Sunday, March 7, 2010

காவல் நிலையத்தில் நான்

எச்சரிக்கை : 1

அண்ணா! "உனக்கு 22 எனக்கு 32" தொடர்கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தையும் இன்னைக்கு அடிச்சி விட்டிருக்கேன்னா. அதைப் படிக்க இங்கே அழுத்துங்கண்ணா. மகளிர் தினம் மண்ணாங்கட்டின்னு ஒரு நாள் கூத்துக்கெல்லாம் நான் தயாரா இல்லிங்கண்ணா. பெண்ணை, பெண் மனதை இன்னும் பெட்டரா புரிஞ்சிக்க கோனார் உரை மாதிரி இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கேன்னா கதை இப்போ 1987 / 88 ல நடக்கு இது 2012 வரை தொடரப்போகுதுங்கண்ணா

எச்சரிக்கை : 2

பை தி பை மகளிர் இட ஒதுக்கீடுங்கற பேர்ல பெரிய சதி நடக்குதுங்கண்ணா.. பார்ப்பானுக்கு பதில் பாப்பாத்தி அதிகாரத்துக்கு வர இது வழிபண்ணிரப்போவுது. உண்மையிலயே மகளிர் மேல அக்கறை இருந்தா மகளிர் இட ஒதுக்கீட்டுக்குள்ளவே உள் ஒதுக்கீடு பண்ணலாமில்லிங்களா?

காவல் நிலையத்தில் நான்

தலைப்பை பார்த்ததுமே அடடே நம்ம பிரார்த்தனை இத்தினி நாளைக்கு பலிச்சு நம்ம முருகேசன் செமர்த்தியா மாட்னானாப்ல இருக்கேன்னு குதூகலிக்க பெரிய கூட்டமே காத்திருக்கு. கல்கி, நித்யானந்தா மாதிரி பார்ட்டிங்கள்ளாம் வரிசையா மாட்டி முழிக்கிறாங்க. நம்ம ஓம்கார் ஸ்வாமிகள் கூட அவசர அவசரமா குறுகிய கால பதிவா நான் சாமியாரே கிடையாதுன்னு அம்பேல் வச்சிட்டாரு. ஸ்வாமி 7867ன்னு ஐடி வச்சிருக்கிற முருகேசன் கொஞ்சமான ஆட்டமா போட்டாரு. நவீன வாத்சாயணர் மாதிரி, இரண்டாம் அதி வீர ராம பாண்டியன் மாதிரி அலப்பறை பண்ணிக்கிட்டிருந்தாரு. சரி.. ஏதோ பலான சமாச்சாரங்களை அள்ளிவிடறதோட விட்டிருந்தா பரவாயில்லை. என்னமோ இவர்தான் இந்த தேசத்தை உத்தாரணம் பண்ண வந்த அவதார புருஷன் மாதிரி கண்ட வி.ஐ.பிய வம்புக்கு இழுத்துக்கிட்டிருந்தாரு. கொஞ்சமா சுதாரிச்சிருக்கக்கூடாதான்னு வருந்தறதுக்கு ஆளிருக்கு.

ஆனா பாருங்க யாரோ ஒருத்தர் நம்ம நித்யாவுக்கு (அதாங்க நித்யா.............னந்தான்னு குமுதம் மாதிரி கூவம் பத்திரிக்கை எல்லாம் கூவ கேட்டோமே . கதவை திறங்க காத்துவரட்டும்னாரு சாமியார். இப்ப கதவை போடுங்க போலீஸ் வரும்னுவாரு போல) சுத்தி வளைச்சு வக்காலத்து வாங்கியிருக்காரு. எத்தனையோ விஷயம் இருக்க இந்த விஷ(ய)த்தை பத்தியே நிறைய பதிவர்கள் பதிவு போட்டுட்டம்னு வருந்தியிருக்காரு.

இன்னொரு பதிவன்பர் மேற்படி நி த்யானந்தா கொடுத்த மறுப்புக்கான லிங்கை கொடுத்து உதவியிருக்காரு.தமிழினம் இரக்கம் மிக்க இனம்தான். லாஜிக்கே பார்க்காம மயிலுக்கு போர்வை, முல்லைக்கு தேர் எல்லாம் கொடுத்த இனம் தான் . அதுக்காக இந்த மாதிரி தத்தாரிக்கெல்லாம் உதவனுமான்னுதான் வருத்தம்.

