Thursday, March 11, 2010

உனக்கு 22 எனக்கு 32 : தொடர்

முன் கதை சுருக்கம்:
 நான் சமீபத்துல காலேஜ் முடிச்சு (படிப்பை இல்லிங்கண்ணா) அப்பாவோட ஃப்ரெண்டுக்கு சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸை பார்த்துக்கிட்டிருந்தேன். பேய்க்கு வேலை கொடுத்த கணக்கா வேலை கொடுக்கவே கச்சா முச்சானு ஒர்க் அவுட் பண்ணேன் .ஓனரோட ரெண்டு பஸ்ஸும் தொடர்ச்சியா ரோட்ல இருக்கிறாப்ல பண்ணேன். என்ன நானே வெளியவும் சுத்தி கணக்கு,வழக்குன்னு உள்வேலையும் பார்க்க வேண்டி வந்ததால லேசா திணற,  ஓனர் மாயானு ஒரு பொண்ணை எனக்கு உதவியா அப்பாயிண்ட் பண்ணார்.அவள் என்னைவிட பத்துவயசு மூத்தவ. என்னோட துருதுருப்பு அவளையும்,அவளோட மெச்சூரிட்டி என்னையும் கவர கொஞ்சம் கொஞ்சமா நெருங்கினோம். ஒரு நாள் அவள் ரூமுக்கு போனா பூச்சி மருந்து குடிச்சு மயங்கி கிடக்கா. எப்படியோ காப்பாத்தி அவளுக்காக வில்லேஜ்ல தர்ம அடி வாங்க நெருக்கம் இன்னம் கொஞ்சம் அதிகமாச்சு. ஓனர் சம்சாரத்துக்கு ஆப்பரேஷன். மெட்ராஸ் அப்போலோல மாயா தான் நாலு நாள் இருந்து எல்லாத்தயும் கவனிச்சுக்கிட்டா. ஓனர் மாயாவ பத்தி ஆஹா ஓஹோன்னு புகழ எங்கப்பா அந்த பொண்ணு ஏண்டா தனியா ரூம் எடுத்துக்கிட்டு அவஸ்தை படனும் . இதுவும் பொம்பளையில்லாம நாறிக்கிட்டிருக்கிற வீடுதானே தெரு ரூமை ஒழிச்சு கொடுத்தரலாம் இங்கயே தங்கிக்கட்டும்னாரு. நான் மாயா வீட்டோட வந்துட்டா.ஸ்டுடியோ வச்சோம்.லோக்கல் பேப்பர் ஆரம்பிச்சோம். பாட்டிக்கு துடைல எலும்பு முறிவு.  பெரிய அண்ணன் ஹைதராபாத்லருந்து  டைஃபாய்டோட வீட்டுக்கு வந்தான். பாட்டிய பார்த்துக்க நர்ஸ போட்டோம். சமையலுக்கு ஒரு அய்யரம்மாவ போட்டோம். அப்பா, சின்ன அண்ணன் ஸ்டுடியோ, தம்பி காலேஜு, மாயாவும் நானும் ட்ராவல்ஸு, ஃப்ரீ ஹவர்ஸுல நகர தூதாவுக்கு விளம்பரம் சேகரிக்கிறதுன்னு  பிசியா இருந்தப்ப பக்கத்து வீட்டு பரிமளத்தோட பெரிய அண்ணனுக்கு லவ்ஸுனு தெரியவந்தது. அப்ப அதையே முடிச்சுரலாம்னு சொல்ல, நானு "அவ லோலாயி.நம்மாளு ஒன்னும் லவ்ஸ் பண்ற கேரக்டரில்ல. எனக்கு கல்யாணம் பண்ணுனு உனக்கு க்ளூ கொடுக்கறான் அவ்ளதான்"ன்னேன். அப்பா " நீயே பேசு நீ ரைட்டுன்னா ரைட்டு.. லெஃப்டுன்னா லெஃப்டுன்னாரு"

