தலைய தேட்டை போட்ருவாரு தங்கவேலு. அவர் மேல அடிக்கிற மூக்குப்பொடி வாசம் , புர்ருனு இழுக்கிறதும், கைக்குட்டைய கயிறா திரிச்சு மூக்கை தீட்டறதும் , வீட்டுக்குள்ள வரப்பயே அம்மா "டே டே அப்பா வந்துட்டாங்க போய் படுங்க"ன்னு கத்திரிச்சு விடறதும், அவர் படிக்கிற சித்தர் அனுபோக வைத்தியம், மணி மந்திர வைத்திய சேகரம் ப்ராண்டு புத்தகங்களும் அவர்கிட்டே நெருங்க விட்டதில்லை.
தீபாவளிக்கு மட்டும் முன் தினமே பெரிய பார்சலா பட்டாசு வாங்கிட்டு வந்து சொத்து பங்கு போடற மாதிரி பங்கு போட்டு ஆளுக்கு ஒரு பைல போட்டு கொடுத்துருவாரு. அதை 4 அண்ணன் தம்பியும் கண் முன்னாடியே ஆணில மாட்டி வச்சுட்டு எப்படா விடியும்னு காத்துக்கிட்டிருப்பம்.
அவரை பொறுத்தவரை நான் ஸ்பெஷல் . 4ஆம் வகுப்பா 5ஆம் வகுப்பா ஞா இல்லே மூத்திர சந்துல எதிர்வீட்டு ரகுவோடவா யாரோட ஞா இல்லே பீடி பிடிச்சிட்டிருந்தத யாரோ சொல்டாங்க.
உடனே என்னை பூஜை ரூம்ல விட்டு வெளிய தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு போயிட்டாரு. செம காட்டு காட்ட ஆயுதந்தான் தேடப்போயிருக்காருன்னு நினைச்சேன். பூஜை ரூமுங்கறதால அடக்கிக்கிட்டேனே தவிர நிச்சயமா மூத்திரம் விட்டுருப்பன் அந்த அளவுக்கு முதுகெலும்புல குளிர், சில நிமிஷத்துல டோர் ஓப்பன் ஆகுது. அப்பா கையில ஒரு பண்டல் கணேஷ் பீடி, ஒரு பண்டல் தீப்பெட்டி.சரி .சரி மேட்டருக்கு வரேன்..
இந்த 23 வயசுக்கு ஒரு நாள் கூட அப்பாவ அவ்ளோ ஆராமா ,ரிலாக்ஸ்டா பார்த்ததே இல்லை.மாயா அவரை எழுப்ப போனா. நான் வேணாம்னு சைகை காட்டினேன்.
அந்த நேயர் ரேடியோல ஸ்டேஷன் மாத்திட்டாரு.. போல படக்குனு தெலுங்கு பாட்டு..
"மா இன்டிலோனா மஹலக்ஷ்மி நீவே
மா கண்ட வெலிகே க்ருஹ லக்ஷ்மி நீவே
நீ கன்ட தடினி நே சூட லேனு
கோரந்த பசுப்பு நீவடிகினாவு
நூரேள்ள பதுகு மாகிச்சினாவு
க்ஷணமொக்க ருணமை பெரிகிந்தி பந்தம்
தியாகால மயமை சம்சார பந்தம்
அப்பாவோட கடை கண்ல கண்ணீர் வழியுது. அதை துடைச்சிரனுங்கற இன்ஸ்டிக்ட்ல பாடி ரெஸ்பாண்ட் ஆனாப்ல இருக்கு. புறங்கையால கண்ணை துடைச்சிக்கிட்டு .."மாயா வாம்மா.. எப்படா வந்திங்க ..என்னம்மா நீ ஹாட் பேக்கையெல்லாம் தூக்கிக்கிட்டு நான் கீழே வந்து சாப்பிடமாட்டேனா"ன்னாரு.
மாயா, "இல்லே அங்கிள் என்னைக்கும் உங்களை நான் இப்படி பார்த்ததே பார்த்ததே கிடையாது.. உங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்னுதான் இங்கயே கொண்டுவந்துட்டன்.
