ஒரு மகா வெடிப்பின் காரணமாகவே ஈரேழு பதினான்கு லோகங்கள் என்று பவுராணிகர்கள் கூறும் அனைத்து உலகங்களும் அடங்கிய இந்த விஸ்வம் தோன்றியதாய் சொல்கிறார்கள்.மேற்படி வெடிப்பின் காரணமாய் ஏற்பட்ட வெப்பம் காரணமாக ஒரு புறம் இது மேன்மேலும் விரிவடைந்தபடியே, மறு புறம் மேற்படி வெப்பம் குறைந்து வருவதால் இன்னொரு புறம் சுருங்கியபடியே இருப்பதாயும் கூறுகிறார்கள். இதை ஒரு ப்ராக்டிக்கல் பர்சனாக முழுமையாக நம்புகிறேன்.
இந்த படைப்பு இல்லாத காலமே இல்லை என்றும் ஒரு ஸ்வாரஸ்யமான வாதமும் செலாவணியில் இருக்கிறது. கீழ் காணும் சமாச்சாரத்தை படிச்சத்லருந்து இதையும் நம்பலாமானு யோசிச்சிட்டிருக்கேன். நீங்களும் தான் படிச்சு பாருங்களேன்.
ராமனின் கணியாழியுடன் அனுமார் சீதையை தெடி ஆகாய மார்கமாக போகிறார். அப்போது அகஸ்திய முனிவர் "வாப்பா இப்படி தம்மாத்திக்கிட்டு போவே" என்று கூப்பிடுகிறார்.அனுமார் மரியாதைக்கு கீழே லேண்ட் ஆகி ட்யூட்டி கான்ஷியசோட "இல்ல சார் .. சாரி..இன்னொரு தடவை பார்க்கலாம்" ங்கறார். சரி போவட்டும்" கையில என்ன?"ங்கறார். அனுமார் கணையாழிய காட்ட முனிவர் படக்குனு வாங்கி தன் கமண்டலத்துல போட்டுட்டு நீ சாப்டுதான் போவனும். இல்லேன்னா கணையாழிய மறந்துருனு கலாய்க்கிறார். வேற வழியில்லாம அனுமார் சாப்பிட உட்காருகிறார். சாப்டு முடிச்சு" சார்! மோதிரம் கொடுங்க"ன்னு கேட்கிறார்.அகஸ்தியர் "அந்த கமண்டலத்துல இருக்கு எடுத்துக்க"ங்கறார்
அனுமார் ஆர்வமா கமண்டலத்துல கைவிட அதுல கணக்கில்லாத மோதிரங்கள் ஒரே மாதிரி மூழ்கி கிடக்கு. ஷாக் ஆகி "சார் ! நான் வச்சிருந்த மோதிரத்தை கொடுங்க"னு கேட்கிறார்.
அகஸ்தியர்" அட போய்யா உன் ராமனுக்கும் சீதைக்கும் வேற வேலையில்லை. எத்தனை தடவைதான் இந்த நாடகமோ ஏதோ ஒரு மோதிரத்தை எடுத்துக்கிட்டு போ"ங்கறார்.
சரி .. இது புராணம் . புருடானு வச்சிக்கலாம். ஜூலியஸ் சீசர் பத்தி ஆ.வி. மதன் பதிலகள்ள படிச்சேன். அவருக்கு வாழ்க்கை கொடுத்த குருவுக்கு ஆப்பு வச்சிட்டு குருவுக்கு சிலை வைக்கிறார் சீசர் . ஆனால் செனட்ல ப்ரூட்டஸ் மற்றும் நண்பர்கள் திடீர்னு சீஸரை கத்தியால குத்தறாங்க. தடுமாறி சீசர் குருவோட சிலையின் பாதங்களில் விழறார்.
இது புராணமில்லே. புருடாவும் இல்லே .சரித்திரம்.
சந்திரபாபுவுக்கு என்.டி.ஆர் வாழ்வு கொடுக்கிறார். பாபு என்.டி.ஆருக்கே ஆப்பு வைக்கிறார்.பாபு என்.டி.ஆருக்கு சிலை வைக்கிறார்.1995லருந்து 1999 வரை என்.டி.ஆர் ப்ரஸ்தாவனையே கிடையாது.1999 தேர்தல்ல கூட என்.டி.ஆர் ஜஸ்ட் ஊறுகாய் தான்.
2003 மே வரதுக்குள்ள பார்ட்டிக்கு எல்லாமே ரிவர்ஸாயிருச்சு. திருப்பதி மாநாடுல என்.டி.ஆர் சிலைய எல்லாம் வச்சு அச்சு அசல் என்.டி.ஆர் மாதிரி விவசாயி, நெசவாளி,ஏழைகள் பத்தியெல்லாம் விலாவாரியா பேசினார்.(அதாவது என்.டி.ஆர் சிலையோட கால்ல விழுந்தார்) இருந்தாலும் சனம் ஆப்பு வச்சிட்டாங்க. சீசர் கத்தி குத்து வாங்கின பிறகு குருவோட சிலை கால்ல விழுந்தான். பாபு தேர்தல்ல (சொந்தமா சந்திக்கிற ரெண்டாவது தேர்தல்ல ) ஆப்பு வாங்கறதுக்கு முன்னாடி தன் அரசியல் குரு என்.டி.ஆர் கால்ல விழுந்தார்.
சரித்திரம் பைத்தியம் மாதிரி ஒன்றையே மாற்றி மாற்றி பினாத்தும்னு ஒரு பிரபல பொன்மொழி உண்டு. இதையெல்லாம் பார்க்கும் போது தான் கால சக்கரம், அதன் சுழற்சியில் உள்ள ஒழுங்கு எல்லாம் உறைக்குது.
இத்தனைக்கும் கம்யூனிஸ்டுங்க, டி.ஆர்.எஸ் எல்லாத்தயும் சேர்த்துக்கிட்டு மகா கூட்டணி வச்சாரு. தேர்தல் உடன்பாடே தேர்தல் நாள் வரை இழுத்தது. கூட்டணி கட்சிகளின் ஓட்டுக்கள் எக்சேஞ்ச் ஆகலை. கூட்டணி காரணமா சீட் குறைஞ்சது. நிறைய ஆஸ்பிரண்ட்ஸை திருப்தி படுத்த முடியலை. இப்படி எத்தனையோ காரணங்களால பாபு காலி.
சீசர்,பாபு கதைகளுக்கிடையில என்ன பெரிய்ய வித்யாசமிருக்கும். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
கால சக்கரம் ரொம்ப கவர்ச்சியானது. இதை பத்தி நிறைய சொல்லவேண்டியிருக்கு பார்ப்போம் !
No comments:
Post a Comment