பக்கத்து வீட்டு பரிமளத்துக்கு சின்ன டெஸ்ட் வச்சு அவளுக்கு தேவை வைபரேட்டர், அண்ணனுக்கு தேவை பெண்டாட்டினு முடிவு பண்ணி கல்யாணத்தை முடிச்சோம். மாயாவை வெறுப்பேத்த அந்த கல்யாணத்துக்கு வந்த அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் மகளை  சீண்டிக்கிட்டிருக்க மாயா "யுவார் டூ லேட் அவதான் உன் வருங்கால அண்ணி"ன்னு சொன்னாள். தீர விசாரிச்சா நிஜம் தான் தெரிஞ்சது. பெரிய அண்ணன் கல்யாணத்துலயே சின்ன அண்ணன் கல்யாணம் நிச்சயமாச்சு. அதையும் அடிச்சு விட்ட பிறகு நம்ம ட்ராவல்ஸ் ஓனர் ஒரு குண்டை தூக்கி போட்டார். எனக்கு ரொம்ப தடமாட்டமா இருக்கு எனக்கப்புறம் என் பையன் தொடர்ந்து நடத்துவான்ற நம்பிக்கை எனக்கில்லை.ரெண்டு ரூட் பஸ்ஸையும் விலை பேசிட்டேன் வித்துட்டேன். உன்னால முடியும்னா டூர் பஸ்ஸை நீயே வாங்கிக்க"ன்னிட்டார்.

மாயாவுக்கு சொன்னா "பேசாம வாங்கிரலாம்னா. "வாங்க வேண்டியது பஸ்ஸு கண்ணு ! உன்னை மாதிரி மிஸ்ஸு கிடையாது.. லகரங்கள் வேணம்"ன்னேன். மாயா, "சரி அப்பா என்ன சொல்றாரு பார்க்கலாம்"னா.

ராத்திரி எட்டுமணி வாக்குல வீட்டுக்கு போனோம் . அப்பா மாடில பால்கனி கிட்டே ஈஸி சேர்ல படுத்துக்கிட்டு எங்கயோ ரேடியோலருந்து வந்துக்கிட்டிருந்த தமிழ்  பாட்டை கேட்டுக்கிட்டிருந்தாரு. அதுக்குள்ள அந்த வானொலி நேயர் ஸ்டேஷன் மாத்திர தெலுங்கு பாட்டு வந்தது. அப்பா கடைக்கண்ல கண்ணீர்.

அந்த ரெண்டு பாட்டும் என்ன சொல்லுதுன்னாரு. பேச்சு மொத்தம் கணவன்,மனைவி உறவை பத்தியே சுத்தி சுத்தி வந்தது.  நான் பேசி முடிச்சதும் உன் பேச்சுக்கு அட்சர லட்சம் தரணும்டான்னாரு அப்பா.

நான் டூர் பஸ் வாங்க 6 லட்சம் தாப்பா போதும்னேன்.

.....................................................................................................................................................
இனி இந்த அத்யாயத்தை படிங்க:

அப்பா .. " என்னடா நம்ம புள்ள  இவ்ள நேரம் பெரியமனுஷத்தனமா பேசிட்டானேன்னு சந்தோஷப்பட்டேன். ஆரம்பிச்சுட்டயா .. ஆறு லட்சம்னா என்ன  ஆறு நூறா,ஆறு ஆயிரமா.. ஆறு லட்சம்டா.. என் நிலைமை உனக்குதெரியும்..சரி நான் நல்லா யோசிக்கனும் .. நாளைக்கு சொல்றேன் நீங்க போய் சாப்பிடுங்க"னிட்டாரு.

கீழே வந்து சாப்பிட்டோம். பாட்டிக்கு விஷயத்தை சொன்னேன். பாட்டி " நான் என்னடா செய்யறது நானே காலொடிஞ்சு கிடக்கேன்"னு அனுதாப ஓட்டுக்கு முயற்சி பண்ணாலும்

"டேய்! உனக்கு கனகராஜுலு தெரியுமில்லியா..அவன் தங்கச்சி கூட உன் கூட படிச்சாளேடா அலமேலுவோ என்னவோ பேரு"ன்னிட்டு ஆரம்பிச்சா..