"இன்னைக்கு எங்க கல்யாண நாளும்மா.. அவள் ஒரு வேளை காத்தோட வந்து பார்ப்பாளோ.. மாடில என்னை தேடுவாளோனு தோணுச்சு அதான் இப்படி வந்து சாஞ்சேன்"
'என்ன அங்கிள்! இன்னைக்கு உங்க மேரேஜ் அனிவர்சரின்னு எனக்கு தெரியவே தெரியாது.. என்ன முகேஷ்! நீயாச்சும் சொல்லலாமில்லயா..உனக்கு கூடவா ஞா வல்லே.. தூளா ஒரு பார்ட்டியே அரேஞ்ஜ் பண்ணியிருக்கலாமே"
மாயாவோட முகத்துல ஏதோ கார்ட்டூன் சீரியலை மிஸ் பண்ணிட்ட குட்டி பாப்பா மாதிரி ஒரு பரபரப்பு..
அப்பா லேசா சிரிச்சிக்கிட்டே " ஏம்மா டென்ஷனாகறே..எங்க கல்யாண நாளு எனக்கே ஞா இருந்ததுல்லம்மா அவள் இருக்கிற வரை. மனுஷன் ரொம்ப துரதிர்ஷ்ட சாலிம்மா எது அவனுக்கு அவெய்லபிலிட்டில இருக்கோ ,அது அவெய்லபிலிட்டில இருக்கிற வரை அதோட அருமையே அவனுக்கு தெரியறதில்லை."
"மாயா! உன் மதர் டங் தெலுங்கு தானே ரெண்டாவதா ஒரு பாட்டு வந்ததே அதுல உனக்கு என்னம்மா புரிஞ்சது ?"
"அப்பா! இவளை கேட்காதிங்க. இவள் இங்கிலீஷ் மீடியம் . அந்த படத்தை பதிமூனு தடவை பார்த்தவன் நான் சொல்றேன் ."
"தத்..உணர்வுகளுக்கும், மீடியம் ஆஃப் இன்ஸ்ட்ரக்ஷனுக்கும் சம்பந்தமில்லேடா. நீ சொல்லும்மா"
"அங்கிள் .. என் தாய் மொழிங்கறதாலயோ என்னவோ, முழுக்க புரிஞ்சிட்டதாலயோ என்னவோ அந்த பாட்டு எனக்கு பெரிசா தோணல.. முதல்ல வந்ததே தமிழ் பாட்டு அதான் அங்கிள்.. மனச என்னென்னவோ செய்துருச்சி"
"அக்கரைக்கு இக்கரை பச்சை.. சரி சொல்லும்மா"
"ஓராயிரம் பார்வையிலும் உன் பார்வையை நான் அறிவேன்ங்கறான். குரலை வேணம்னா ஐடென்டிஃபை பண்ணலாம். பார்வைய எப்படி ஐடெண்டிஃபை பண்ண முடியும். அதுலயும் அடுத்த வரிய பாருங்க "உன் காலடியோசையிலே உன் காதலை நான் அறிவேன்"ங்கறான். அப்படின்னா அந்த பொண்ணு இவனுக்கு பின்னாடியிருந்துதான் இவனை நோக்கி வந்திருக்கனும். அப்ப பார்வையும் பின்னாடியிருந்துதான் விழுந்திருக்கனும். மனிதனுக்கு நெற்றிக்கண் இருக்கிறதாவும், அதனோட மறுமுனை தலைக்கு பின் புறம் இருக்கிறதாவும் எங்கயோ படிச்சேன். அந்த இடத்துல வெளிச்சம் விழுந்தா அது லேசா சிலிர்த்துக்கறதாவும் சொல்றாங்க. சாதாரண கண்ணுக்கு பின்னாடியிருந்து பார்த்தா தெரியவே தெரியாது. நான் என்ன நினைக்கிறேன்னா.. அவன் எண்ணம் ஒரே எண்ணமா, எண்ணமெல்லாம் அவளாவே இருந்ததால அவனோட பிரக்ஞை எந்தவித சாதனையும் இல்லாமே அவனோட ஆக்னா சக்கரத்தை எட்டியிருக்கனும். அப்பத்தான் அந்த தேர்ட் ஐல சலனம் வரும். அப்படி வந்தாதான் தனக்கு பின்னாடி இருக்கிற காதலியோட பார்வைய அவன் உணர முடியும். "
