Thursday, March 25, 2010

தத்துவமா புடி.......

 நம்ம தத்துவம்:

1.ரெண்டு ஒதகாத நாய் சேர்ந்து எதாச்சும் பண்றேனு புறப்பட்டா தடை சொல்லாதே.உருப்பட்டா ரெண்டும் உருப்படும். இல்லேன்னா ரெண்டு நாசமுத்து போகும் நாட்டுக்கு நஷ்டமில்லே.
2.ஒரு ஒதகாத நாய் ஒரு  நல்ல மனுஷனோட சேர்ந்து எதானா பண்றேன்னு சொல்லுதா .. அந்த நல்ல மன்சனுக்கு சொல்லு " தலீவா! சுத்த தங்கத்துல நகை செய்ய முடியாது. அதுக்குனு ஓவரா கலப்படம் பண்ணினா மதிப்பு குறைஞ்சுரும் பார்த்து நடந்துக்கனு சொல்லு.
3ஒவ்வொரு .மனுஷனும்  அவன் சேர வேண்டிய விலாசம் அச்சாகியிருக்கிற
போஸ்ட் கார்டு மாதிரி . அவனை இன்னொரு அட்ரஸுக்கு டைவர்ட் பண்றதெல்லாம் வேண்டாத வேலை. முடியாத வேலை
4. நீ சக்ஸஸ் ஆகனும்னு விதி இருந்தால் உன் கிட்டே இருக்கிற அத்தினி மைனஸ் பாயிண்ட்ஸோட சக்சஸ் ஆவே. நீ ஃபெயிலியர் ஆகனும்னு விதி இருந்தா உன் கிட்டே இருக்கிற அத்தீனி ப்ளஸ் பாயிண்ட்ஸோடவே ஃபெயிலியர் ஆயிருவ
5. நல்லவன் காஞ்ச திராட்சை மாதிரி . காஞ்சானா தெரிவான். ஆனால் லாங் லைஃப். கெட்டவன் பச்சை திராட்சை மாதிரி . தள தளனு இருப்பான்.ஆனால் அழுகிருவான்.
6.தண்ணி போடறியா தனியா போடு. பலான இடத்துக்கு போறியா நாலு பேரோட போ
7.தம்மடிக்கிறவனோட தம்மு மட்டும் அடி. டீ சாப்பிடறவனொட டீ மட்டும் சாப்பிடு .புட்டி போடறவனோட புட்டி, குட்டி போடறவனோட குட்டி மட்டும் போடு. ஒருத்தனோடவே டீ சாப்டு,அவனோடவே தம்மடிச்சு அவனோட புட்டி போட்டு ,குட்டி போட்டு வியாபாரமும் அவனோடவே பண்ணாதே
8.நம்மக்குனு நாலு பேர் இருந்தா போதும்னு நாலு பேரோட மட்டும் சகவாசம் பண்ணாதே. அது மூத்திர குட்டைல மீன் பிடிச்ச மாதிரி . சீக்கிரமே நாறிப்போகும். குறைஞ்சது 30 சர்க்கிள் இருக்கனும். லாட்ஜு வைத்தியர் மாதிரி ஒவ்வொரு சர்க்கிளுக்கு ஒவ்வொரு சாயந்திரத்தை அலாட் பண்ணு. அதுல ஒரு நாலு பேர் தேறினா தேறட்டும். அவிகளுக்கு கூட மாசத்துக்கு ஒரு நாள்தான்.
9.ஒவ்வொரு இதயத்துலயும் ஒரு ரணம் இருக்கு. மனுஷனோட பேச்சு டூ இன் ஒன். அதுவே ரோஜா , அதுவே முள். உன் பேச்சு ரோஜாவா இருந்தா ரிலேஷன் ஷிப் ஓகே .முள்ளா இருந்தா கோவிந்தா..
10.யாரோ ரெண்டு பேர் பிரிஞ்சிட்டா அவிகள சேர்த்து வைக்கபாரு. இல்லாட்டி அவிக என்னைக்கோ ஒரு நாள் சேர்ந்துருவாங்கனு நினைச்சி ரெண்டு பேரிட்டயும் பழகு
11. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான செல் அழிஞ்சி போவுது. புது செல் உண்டாகுது. வயசு ஆக ஆக புது செல் உற்பத்தியாறது குறைஞ்சிக்கிட்டே வரும். முக்கியமா மூளையில உள்ள செல்கள். அதனால  100 வருஷ வாழ்க்கைக்கு தேவையான அறிவை  18 வயசுக்குள்ளவே மைண்ட்ல ஃபீட் பண்ணிவச்சுக்க. ஆக்சிடெண்ட் நடந்த பிறகு எந்த இன்ஷியூரன்ஸ் கம்பெனியும் பாலிசி தராது
12.ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதும்பாங்க. புத்தகம் இன்னொருத்தன் நமக்காக செய்த தவத்தோட பலன். படி. சமைத்து பார் புஸ்தவம் மாதிரி. படிச்சி முடி. படிச்சதோட சாரத்தை புடி. அப்ளை பண்ணு. உன் அனுபவத்தை சேர்த்து மூளையில பத்திரப்படுத்து.
13.மனச்சிக்கலை விட மலச்சிக்கல் கொடுமை. ஏன்னா உனக்கு மனச்சிக்கல் வந்துட்டா அதன் விளைவை பிறர் தான் அனுபவிப்பாங்க. மலச்சிக்கல் வந்துட்டா அதன் விளைவை நீதான் அனுபவிக்கனும். மனச்சிக்கல் இலவச இணைப்பா வந்துரும்
14. நீ ஏதும் புது வாழ்வை வாழலை. கோடிக்கணக்கான சனம் வாழ்ந்த அதே உதவாக்கரை வாழ்வத்தான் வாழறே. உனக்கு வர இன்ப,துன்பம் எதுவும் புதுஸு கிடையாது.அதானால எது வந்தாலும் அலட்டிக்காதே!
15.உலகத்திலான மனித  வாழ்க்கைய பத்தின அராய்ச்சியோட  வெரி லாங்க் அண்ட் ஓல்ட் லேப் ரிப்போர்ட் தான் சரித்திரம்.  நமக்கு முன்னே வாழ்ந்தவங்க விட்டுட்டு போன இடத்துல இருந்து ஆராய்ச்சிய ஆரம்பிக்கனுமே தவிர முதல்ல இருந்து ஆரம்பிப்பேங்கறது முட்டா.....தி தனம்.  வேணம்னா ரேண்டமா செக் பண்ணிட்டு ஆராய்ச்சிய துவங்கலாம் தப்பில்லை.
16.புராணம், சரித்திரம் எல்லாத்தயும் ஒரு தாட்டி புரட்டுங்க. அதுல மனுஷன் பண்ணாட தப்பு ஏதாச்சும் இருந்தா பண்ணுங்க. அதனனோட விளைவ மனிதகுலம் தெரிஞ்சுக்கும். அதை விட்டுட்டு நான் புடுங்கி. அவனெல்லாம் தண்டம். நான் தப்பா செய்தாலும் சரியா வரும்னு நினைச்சா உன் வாழ்க்கைங்கற ரயில் ஒரு லைஃப் டைம் லேட்டாயிரும்.
17.ஒவ்வொரு தப்பையும் நாமே பண்ணி திருந்தனும்னா வாழ் நாள் போதாது.
18.மனுஷனோட குண நலனை  அவன் ஆணா,பெண்ணாங்கறது முதற்கொண்டு, அந்த சமயம் சாப்டானா இல்லையா? உச்சா போனானா இல்லையாங்கறது வரை  பாதிக்கும்.