"ஆமாம் பாட்டி.. டெயிலர் கடைல வேலை செய்துக்கிட்டிருந்தான்.அப்புறம் ஏதோ ப்ரொவிஷன் ஸ்டோர்ல வேலை செய்துக்கிட்டிருந்தான். அந்த ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ்காரன் பெண்டாட்டியோட ஓடி போயிட்டான்"

" மயிர ஓடிப்போனான். குத்து விளக்காட்டமா இருந்த அந்த குடித்தனக்காரியை மடக்கி கெடுத்து குட்டிச்சுவராக்கினதோட ஓடிப்போறதுக்கு (?) மின்ன நாளு நீ வீட்ல இருக்கிற  நகை பணம்லாம் எடுத்து என் கிட்டே  குடுத்துரு நான் பத்திரப்படுத்திர்ரன்.நாளைக்கு விடியறதுக்கு முன்னாடி  நீ ரயில்வே ஸ்டேஷன் வந்துரு ரெண்டு பேரும் ஓடிப்போயிரலாம்னு சொல்லியிருக்கான். அந்த பேக்கும் ( Bayk) மொத்தத்தையும் வாரி அவன் கிட்டே  கொடுத்துருச்சி. இந்த போடுகாலு ( ஒரு திட்டுங்கண்ணா!) இன்னா பண்ணான் தெரியுமா ..ஸ்டேஷனுக்கும் போவல.. ஒரு மண்ணுக்கும் போவல. அந்த பொம்பள இருட்டோட கைல சூட் கேசை பிடிச்சிக்கிட்டு ஸ்டேஷனுக்கு போய் ரயில் போற வரைக்கும் காத்திருந்திருக்கா. இந்த பேமானி போகவே காணோம்.

அந்த பொம்பள  மொக்க கொலைஞ்சி வீட்டுக்கு திரும்பி வந்திருக்கு.இந்த கனகராஜுலு மட்டும் ஒன்னும் தெரியாத பப்பா (எழுத்து பிழை இல்லிங்கண்ணா) கணக்கா சாதாரணமா வேலைக்கு  போற மாதிரி கடைக்கு போயிருக்கான். ஒரு பொம்பள அது மாதிரி ஓடிப்போயி திரும்பி வந்தா என்ன நடக்கும்? அவளை அவ புருஷனும், மச்சினனுகளும் அடிச்சி நாசம் பண்ணியிருக்காங்க. அவள்  அடி தாங்க முடியாம க.ராஜுலுவோட பேரை சொல்லிட்டா போல. போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா மானம் பூடுமேன்னு க.ராஜுலுவை  கோடவுன்ல வச்சு பணம், நகை எங்கடான்னு பத்து நாளு விரைக்கொட்டைய பிசைஞ்சிருக்காங்க. இந்த கல்லுளி மங்கன் சோறு தண்ணியில்லாம ,அடி உதை  வாங்கியும் வாயை திறக்கல. கடைகாரனுக்கே வெறுத்து போயி வெளிய துரத்திட்டான்.

அண்டை ஊட்டு நெய்யே என் பெண்டாட்டி கையேனு பத்து நாள் கழிச்சு இவன் தனியே ஒரு கடைய தொறந்தான்."

பாட்டி சொல்லிட்டே போக மாயாமுகத்துல உணர்வுகளின் ரங்கோலி.. நானு "என்னபாட்டி....,  மாயா முன்னாடி போய் இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லிக்கிட்டு.. நான் கேட்டதுக்கும் நீ சொல்றதுக்கும் எதுனா லிங்க் இருக்குதா?"ன்னு எரிஞ்சு விழுந்தேன்.

"என்னடா ஆம்பளைக வண்டவாளம் பூரா கெய்வி வெளிய போட்டு உடைக்கிறாளேனு பதைப்பா. நீ கேட்ட விவரம் கடைசில வரும். உனக்கு விவரம் வேணும்னா அதுவரைக்கும்  மூடிகினு கேளு"

"சரி சொல்லி தொலை.."