நான் எழுந்து நின்னு கை தட்டினேன் . அப்பா லேசா கைய உயர்த்தி நிறுத்த சொல்லிட்டு மாயா நீ எங்கயோ படிச்சத வச்சு அனலைஸ் பண்ணி சொன்னே ..நான் என் அனுபவத்தை சொல்றேன். ஆத்தோரம் சுத்தி அலைஞ்சு துணி துவைக்கறவங்களுக்கெல்லாம் இட்லி வித்து படிச்சு, வெறுமனே என் ஸ்டஃப்ஃபை பத்தி என் க்ளாஸ் மெட் சிட்டி தன் கலெக்டர் அப்பாவுக்கு சொல்லி வேலை தேடி வந்ததாலயோ என்னவோ, என் மனைவி செட்டா குடும்பம் நடத்தி பட்ஜெட்ல இந்த மாசம் பத்து ரூபா மிச்சமாகுதுங்க. நீங்க அல்சர் பேஷண்டு வயித்துல எரிச்சல் வந்தப்ப உடனே எதையாச்சு போட்டு அதை அடக்கியாகனும்ங்கறதால கொஞ்சம் ஓமப்பொடி, கொஞ்சம் சீடை பண்ணி பாக் பண்ணிதரேன். ரூம்ல ஒன்னு, ஆஃபீஸ்ல உங்க மேசை ட்ராயர்ல ஒன்னு வச்சிருங்கன்னு பாசம் காட்டினதாலயோ என்னவோ எனக்கு பெரிய பிஸ்தானு நினைப்பு. அவங்க சைட்ல எல்லாரும் சவுண்ட் பார்ட்டிங்க. வெல்ல மண்டி காரவுக, இல்லே லாரி ஓனர்ஸ் இப்படி வேலூர் எம்.எல்.ஏ தேவராஜு இவளுக்கு பெரியப்பா பையனோ என்னமோனு நினைக்கிறேன். அவங்க பக்கத்து கல்யாணம் கில்யாணம்னு கிளம்பினா இவ பொம்பளைங்களோட சேர்ந்துருவா நான் சீட்டுக்கச்சேரிலயும் சேரமுடியாம, பாட்டுக்கச்சேரியையும் ரசிக்க முடியாம விதியேனு உட்கார்ந்துக்கிட்டிருப்பேன். அவங்க பக்கம்தானு இல்லே எங்க பக்கமும் அவள் தான் சென்டர் அட்ராக்ஷன் .அவள் மட்டும் போனா எங்க அவரு வரலியானு கேட்கவே மாட்டாங்க. நான் தான் மாவட்டம் மாவட்டமா பொட்டிய தூக்கிறவனாச்சே. தப்பி தவறி நான் மட்டும் போயிட்டன்னு வை கேட்கிறவங்களுக்கு பதில் சொல்லி மாளாது. அவளுக்கு நம்ம வீட்டுக்காரர் மிடில் க்ளாசாச்சே நம்ம சொந்தக்காரவுக எல்லாம் தங்கமும், வைரமுமா மின்னறவங்காச்சே.. யாராச்சு ஏதாச்சும் குண்டக்க மண்டக்கனு கேட்டு வச்சுருவாங்களோனு ஒரு பதைபதைப்பு இருக்கும்போல.அவள் எண்ணமெல்லாம் என்னையே சுத்தி வரும்போல. நான் "என்னடி என்னை இங்கே இடிச்சப்புளி மாதிரி உட்காரவச்சுட்டு நீ மகாராணியாட்டம் உங்காளுங்க கிட்டே குசலம் விசாரிச்சிட்டிருக்கயா" ன்னு மனசுல ஒரு ஓரமா நெனச்சா போதும் அது எப்படிதான் அவளுக்கு கம்யூனிக்கேட் ஆயிருமோ தெரியாது "என்னங்க கூப்டிங்களா?"ன்னு
அதே நிமிசம் வந்து நிற்பா . நான் பல தடவை டெஸ்ட் பண்ணியிருக்கேன் ஒருதடவை கூட மிஸ் ஆனதில்லை. இப்ப அவளையே மிஸ் பண்ணிட்டு அப்போ மிஸ் பண்ண ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நினைச்சு பார்த்துக்கிட்டிருக்கேன். கண்ணதாசனுக்கும் இதுமாதிரி அனுபவம் இருந்திருக்கனும் அதனாலதான்..
ஓராயிரம் பார்வையிலும் உன் பார்வையை நான் அறிவேன்"ன்னு எழுதியிருக்காரு. எண்ணத்தையே அறிய முடியும் போது, உணர முடியும் போது பார்வையையா அறிய முடியாது.. காலடி ஓசைல என்னடா படபடக்கிற புடவை முந்தாணை அசைவில கூட காதலை அறியலாம் ."