சரி பதிவு மொக்கையாவே போயிட்டிருக்கு. விஷயத்துக்கு வர்ரன். காவல் நிலையத்தில் நானுங்கற தலைப்புல கு.ப தொடர்ந்து 25 பதிவாவது போடலாம். அத்தினி அனுபவம். இருந்தாலும் அப்பப்ப போடறத பத்தி யோசிச்சு பார்க்கிறேன். தற்சமயத்துக்கு தமாசா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.

எங்கூர்ல ஒரு எஸ்.ஐ.அவர் பேரு.........வேணாங்க பேரெல்லாம் எதுக்கு. பார்ட்டி காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருப்பார். நடுத்தர உயரம் தான். சினிமால கமல்,சிவாஜி செய்றதை எல்லாம் ஓவர் ஆக்டிங்குன்னு சொல்றிங்களே. இந்த எஸ்.ஐ பண்ற கூத்த கேட்டா என்ன பண்ணுவிகளோ. மனுஷனுக்கு பைல்ஸ்/பி.பி மாதிரி ஏதோ உபத்ரவம் கட்டாயம் இருக்கும்னு நினைக்கிறேன். ஒவ்வொரு அஞ்சு நிமிஷத்துலயும் மூணாவது நிமிஷம் கோவம் வந்துரும்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒரு கடி ஜோக்:

காஃபிக்கும் சிகரட்டுக்கும் என்ன ஒத்துமை?
ரெண்டுலயும் ஃபில்டரும் உண்டு, சாதாவும் உண்டு.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சாதா சனம் விஷயத்துலதான் இப்படின்னுல்ல .. தலைவர்கள் விஷயத்துலயும் இப்படித்தான். நோ பார்க்கிங்ல கார் இருந்தது. காரை ஸ்டேஷனுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டாரு.கார் காரன் தெ.தே.பா. மானில செயலாளரோட சொந்தக்காரன். விஷயம் முத்தி தெ.தே.எம்.எல்.ஏ வந்து சாலை மறியல் எல்லாம் நடத்தி நாறிப்போச்.

ஓகே இப்போ ஒரு நடுத்தர குடும்பத்து யூத்து கதை அங்கிருந்து ஷாட் கட் பண்ணா அய்யாவோட ஸ்டேஷன் ஓகேவா. நம்ம யூத்து அந்தகாலத்து நடிகர் சந்திரபாபு மாதிரி இருப்பார். ஆனால் நெனப்பு என்னவோ சல்மான் கானுன்னு நெனப்பு. ஏற்கெனவே நகராட்சி கமிஷ்னர் பொண்ணை ஒன் சைட் லவ் பண்ணி லந்து பண்ணதெல்லாம் இந்த பதிவுக்கு தொடர்பில்லாத விஷயம். நம்மாளு ஒரு மாஞ்சா ஃபிகரை கோர்த்துக்கிட்டாரு (புரியலையா கல்யாணமான பொம்பளைங்கண்ணா). அது லோலாயி. காலேஜ் படிக்கிற காலத்துல இருந்து அவ அப்பனுக்கு அவளை லவ் பண்றவன் மேல கம்ப்ளெயிண்ட் குடுக்கிறதே வேலை.

பார்ட்டிக்கு எச்சில்னு தெரியுதுல்ல மறைவா சாப்டு கைய கழுவிட்டு வரலாமேன்னு இல்லை . என்னமோ கை படாத ரோஜாவ லவ்ஸ் பண்றாப்ல அவ வீட்டுப்பக்கம் போறச்ச அப்புறம் ஃபோன் பண்ணுனு சைகை காட்டியிருக்கான். அத அவள் அப்பன் பார்த்துட்டு கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டான். நம்மாளு யு.ஜிக்கு போயிட்டான். (அண்டர்கிரவுண்ட்)

எஸ்.ஐ பத்தி சொல்லியிருக்கேன்ல. முத்தம் கொடுக்கப்போறதுக்கு முன்னாடி அது வாயா இல்லை ஆசனமான்னு பார்க்கனுங்கர இங்கிதம் கூட கிடையாது அந்தாளுக்கு. பெண்ணின காவலராயிட்டு வீரப்பனை பிடிக்க தனிப்படை அமைச்ச கணக்கா அலப்பற ஆரம்பிச்சுட்டாரு. நம்ம பையனுக்கு ஒரு அழகான அண்ணி, விதவையான அம்மா, லீனா (ஒல்லியாங்கண்ணா இது பேரில்லை) ஒரு அக்கா.