"கஷ்டப்பட்ட பணமா இருந்தா பரவாயில்லை. ச்சும்மா லவட்டிக்கினு வந்த பணம் தானே கண்டவனுக்கும் கடன் கொடுத்து கிராக்கி பிக் அப் பண்ணியிருக்கான். இந்த கவர்மென்டு உத்யோகஸ்தனுங்க தான் அவன் குறி." என்ன சார் இது .. நூறு இரு நூறுக்கு சரக்கு வாங்கிகினு கணக்கு வழக்குன்னிக்கினு ஒரு தாட்டியா வாங்கிக்கோ நீ எங்க போப்போறே - னு உசுப்பேத்தி உட்றது. அவனுக இஷ்டத்துக்கு வாங்கி கொண்டாடறது. ஒரு குடித்தனம் பண்ற  பொம்பள ஆயிரத்துலயும் சோறு ஆக்கலாம், பத்தாயிரம் வந்தா வேணான்ற போறாளா. இப்படி மளிகை சாமான் பட்ஜெட்டை இஷ்டத்துக்கு ஏத்திவிட்டு அவன் மாசக்கணக்கை முடிக்க திணர்ரப்ப .. நீ ஏன் சார் இப்படி  அவஸ்தை படனும். கார்மென்ட்ல ஒரு லோனை போடு லம்சமா ஒரு அமவுண்டை நம்ம கிட்டே கொடுத்து வச்சிரு.வட்டிக்கு பதில்  மாசமானா மளிகை சாமான் வீட்டுக்கு வந்து  சேர்ந்துரும்னு கிளப்பி விட்டு ஊர் பணத்தையெல்லாம் வாங்கி வச்சிக்கிட்டு , கம்பெனி காரன், அரிசி மண்டிகாரனுக்கு ,டீலருங்களுக்கு பணம் கட்டாம எகறடிச்சிக்கிட்டு ஊர்ல இருக்கிற வீட்டையெல்லாம் வாங்கி குவிக்கிறானாம். அப்புறம் அதை டவுன் பேங்க்ல அடகு வச்சு பணம் புரட்டறதாம். "

"பாட்டி என்ன சொல்றே நீ? அப்பாவ... வீட்டை...கனகராஜுலுவுக்கு விக்க சொல்றியா? கிழிஞ்சுது போ.. கால்ல இருக்கிறத கழட்டிக்கப்போறான் உன் புள்ளை"

" ஆங் கழட்டுவான் கழட்டுவான்.. அவனுக்கென்னாடா  தெரியும் நானும், உங்கம்மாவும் இல்லாம இருந்திருந்தா அவன் பொழப்பே சிரிச்சி போயிருக்கும் ஏதோ நாங்கன்ன வாசி இவ்ள தூரம் தள்ளிக்கினு வந்தோம்.. நானோ, உன் அம்மாவோ கொஞ்சம் துபாரா பண்ணியிருந்தாகூட அவன் மானம் கப்பலேறியிருக்கும். இன்னைக்கு இந்த வீடு இப்படி நிக்கறதுக்கு காரணமே நாங்கதான். முந்தா நாள் கனகராஜுலு நம்ம வீட்டுக்கு வந்தான்.

நமக்கு வடக்கால பரிமளம் வீடும் பேசி முடிச்சுட்டானாம். தெற்கால மைதானத்தயும் பேசி முடிச்சாச்சாம். "நீங்களும் யோசனை பண்ணி நல்ல முடிவா சொல்லுங்க. உங்களுக்கு வீட்டை  விக்கனுங்கற அவசியம் கிடயாதுன்னு தெரியும் . அதனால எனக்கு  துர்கா காலனில இதே அளவுல 6 லட்ச ரூபா பெறுமானமுள்ள  வீடு ஒன்னு இருக்கு அதை உங்க பேருக்கு  ரெஜிஸ்டர் பண்ணி தரேன்.கையில 7 லட்ச ரூபா கேஷும் தரேன். ரிட்டையர்ட் லைஃபுக்கு நிம்மதியான இடம். நல்ல தண்ணி , நல்ல காத்து" அது இதுன்னு  அளந்துவிட்டுட்டு போனான்.

உங்கப்பன் கதைதான் தெரியுமே யோசனை பண்ணி சொல்லி அனுப்பறேன்னு கழட்டி விட்டுட்டான்.அவன் புதுப்பணக்காரன்.அதுலயும் ச்சும்மா வந்த பணம்.அவன் குறி வச்சுட்டான்.  நாம  நம்ம வீட்டை விக்கவே முடியாதுன்னுட்டாலும்  நம்மை இங்கருந்து கிளப்பத்தான் பார்ப்பான். எனக்கும் இந்த இடம்  வெறுத்துப்போச்சு. உங்கம்மா இருந்தவரை அவளை அத செய்யல இதை செய்யல்லனு உடையல் விட்டுக்கிட்டிருந்தேன். இப்பத்தான் தெரியுது ஜீவனே இல்லாத வஸ்துவுக்கு கூட ஜீவனை கொடுக்க சில ஜீவனுகளாலதான் முடியும்னு.. அவள் நடமாடிக்கிட்டிருந்த வீடு இதில்லடா.. அது அவளோட போயிருச்சு. உங்கப்பன் மனசுல கூட இதான் ஓடிக்கிட்டிருக்கும்னு நினைக்கிறேன். வித்து தொலைச்சிரட்டுமே. கைல கிடைக்கிற காச போட்டு அந்த டூர் பஸ்ஸுங்களை வாங்கி போடு.. எப்படியும் அந்த யாவாரத்துல உதை பட்டு கதை பாடியிருக்கே.  அதிர்ஷ்டம் கூடி வந்தா இதை விட பெரிசா கட்றது."