இந்த தடவை கைதட்டல் மாயாகிட்டேருந்து. "அங்கிள்! நான் சொல்றத நீங்க தப்பா புரிஞ்சிக்க கூடாது. உங்களை பார்த்ததும் உங்க அடர்த்தியான புருவம், காதுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிற கருத்த ரோமம் இதையெல்லாம் பார்த்துட்டு இவரு மிலிட்டரி மேன் மாதிரி இருக்காரு.. ஆனால் முகேஷ் கதை கவிதைனு விளையாடறானே எப்படி ? ஒரு வேளை அவங்கம்மா ஜீன்லருந்து வந்துருக்கும்னு நினச்சதுண்டு. ஆனா இன்னைக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன். உங்க பேச்சே கவிதை அங்கிள்.. சிம்ப்ளி சூப்பர்ப். "
"கதை,கவிதை இந்த இழவெல்லாம் எனக்கு தெரியாதும்மா ..எனக்குள்ள நான் உணர்ந்ததை சொல்றேன் அது என்னவாவோ இருந்தா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? முகேஷ்! இப்போ உன் டர்ன்.. என்னமோ 13 தடவை பார்த்தேன்னு முண்டா தட்டினியே அந்த தெலுங்கு பாட்டு என்ன சொல்லுது சொல்லு பார்ப்போம். "
"மேற்படி பாட்டுல முதல் மூணு லைன் கார்ப்பரேஷன் குழாய்ல வர்ர காத்து மாதிரி ..இல்லே ஒரு நல்ல கச்சேரிக்கு ஸ்ருதி கூட்டற மாதிரி வச்சிக்கலாம்.
மா இன்டிலோனா மஹலக்ஷ்மி நீவே
மா கண்ட வெலிகே க்ருஹ லக்ஷ்மி நீவே
நீ கன்ட தடினி நே சூட லேனு
எங்க வீட்டு மகாலட்சுமி, எங்க கண்ணுக்குள்ளவே ஒளிர்ர கிருகலட்சுமி உன் கண்ணில் ஈரத்தை என்னால பார்க்க முடியாதுங்கறதுதான் இந்த மூணு வரிக்கு அர்த்தம். அடுத்த வரில தான் வேட்டூரி தன் விஸ்வரூபத்தை காட்டறார்.
கோரந்த பசுபு நீவடிகினாவு.. நூரேள்ள பதுக்கு மா கிச்சினாவு
இதுக்கு, நகமத்தனை மஞ்சள் துண்டை நீ கேட்டே.. நூறு வருஷ பிழப்ப எங்களுக்கு கொடுத்தேன்னு அர்த்தம். மஞ்ச துண்டு சரி தாலிக்கு உதவும். கேட்டா கொடுத்தார். அவள் இவருக்கு எப்படி நூறு வருஷ வாழ்க்கைய கொடுத்தானு ஒரு கேள்வி வரும். இவருக்கு 25 வயசுல கல்யாணமாச்சுனு வைங்க அம்பது வயசு வரை தான் இவரால ஆக்டிவா செயல்பட முடியும்.. அப்புறம் இவர் நடமாட்டம் குறைய ஆரம்பிச்சுரும். இவரோட ப்ரசன்ஸ் சொசைட்டியிலயும், சொந்தக்காரவுக மத்திலயும் குறைஞ்சுரும்.ஆனால் மனைவி ஒரு வாரிசை பெத்து கைல தரா. இவர் ஒடுங்கி போனப்ப வாரிசு ஃபுல் வேக்குவத்தோட இருப்பான். பலானவன் புள்ளையா .. வெரி குட் வெரி குட்னுவாங்க. இது ஒரு 25 வருஷம் ஓடும். அதுக்கப்புறம் புள்ளையும் ஒடுங்க ஆரம்பிச்சுருவான். அப்போ பேரன் வரான். அடடே பலானவர் பேரனா அதான் இந்த மிடுக்குன்னு சொசைட்டில பேசுவாங்க. கூட்டி கழிச்சு பாருங்க நூறுவரும்
க்ஷணமொக்க ருணமை பெரிகிந்தி பந்தம்
க்ஷணமொரு ருணமாக பந்தம் வளர்ந்தது. ருணம்னா கடன்னு டைரக்ட் மீனிங்க் எடுக்க கூடாது. கடன்னா இன்னைக்கோ நாளைக்கோ தீர்த்துர முடிஞ்சது கடன். பல பிறவிகளுக்கும் தொடர்ரது ருணம். ருணானு பந்த ரூபேணா பசு,பத்னி,சுதாலயானு ஒரு ஸ்லோகம் கூட இருக்குனு நினைக்கிறேன். அவளோட வாழ்ந்த ஒவ்வொரு க்ஷணமும் பல பிறவிகளுக்கும் தொடர்ர ருணமா மாறி பந்தம் வளர்ந்துச்சுங்கறார் வேட்டூரி.