சனங்க தத்துவம்:
1.கெட்ட பழக்கம் கெஸ்ட் மாதிரி வரும். போக போக நமக்கு ஓனராயிரும்.டேக் கேர்
2. எதிரிக்கு தெரியக்கூடாத விஷயத்தை நண்பனுக்கு கூட சொல்லாதே . முகம் தெரியாதவன் விரோதியாறதில்லே. இன்றைய நண்பன் தான் நாளைய எதிரி
3.பக்தி,காதல்ல நீ என்ன பண்றேங்கறது முக்கியமில்லே எந்த உணர்வோட பண்றேங்கறதுதான் முக்கியம்
4.துன்பத்துல இருக்கிறவன் துன்பத்தை தான் கொடுப்பான்.
5.பயத்துல இருக்கிறவந்தான் எதிராளிய பயமுறுத்துவான்.
6.எந்த வீட்லயாவது நாயையோ,பூனையையோ உயிரோட கொளுத்தினதா கேள்வி பட்டிருக்கிங்களா? ஆனால் பெண்ணை கொளுத்தறத ?
7.கணவன் மின் உபகரணம். மனைவி ஸ்டெபிலைசர் மாதிரி .சில கேஸ்ல அவன் ஃபேன் மாதிரி இருப்பான், மனைவி கண்டென்சர் மாதிரி இருப்பா. கண்டென்சர் புட்டுக்கிட்டாலும் பிரச்சினைதான். ஸ்டெபிலைசர் வேலை செய்யலன்னாலும் பிரச்சினைதான்.
8.பணம்,பேர்,புகழ்,நண்பர்கள்,படை,பலம் எல்லாம் இருக்கும் போது நீ எப்படி இருக்கியோ அது உண்மையான நீ இல்லே. அதெல்லாம் போன பிறகு நீ எப்படி இருக்கியா அதான் உண்மையான நீ
9.ஹீரோன்னா ஜெர்கின் கோட், ரேபான்  போட்டு லட்ச ரூபா பைக்ல பறக்கறவனில்ல. எவன் ஒருத்தன் தன்னவர்களுக்காக தன்னையே பலி செய்ய தயாராகிறானோ அவந்தான் ஹீரோ

No comments:

Post a Comment