பாட்டி சொல்ல சொல்ல மனசுல நம்பிக்கை ஜாஸ்தியாச்சு. மறு வீடுன்னு மாமியார் வீட்டுக்கு போயிருந்த சின்ன  அண்ணன் பெண்டாட்டியோட வந்தான்.அப்பா ஹைதாராபாத்ல இருக்கிற பெரியவனுக்கும் தந்தி கொடுத்து வரவச்சார்.

தம்பி,,மாயா எல்லாரும் பெரிய ஹால்ல  டைனிங்க் டேபிளை சுத்தி உடகார்ந்திருக்க, பாட்டி கிழக்கு டு மேற்கா வீட்டு நீளத்துக்கு போற பேசேஜ்ல போட்டுக்கிடக்கிற சோஃபால உட்கார்ந்திருக்க அப்பா பேச்சை ஆரம்பிச்சாரு.நிலைமைய சுருக்கமா சொன்னாரு.

"வீட்டை விக்கறதா முடிவு பண்ணிட்டேன். அவன் டோட்டலா 13 ஆஃபர் பண்றான் . இதுல 6 லட்சம் வீடா தரேங்கறான் 7 லட்சம் கேஷா தரேன்றான். உங்கம்மா கேன்சர் வந்து அவதிப்பட்டப்ப நான் செலவு பண்ண  ஒவ்வொரு பைசாவும் ரீ எம்பர்ஸ்மென்ட் மூலமா அப்படியே திரும்பி வந்துருச்சி. அந்த பணத்தை நான் இதுவரை தொடலை. அது ஒரு லட்ச ரூபா வரைக்கும் பேங்க்ல தூங்குது. உங்கம்மா தன் தாய் வீட்ல இருந்து கொண்டுவந்த நகை,நட்டுனு பார்த்தா அது ஒரு லட்சம் தேறும். "

அப்பா சொல்லிக்கிட்டே வர மாயா, "அங்கிள் என் அப்பா என் கல்யாண செலவுக்காக என் பேர்ல போட்டு வச்சிருக்கிற ஃபிக்ஸட் டெப்பாசிட் மட்டுமே 4 லட்சத்துக்கு இருக்கு"ன்னா. அப்பா," மாயா நீயும் இந்த குடும்பத்துல ஒரு மெம்பர்தான் ,ஆனால் பண விஷயத்துல இல்லை.  நான் சொல்றத கேட்டுக்கிட்டே வா உன் அபிப்ராயத்தை சொல்லு போதும்."னிட்டாரு .

தொடர்ந்து பேச ஆரம்பிச்சாரு. உடனே பெரிய அண்ணன்" அப்பா! ஒரு நிமிஷம்"னான். அப்பா , "என் ....னடா" ன்னாரு எரிச்சலா. எனக்கு இந்த ஷேர் ஜாயிண்ட், பஸ்ஸு வாங்கறது  இதெல்லாம் தேவையில்லை. எனக்கு உண்டானதென்னவோ அதை கேஷா கொடுத்துரு."ன்னான்

கொஞ்சமா அப்செட்டான அப்பா மறுபடி ஏதோ பேசப்போக சின்ன அண்ணன் " யப்பா எனக்கு என் மாமனாரே ஹார்ட் வேர்ஸ் கடை போட்டுத்தர்ரேன்னிட்டாரு .. எனக்கும் கேஷாவே செட்டில் பண்ணிடு"ன்னான்.

அப்பா கடுப்பாயிட்டாரு.. நான் அப்பாவ பார்த்து ச்சும்மா டெம்ப்ட் ஆகாதப்பான்னு கண்ண காட்டினேன் .அவரு " பார்ரா முகேஷூ! நான் என்ன பாகபிரிவினை பத்தியா பேசிக்கிட்டிருக்கேன். கேஷா கொடு செட்டில் பண்ணுங்கறானுங்க சரி அதுவும் இந்த சிட்டிங்லயே ஆயிரட்டும். உன் தம்பி என்ன சொல்றான் கேளு.."ன்னாரு.