நான் கூட பெண்டாட்டிகளை பத்தி நிறைய ஜோக் (ப)(அ)டிச்சிருக்கேன், ரசிச்சிருக்கேன்.. ஆனால் ஒரு பெண்ணோட ஸ்தானத்துல இருந்து யோசிச்சு பார்த்தாதான் அவள் புகுந்த வீட்டுக்கு வந்து வாழற ஒவ்வொரு க்ஷணமும் அந்த பெண்ணோட கணவனை ருணத்துலதான் தள்ளுது. ஃபர்ஸ்ட் அஃபால் அவள் தன் ரத்த பந்தங்களையெல்லாம் விட்டுட்டு எந்த வித ரத்தபந்தமும் இல்லாத இவனை தன் வாழ்வின் மையப்புள்ளியா ஏத்துக்கறா. அவிக வீட்ல இருந்த பழக்க,வழக்கம், பேச்சு,தோரணை இப்படி ஒன்னென்ன சகலத்தையும் விட்டுட்டு இவனுக்கு இணக்கமா மாறிட்டே வர்ரா.
மனிதன் ஒரு மிருகம். அதிலயும் ஆண் 100 சதவீதம் மிருகம். திருமணவாழ்க்கைங்கறதே அவன் இயல்புக்கும், மனோதத்துவத்துக்கும் விரோதமான ஒன்னு. இளமைல அவள் உடம்பை திறந்து பார்க்கிறதுலயே குறியா வாழ்ந்துர்ரான்அவள் மனச திறந்து பார்க்க ஒரு தடவை கூட முயற்சி பண்றதில்லை. இவன் கூப்பிட்டப்ப அவள் வந்துரனும். அவளுக்கு வயித்து வலியா, இல்லே அண்ணன் செத்துப்போன மாதிரி விடியல்ல கனவு வந்ததா இதெல்லாம் அவனுக்கு டோண்ட் கேர்.
இவன் அடையவே முடியாம இருந்த செக்ஸ் எந்த வித கில்ட்டியுமில்லாம, இன்டரப்ஷன் இல்லாம, பாதுகாப்பா கிடைக்க ஆரம்பிச்ச உடனே அதுவரை திசை தெரியாம தடுமாறிக்கிட்டிருந்தவன் இது இவ்ளதான இனியென்னன்னு துடிக்கிறான். எல்லாத்தயும் ஜெயிச்சுரனும்னு ஒரு தகிப்பு.எல்லாமே தான் நினைச்ச மாதிரி ந்டக்கனும்னு ஒரு ஃபீலிங். சர்க்கரை போட மறந்துட்டானு ஃப்ரெண்ட்ஸ் ,உறவுக்காரங்க முன்னாடியே காபிய மூஞ்சில வீசியெறிஞ்சிருப்பான். குழம்புல உப்பு கம்மியா போட்டதுக்கு தட்டை தூக்கியடிச்சிருக்கலாம். இளமை வேகத்துல இதையெல்லாம் இவன் நடத்தறப்ப அவளும் இளமைலதான் இருக்கா. இவனுக்குள்ள வர்ர மாற்றங்கள் அவளுக்குள்ளவும் வரலாம். ஆனால் அவள் எதையும் வெளிய காட்டறதில்லை. எந்த மனைவியும் யோவ் வாய்யா படுத்துக்கலாம்னு கூப்பிடறதில்லை. இவ்ளதானான்னும் சொல்றதில்லை. நீங்களே சொல்லியிருக்கிங்க ஒரே ராத்திரில 23 ஆர்காஸம்னு.
நடுத்தர வயசுல குழந்தை, குட்டி, சொந்த வீடு, எதிர்காலம்னு டைவர்ட் ஆகறான். இவன் அவளை வெறும் துளையா பயன் படுத்திட்டு எதிர்காலமும்,முதுமையும், இன்செக்யூரிட்டியும் பயப்படுத்த ச்சே இவளால என் இளமையெல்லாம் வீணாப்போயிருச்சேனு மனசுல ஒரு ஓரமாவாச்சும் எரிச்சலடையறான் அந்த எரிச்சலை அவள் மேல காட்டவும் செய்யறான்.