போலீஸ்காரவுக ஸ்டைல் தெரியுமில்லியா மருந்து சாப்பிடற வேளை மாதிரி காலை,மதியம்,மாலை, நள்ளிரவுன்னு வீட்டண்டை போறது சவுண்டு விடறது, ஸ்டேஷன்ல பேச வேண்டிய பாஷையெல்லாம் ஸ்பீக்கர் போட்டு பேசற மாதிரி பேசறது. பாவம் அந்த வீட்டு தாய்குலம் எனக்கு ஃபோன் போட்டு புலம்பல்.

சரி ஒரு முன்னாள் தெலுங்கு தினசரி நிருபன், இன்னாள் தமிழ் தினசரி நிருபன். போலீஸ் ஸ்டேஷனுக்கு போறது ஒன்னும் செய்தி கிடையாதுதான். ஆனால் ஆப்ளிகேஷனுக்காக ஸ்டேஷன் போறது நம்ம ஸ்டைலில்லயே. ஒடுக்கப்பட்ட மக்களின் நலம் காக்க போறதுண்டு. இந்த கேஸ்ல கூட மனித உரிமைகள், மகளிர் சுயமரியாதை காப்பு அம்சங்கள் இருக்கவே ஸ்டேஷனுக்கு போனேன்.

என் ஜாதகத்துல ஜெயேந்திரர், கல்கி, நித்யானந்தா மாதிரி பார்ட்டிங்க விஷயத்துல கூட "ஒரு வேளை அவிக நல்லவுகளா இருந்தா "ன்னிட்டு யோசிப்பனோ என்னவோ போலீஸ் விஷயத்துல மட்டும் பில் குல் நஹி.

எதுக்கானா நல்லதுன்னு ஆந்திர ஜோதி ஸ்டாஃப் ரிப்போர்ட்டருக்கு ஃபோன் போட்டு அவர் லோக்கல் ரிப்போர்ட்டருக்கு சொல்லி லோக்கல் ரிப்போர்ட்டரோட தான் ஸ்டேஷனுக்கு போனேன். ( இது ரொட்டீன் கிடையாது ..எஸ்.ஐ கல்யாணகுணங்களை கேள்விப்பட்டிருந்ததால ஒரு முன்னெச்சரிக்கை)

சரி ஸ்டேஷனுக்கு போயாச்சு. லோக்கல் ஆ.ஜோ. ரிப்போர்ட்டர் அறிமுகம் செய்தாரு. (பத்து ரூபாய்க்காக சி.எம். ஆஃபீஸ் மேல கேஸ் போட்ட பார்ட்டின்னு அறிமுகம் பண்ணியிருந்தா எஸ்.ஐ பேண்டை நனைச்சிருப்பார்)

நான் பட்டும் படாம "பையன் தலைமறைவா இருக்கான். நான் அவிக ஃபேமிலி ஃப்ரெண்ட் . பையன் எங்க இருக்கான் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன். முடிஞ்சா ரெண்டு மூனு நாள்ள நானே ஸ்டேஷனுக்கு கூட்டிவரேன். மென் ஐ வீட்டண்டை அனுப்பாதிங்க"ன்னு சொல்ட்டு வந்துட்டன்.

ஆனா பாருங்க சாயந்திரம் பேசிட்டு வர்ரன். ராத்திரிக்கு மறுபடி மென் போயிருக்காக. வழக்கமான லந்து. பொம்பளைக மறுபடி நமக்கு ஃபோன். சரிம்மா உங்க பையனை என் கிட்டே அன்ப்பி வைங்க நான் எஸ்.ஐ கிட்டயே கூட்டிட்டு போய் எப்படியோ மேனேஜ் பண்றேன். இந்த கண்ணா மூச்சியெல்லாம் வேணாம்னு அட்வைஸ் பண்ணேன்.

ஆனால் அவிகளும் சாதாரண சனம்தானே. பையனை உப்பு கண்டம் போட்டுட்டா என்ன பண்றதுன்னு பயம் போல, அனுப்பல. மூணாவது நாள் எஸ்.ஐ.கிட்டேருந்து போன். "வந்து பேசிட்டு போ"

உள்ளுக்குள்ளாற பேக் போன்ல ஜிலீர் இருந்தாலும் அதுக்கு முன்னாடி எத்தனை எஸ்.ஐ. டேக்கிள் பண்ணி நாறடிச்சிருக்கம் அந்த லிஸ்ட்ல இந்தாளும் சேரனும்னு துடிக்கிறான் போலனு நினைச்சிக்கிட்டு போனேன்.