தம்பி, "அப்பா இந்த வருஷம் என் படிப்பு முடியுது. நானும் என் வழிய பார்த்துக்கறேன்.. அதுக்குள்ள எனக்கேன் இல்லாத பொல்லாத கமிட்மென்டெல்லாம். எனக்குண்டானதென்னவோ அதை அப்படியே ரிசர்வ்ல வை. கல்யாணத்துக்கு அப்புறம் செட்டில் பண்ணிரு."ன்னான். அப்பா வெறுத்து போயிட்டார்.

அப்புறம் விழுப்புரமெல்லாம் எதுக்கு ? உனக்கும் இன்ஸ்டன்டா செட்டில் பண்ணிர்ரன். போய் படுங்கன்னிட்டு எந்திரிச்சிட்டார்,

 மறு நாள் கனகராஜுலுவை பார்த்து வீடு விக்க சம்மதம்னு சொல்ட்டு வரச்சொன்னாரு. சொல்ட்டு வந்தேன். வர்ர திங்க கிழமையே ரெஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம்னான் கனகராஜுலு.


திங்கள் கிழமை காத்தால பத்து மணிக்கெல்லாம் எல்லாரும் ரெஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் போனோம். துர்கா காலனி வீட்டை அப்பா தன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கிட்டார். கனகராஜுலு 7 லட்சம் கேஷை ரெஜிஸ்ட்ரார் ஆஃபீஸ்ல வச்சே செட்டில் பண்ணான். அப்பா மஞ்சள் பைல இருந்து அம்பாதியிரம் எடுத்து மூணு ப்ரதர்ஸையும் கூப்டு ஆளுக்கு ரெண்டரை லட்சம் அவிக கைல கொடுத்து விடுதலை பத்திரம் வாங்கிட்டார்.  அவிக மூணு பேரும் ஒரே ஆட்டோல ஏறிப்போக நான், மாயா, அப்பா மட்டும் மிஞ்சினோம்.  மணி மூணு. அப்பா டேய் என்னடா மச மசன்னு நின்னுக்கிட்டு முதல்ல சுமாரான ஓட்டலா பாரு. கைய சுத்தமா கழுவிட்டு சாப்பிடனும்"னாரு. சாப்பிட்டோம். ஆட்டோவ பிடிச்சு வீடு வந்தோம். அப்பா நான் கொஞ்சம் படுக்கனும்டா அசதியா இருக்குன்னார்.

மாயாவும் நானும் அவள் ஸ்டுடியோ, நான் ட்ராவல்ஸ் ஆஃபீசுன்னு போய் ரொட்டீன் வேலைகளை பார்த்துக்கிட்டு  ராத்திரி 7க்கெல்லாம் க்ளோஸ் பண்ணிக்கிட்டு வீடு வந்தோம். அப்பா பூஜைல இருந்தார். நாங்க ரெஃப்ரெஷ் ஆகி பாட்டிக்கிட்ட வர பாட்டி , "டேய் பெரியவனும், சின்னவனும் என்ன பண்ணானுங்க தெரியுமா?"ன்னு நீட்டி முழக்கினாள்.

எனக்கா பயங்கர கடுப்பு.." என்ன பாட்டி நீ வேற சொதப்புற போட்டு உடை"ன்னேன். "ரெண்டு பேரும்  பெண்டாட்டிகளோட ஊருக்கு கிளம்பிட்டானுங்கடா.. அப்பன் காரன் தூங்கறானே எழுந்த பிறகு சொல்ட்டு போலான்னு கூட இல்லாம சாவுவீட்டுக்கு வந்தவனுக மாதிரி கிளம்பிட்டானுங்கடா"ன்னாள். எனக்கே ஒரு மாதிரி ஆயிருச்சு.
அப்பா பூஜை ரூம்ல இருந்து வெளிய வந்தார்.