வயசான காலத்துல ஆண்மை தந்த திமிர், அகங்காரம் எல்லாம் ஒழிஞ்சு போய் தனக்குள்ள எக்காலத்துலயும் வெளிப்படாத பெண்மை,மென்மை வெளிப்பட்டு மனைவிக்கு என்னென்னவோ செய்துரனும்னு நினைக்கிறப்ப அவள் போய் சேர்ந்துர்ரா இல்லே இவனே மொக்கையாகி புள்ளைங்க கருணைல வாழ வேண்டியவனாயிர்ரான். இதைதான் வேட்டூரி ரத்தின சுருக்கமா க்ஷணமொக்க ருணமைன்னு சொல்ட்டாரு. அதுக்கப்புறம் "தியாகால மயமை சம்சார பந்தம்"னு கன்ஃபர்ம பண்றாரு. அவள் விட்டுக்கொடுத்துக்கிட்டே போறாள். இவன் ருணப்பட்டுக்கிட்டே போறான். இது அவளோட தியாகம் தானே.."
அப்பா ஈஸி சேர்ல இருந்து எழுந்து" டே.. இங்கே வாடான்னாரு.." என்னடா இது நாம ஏதும் வில்லங்கமாவோ, விவகரமாவோ கூட பேசலயே .. சின்ன வயசுல கூட கை நீட்டி அடிச்சதில்லை.. இப்ப ஏன் கூப்பிடறாரு..மாயா முன்னாடி எதுனா மொக்கை பண்ணிருவாரோனு லேசா பம்மினேன். " டேய் முகேஷ் ! வாடான்னேன்"ன்னாரு தகரத்துல ஆணியால கோடு கிழிச்ச மாதிரி. மாயாவ பரிதாபமா பார்த்துக்கிட்டே போனேன். என் தலை மேல கைய வச்சு.. கொஞ்ச நேரம் தலை முடிய அளைஞ்சுட்டு .. "மகனே நான் மட்டும் போஜ ராஜனா இருந்திருந்தா அட்சர லட்சம் கொடுத்திருப்பேண்டா"ன்னாரு.
நானு "யப்போவ்..! அட்சரத்துக்கு லட்சமெல்லாம் வேணாம். டோட்டலா ஒரு 6 லட்சம் குடு. ஓனர் ரெண்டு டூர் வண்டியையும் வித்துர போறேன்.. வேணம்னா நீயே வாங்கிக்கன்னு சொல்ட்டாரு. வண்டிங்க மேல இருக்கிற ஃபைனான்ஸை வேணம்னா நாங்களே கட்டிக்கிறோம்னு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கலாம்".னேன்.
அப்பா .. " என்னடா இவ்ள நேரம் பெரியமனுஷத்தனமா பேசிட்டானேன்னு சந்தோஷப்பட்டேன். ஆரம்பிச்சுட்டயா .. ஆறு லட்சம்னா என்ன ஆறு நூறா,ஆறு ஆயிரமா.. ஆறு லட்சம்டா.. என் நிலைமை உனக்குதெரியும்..
//அதனால அவள் பிறக்கும்போதே தாயா பிறக்கறா. என்ன ஒரு சோகம்னா சைல்ட் ஹுட்ல இருக்கிற பிரக்ஞை டீன் ஏஜ்ல மங்கி போயிருது. அதனால நிறைய பெண்கள் தங்களுக்குள்ள இருக்கிற தாயை,தாய்மை ஏக்கத்தை உணர்ரதில்லே.. ஆண்களும் இப்படித்தான் இருக்காங்க. தனக்கு தேவை ஒரு தாய்ங்கற ரியலைசேஷன் சாமான்யத்துல வர்ரதில்லை. பெண்ணோட முலை அவனை கவர காரணம் தாய்மைக்கான ஏக்கம்.. இவ்ள ஏன் உடலுறவே கருப்பைக்குள்ள மீண்டும் புகுந்துக்கறதுக்கான முயற்சின்னு சைக்காலஜி சொல்லுது//
ReplyDeleteகலக்குங்க சித்தூர் ஓஷோ ...............இதெல்லம் எப்படி 22 வயசிலேயே தெரியும்? என்னதான் அனுபவம் இருந்தாலும் ஓஷோ மாதிரி ஒரு விழிப்புணர்வு பெற்ற மனிதர் தான் இதை உணர்ந்து சொல்ல முடியும் .......என்ன 22 வயசிலேயே ஓஷோ புக் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிடிங்களா தல?.
//திருமணவாழ்க்கைங்கறதே அவன் இயல்புக்கும், மனோதத்துவத்துக்கும் விரோதமான ஒன்னு//
ஆமாம் தல ..........