எஸ்.ஐ உதிர்த்த தத்துவம்:
"போலீஸ் காரனோட நிலைமையையும் நினைச்சு பாருங்கப்பா. நீ ஃபேமிலி ஃப்ரெண்டுன்னே, கொசுறுக்கு நீ ஒரு ரிப்போர்ட்டர் வேற. அவிக உன்னையே நம்பல. கம்ப்ளெயிண்டு குடுத்தவன் கடன் காரன் மாதிரி ஸ்டேஷனுக்கு சுத்தறான். நானும்
ஒரு நாளைக்கு 4 வேளை மென் அனுப்பிச்சேன். அந்த பையனை கூட்டி வந்தாங்களா? அவனாச்சு வந்து சரண்டர் ஆனானா இல்லே. ஸ்டேஷனுக்கு வாங்க ..ஆப்ளிகேஷன் சொல்லுங்க. முடிஞ்சா செய்யறோம்.முடியலன்னா ஏன் முடியலனு சொல்றோம். ரெண்டு கட்சியையும் பாருங்கய்யா. மனித உரிமை காவலர் மாதிரி, பெண்ணின ரட்சகர்கள் மாதிரியே ஆட்டிக்கிட்டு வந்துராதிங்க. போங்க.."

நான் யாரு, என்னங்கறதெல்லாம் எஸ்.ஐக்கு தெரியாது பாவம்.ஏதோ சம் திங்க் பிரச்சினை இருக்கு பார்ட்டிக்கு. அது சைக்கலாஜிக்கலோ, மெடிக்கலோ நான் எப்படி சொல்லமுடியும். அய்யோ பாவம்னிட்டு பரிதாபப்பட்டுட்டு ரிடர்ன் ஆஃப் தி ட்ராகன்.

ஒரு வாரம் கழிச்சு நம்ம காதுக்கு வந்த மேட்டர் என்னடான்னா " மேற்படி பையன் யாரோ ஒரு யூத் லீடர் மூலமா ஸ்டேஷன்ல சரண்டர் ஆயிருக்கான். அஞ்சாயிரம் லஞ்சம் வாங்கிக்கிட்டதில்லாம ஒரு வாரம் ஸ்டேஷன்லயே வச்சு செம கும்மு வேற .இதுக்கெல்லாம் கூட எரிச்சல் வரலை.

அந்த பையனை ஜட்டியோட நிக்க வச்சு பிழிஞ்சுட்டு " ஏண்டா உன் அக்காள எவன்னா வச்சுக்கிட்டா சும்மா விட்ருவயா நீ. என்னை பார் சுமாரா இல்லே. நான் இப்பவே உங்க வீட்டுக்கு போறேன் உன் அக்காவ ..."இப்படி பதினைஞ்சு நிமிஷம் பேசியிருக்கான். இதை அந்த பையன் வீட்ல வேற சொல்லியிருக்கான். அவிக எனக்கு சொல்லி வருத்தப்பட்டாங்க. மேலுக்கு "ஏம்மா உங்க பையன் என்ன வேணா பண்ணுவான். ஆனா ஸ்டேஷனுக்கு வரமாட்டான். தூசு கூட படக்கூடாதுன்னு பார்த்திங்க. கௌரவமா என்னோட வந்திருந்தா ஒன்னு ரெண்டு அறையோட கூட்டு வந்திருப்பேன். மிஞ்சி போனா சென்ட்ரிக்கு டீ காசு செலவாயிருக்கும். இப்ப நான் என்ன பண்றது. நான் என்ன அழகிரியா? இல்லே சி.கே.பாபுவா?"ன்னு சொல்லிட்டு வந்துட்டன்.

ஆனால் இந்த சம்பவம் சாரி செய்தி எனக்கு மறக்கவே இல்லை. ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வருமில்லயா.. வெயிட் அண்ட் சீன்னு வெயிட்டிங்ல இருந்தேன். காலம் வந்தது. பார்ட்டிக்கு எப்படி ஆப்பு வச்சேன். எப்படி அல்லாட வச்சேனு தெரிஞ்சுக்க ஜஸ்ட் வெயிட் ஃபார் 24 ஹவர்ஸ். ஓகே ஜூட்

No comments:

Post a Comment