"ஏண்டா அதுக்குள்ள வன்டிங்க.. எனக்குதான் அசதி.. உங்களுக்கென்னா?"
'இல்லப்பா நீ ஹர்ட் ஆன மாதிரி இருந்தது. ச்சும்மா போட்டு உளப்பிக்க போறேனு சீக்கிரம் வந்துட்டம்"
"இதுல உளப்பிக்க என்னடா இருக்கு. அதான் பட்டு கத்தரிச்ச மாதிரி கத்திரிச்சாச்சே.. சரி நம்ப கதைய  எப்படி பண்ணலாம் சொல்லு?"
"அப்பா ..கடன் காரனுக்கு செட்டில் பண்ற மாதிரி அம்பதாயிரத்த கூட அங்கயே செட்டில் பண்ணனுமாப்பா..ஆமா அவ்ளோ பணம் ஏது?"
" அட போடா போக்கத்தவனே .. அவனுக வாய்ல வந்த வார்த்தை என்ன - செட்டில் பண்ணு - அதான் செட்டில் பண்ணிட்டேன். நான் தான் ஏற்கெனவே சொன்னேனே.. அவள் நகைய வித்தேன் ஒரு லட்சம் வந்தது.  பேங்க்ல இருந்த ரீ எம்பர்ஸ்மென்ட் பணத்தையும் ட்ரா பண்ணேன் அது ஒரு லட்சம் வந்தது. அவனுகளுக்கு அம்பதாயிரம் போக ஒன்னரை லட்சம்தான் கேஷ் இருக்கு. இதை செட்டியார்க்கு அட்வான்ஸ் பண்ணிரு. துர்கா காலனி வீட்டை டவுன் பேங்க்ல ப்ளெட்ஜ் பண்ணுவம் 6 லட்ச ரூபா வீட்டுக்கு ஒரு நாலரை லட்சம் தரமாட்டானா.."

எனக்கு ஒரே குழப்பம். "ஏதோ ஃபீல்டு பழகிப்போச்சே, என்னதான் ஓனர்னு ஒருத்தர் இருந்தாலும் நாமே ஓனர் மாதிரி இருந்து பழகிட்டமே வாங்கினா என்னனு நினைச்சதுக்கு ஏதோ சீட்டு கட்டு மாளிகை மாதிரியாச்சும் இருந்த குடும்பம் கலைஞ்சு போச்சு. வாழ் நாள்ள கடனையே அறியாத அப்பா கடன் வாங்கறேங்கறாரு.இதெல்லாம் நல்லதுக்கா.. இல்லே எதிர்காலத்துல வில்லங்கம் வருமா."ன்னு என்னென்னவோ யோசனைகள்.

மாயாவை பார்த்தேன். அவள் முகத்துல மாத்திரம் சிந்தனைகள்  மின்னலடிச்சிட்டிருந்தது. 'அங்கிள்!  நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்கமாடிங்களே"ன்னா.

அப்பா நெத்திய சுருக்கி பார்க்க " டவுன் பேங்க்ல அடகு வைக்கிறேங்கறிங்களே அதுக்கு பதிலா அதே வட்டிக்கு  நாலரை லட்ச ரூபா நான் கடன் தரேன்பா"ன்னா மாயா.

அப்பா "மாயா! எந்த மானமுள்ள  அப்பனும் பெத்த புள்ள கிட்ட,அவனா கொடுத்தா கூட  பத்து ரூபா கை நீட்டி வாங்க கூச்சப்படுவான். நீ என் மகள். உன் கிட்டே நான் எப்படி .."ன்னு தடுமாறினார்.

மாயா "அங்கிள்! நான் ச்சும்மா கொடுக்கிறாப்ல இருந்தாதான் அப்படியெல்லாம் யோசிக்கனும். நான் வட்டி வாங்கிக்கறேன் அங்கிள்"னா .

"சரிம்மா .. நான் என் பென்ஷன்ல இருந்து கடன் வாங்க முடியும். மேக்சிமம் எவ்ள வாங்க முடியுமோ வாங்கறேன். அது மெட்டீரியலைஸ் ஆக  ஒரு மூனு மாசம் பிடிக்கலாம் . அதுவரை உன் இஷ்டப்படியே கடன் கொடு. நான் வட்டி தரேன்"

அடுத்து ஒரு மூனு மாசம் வரை வரிசையா சம்பவங்கள்.பாட்டிக்கு மோட்டர் பொருத்தின  வீல் சேர் ஒன்னு வாங்கினோம். துர்கா காலனி வீட்டை சுத்தி காம்பவுண்டுக்குள்ளவே வீல் சேர் நகர்ராப்ல சிமெண்ட்ல ஃப்ளோரிங்க் போட்டோம். வீட்டுக்குள்ளவும் வீல் சேர் தடையில்லாம நகர்ராப்ல சில ஆல்ட் ரேஷன்ஸ் செய்தோம். வீட்டுக்கு வெள்ளையடிச்சு  வீட்டுசாமானை எல்லாம் கொண்டு சேர்த்தோம்.   சமையலுக்குன்னு ஏற்பாடு செய்த அய்யரம்மாவ வீட்டோட இருந்துர ஏற்பாடு பண்ணோம்.செட்டியாருக்கு 6 லட்சம் சிங்கிள் பேமெண்டா கொடுத்து எல்லா நடைமுறைகளையும் சப்ஜாடா முடிச்சோம். ட்ராவல்ஸ் ஆஃபீஸ் இருந்தது வாடகை கட்டிடம் தான். அதனால அதையும் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கிற ஸ்டுடியோவுக்கே ஷிஃப்ட் பண்ணிக்கிட்டோம். இத்தனை களேபரத்துலயும் லோக்கல் பேப்பரை கேப் விடாம கொண்டு வந்தோம்.

தம்பி ஏதோ விருந்தாளி மாதிரி வந்து போய்க்கிட்டிருந்தான். ஒரு நாள் ரயில்வேஸ்ல வேலை கிடைச்சிருக்குன்னான். "அப்பாவுக்கு ஆச்சரியம் .. எப்படிரா"ன்னார். தம்பி விரலை சுண்டி காட்டினான். "அடுத்து என்ன கல்யாணம் தானே நான் பார்க்கவா நீ எதுனா பார்த்து வச்சிருக்கயா"ன்னாரு அப்பா. அவன் நீயே பாருன்னான். பொண்ணு சுமாரா இருந்தாலும் அப்பங்காரன் சினிமா தியேட்டர் வச்சிருக்கான்னு அதையே செலக்ட் பண்ணான் தம்பி.

அப்பா "ஏண்டா முகேஷு.. உன் கதை என்ன.. மாயா தானே ஒரே முகூர்த்தத்ஹுல அடிச்சி விட்டுரலாம் நீ என்ன சொல்றே"ன்னாரு  நான் பாட்டிய முறைச்சேன். பாட்டி " என்ன முறைக்கிறத பாரு.. எனக்கின்னா உங்கப்பனுக்கு போட்டு குடுக்கறதே வேலையா. பூனை யாரும் பார்க்கல யாரும் பார்க்கலன்னு  கண்ணை மூடிக்கினு திருட்டுத்தனமா பால குடிக்குமாம். அந்த கதையா கூத்தடிச்சது நீ என்னை ஏண்டா மொறைக்கிறே"ன்னு நீட்டி முழக்கினா.

நான் ரெண்டு கையையும் தூக்கிட்டேன். மாயா வெட்கத்துல ரூமுக்கு ஓடிப்போயிட்டா.  நான் "ஏய் பார்த்து பார்த்து ஏரியால பூகம்பம் வந்துருச்சினு எவனா பத்திரிக்கை ஆஃபீஸுக்கு போனை போட்டுரபோறான்னேன். உடனே ரிட்டர்ன் ஆகி "அங்கிள் எனக்கு இந்த ஒல்லி பீச்சான் வேணாம் வேற நல்ல மாப்பிள்ளையா பாருங்கன்னாள்.

அப்பா" அய்யய்யோ இதென்னடா வில்லங்கமா இருக்கு. கல்யாண பத்திரிக்கைல உங்க பேரை வேணம்னா  போடாம விட்டுர்ரன். முகூர்த்தத்துக்கு மூணு நிமிஷம் இருக்கிற வரை டைம்.  ட்ராப் ஆகிற மாதிரி இருந்தா ட்ராப் ஆயிருங்க. ட்ராப் ஆகலன்னா விளம்பர இடைவெளி மாதிரி சந்துல சாக்குல  உங்க கல்யாணத்தயும் முடிச்சுரலாம்"ன்னாரு.

" போப்பா இடைவெளில படக்குனு மணையேறி உட்கார்ர மாதிரியா சுருக்கமாவா இருக்கா..இவ "ன்னேன். எப்ப என் பின்னாடி வந்து நின்னான்னு தெரியலை. இடுப்புல செமை கிள்ளு .. நான் "ஆஆஆஆஆஆஆஆஆஆ"ன்னு அலறினேன். அப்பா"என்னடா இத்தனை வயசாகி கூட அ ஆ இ ஈ வரிசையா சொல்லதெரியல.. வெறுமனே ஆன்னு அலர்ரேனு" கலாய்ச்சாரு.

No comments:

Post a Comment