என்னால நம்பவே முடியலை. எனக்கே 23 வயசுதான் ஆகுது. தம்பிக்கு என்னை விட ரெண்டு கம்மி. அதுக்குள்ளயா அதுக்குள்ள இப்படியானு ஒரு பக்கம் ஆத்து ஆத்து போகுது. காத்துக்கிருக்கிற அறிவு கூட காலனுக்கு கிடையாது. காத்தாச்சும் பழுத்த இலைய தான் உதிர்த்துட்டு போகுது. கடவுளை விட மனுஷனே பெட்டர். தான் தயாரிக்கிற பொருளுக்கு கியாரண்டி பீரியட்,வாரண்டி பீரியட் எல்லாம் தரான். ஆனால் கடவுள்? இப்படி தீவிரமான எண்ணங்க அலையடிச்சாலும்
அப்பா டூர்ஸ் அன்ட் ட்ராவல்ஸுல இன்வெஸ்ட் பண்றதுக்காக வீட்டை விக்கமுடிவு செய்து பேசினா " எனக்கும் படிப்பு முடியப்போகுது..அதுக்குள்ள எதுக்கு இல்லாத பொல்லாத கமிட்மென்ட்ஸ் என் பாகத்த ரிசர்வ்ல வை கல்யாணமானதும் செட்டில் பண்ணு"ன்னு சொன்னதும், அப்பா கடன் காரங்களுக்கு செட்டில் பண்றாப்ல ரிஜிஸ்ட் ரார் ஆஃபீஸ்ல வச்சே பணம் கொடுத்தப்பயும் எள்ளத்தனை ஃபீலிங்கும் காட்டாம லபக்குனு வாங்கிக்கிட்ட விதம், அதை முன்னாடியே எக்ஸ்பெக்ட் பண்ணி பணத்தை வாங்கி வச்சுக்கறதுக்காக கேஷ் பேக் எடுத்து வந்திருந்த முன் யோசனை. இதெல்லாம் ஞா வந்து தம்பியோட சாவு ஒரு வித குரூர திருப்தியை தந்தாலும், எனக்குள்ள ஒரு பாகம் செத்துப்போயிட்டாப்லயும் ஒரு ஃபீலிங். ஒரு பக்கம் மாயாவ பார்த்தா ஒரு வித கில்ட்டி. அவளுக்கும் உள்ளூற கில்ட்டி இருக்கும் போல .
உடனே அப்பாவோட ஹோட்டல் சிந்துவுக்கு புறப்பட்டேன். காலனி என்ட்ரன்ஸ் வரை நடந்தே வந்து ஆட்டோ பிடிச்சு கிளம்பினோம்..அப்பாவோட உதடு துடிச்சிக்கிட்டிருக்குது. ஓட்டல் முதலாளியோட மனைவி தம்பி மனைவிய ரிசப்ஷன்ல உடகார வச்சு ஆசுவாசப்படுத்திக்கிட்டிருந்தாங்க. அப்பாவோட பார்வைல ஒரு வித ப்ளாங்க்னெஸ். கன்னக்கதுப்பெல்லாம் அதிருது. ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.ஐக்கு அப்பாவ நல்லாவே தெரியும் போல . ரொம்ப ஆத்மார்த்தமா அப்பா தோள்ள கை போட்டு தனியா கூட்டிக்கிட்டு போய் பேசினார். பாடிய ஆம்புலன்ஸ்ல ஏத்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனாங்க. காலைல தான் போஸ்ட் மார்டம் நடக்கும். பாடிய ஒப்படைக்க மதியமாயிரும். அதுக்கேத்தாப்பல ஏற்பாடு பண்ணிக்கங்கன்னு எஸ்.ஐ சொன்னாராம்.
அப்பா ,தம்பி மனைவி, ஹோட்டல் ரெஜிஸ்டர்ல இருந்த ஃபோன் நெம்பர் மூலம் தகவல் தெரிஞ்சு வந்திருந்த தம்பி மனைவியோட சொந்தக்காரவுக எல்லாம் மார்ச்சுவரி வெளிய திகிலடிச்சு போய் நின்னிருக்க நான் மார்ச்சுவரிக்கு போய் அங்கே இருந்தவனுக்கு குவார்ட்டருக்கு காசு கொடுத்து, கெமாக்சினுக்கு தனியே காசு கொடுத்து பாடிய பத்திரமா பார்த்துக்க சொல்ட்டு வந்தேன்.
எங்கம்மா டெத்தானப்ப மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியமெல்லாம் எங்களுக்கு சம்பந்தமே இல்லாம நடந்துருச்சு. அவள் உயிரோட இருக்கிற வரை முகத்தை திருப்பிக்கிட்டு போற சித்தப்பாங்க, அத்தை ,பக்கத்து வீட்டு ஃப்ரீடம் ஃபைட்டர் தமோதரத்துல இருந்து எதிர் வீட்டு போஸ்ட் மாஸ்டர் கோதண்டத்துல இருந்து ஆளுக்கு ஒரு வேலைய தோள்ள போட்டுக்கிட்டு செய்தாங்க. அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டறது ஒன்னுதான் எங்கப்பா வேலையா இருந்தது.
ஆனா இப்போ? என்ன பண்றதுன்னே தெரியல. ஆஸ்பத்திரிய விட்டு வெளிய வந்தப்ப அய்யய்யோ தம்பிய(?) தனியா விட்டுட்டு வந்துட்டமேனு ஒரு உணர்ச்சி. எப்பவோ மார்ச்சுவரில இருக்கிற பிணத்தை எலிகள் குதறிப்போட்டதா படிச்ச செய்தி ஞா வந்தது. அப்பா ஒரு நிமிஷம் இப்பவே வரேன்னிட்டு மார்ச்சுவரிக்கு போனேன். அங்கிருந்தவன் பேண்ட் பாக்கெட்ல இருந்து குவார்ட்டரை எடுத்து ராவா அடிச்சிக்கிட்டிருந்தான். இன்னொரு அம்பது ரூபாய அவனுக்கு கொடுத்து ஒரு சிகரட்டை எடுத்து கொடுத்து பத்தவச்சிட்டு பத்திரமா பாத்துக்க தலைவரே உன்னை நம்பித்தான் போறேன்னு சொல்ட்டு வெளியே வந்தேன். அதுக்குள்ள புது பொண்ணை லோக்கல் சொந்தக்காரங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதாவும் காலைல துர்கா காலனி வீட்டுக்கு வந்துர்ரதாவும் சொல்லிட்டு அவிக சொந்தங்காரங்க கிளம்பிட்டாங்களாம். அப்பா சொன்னார்.
ஆஸ்பத்திரி கேட்ல இருக்கிற ஆட்டோ ஸ்டாண்ட்ல ஒரே ஒரு ஆட்டோக்காரன் தான் இருந்தான். அவனை எழுப்பி துர்கா காலனி போறதுக்குள்ள மணி ரெண்டாயிருச்சு. பாட்டியும்,மாயாவும் ஹால்ல உட்கார்ந்தாங்க. பாட்டி எப்பவோ எவனோ புது மாப்பிள்ளை செத்து போன கதைய சாங்கோபாங்கமா சொல்லிக்கிட்டிருக்க . மாயா எங்களை பார்த்ததும் இருங்க பாட்டி பாலாச்சும் சுடப்பண்றேன்னு கிச்சனுக்கு போனாள்.
அடுத்து என்னென்ன செய்யனும்னு பாட்டியும்,அப்பாவும் சொல்ல சொல்ல நான் குறிச்சிக்கிட்டேன். பாடி வீடு வந்து சேர மறு நாள் சாயந்திரம் 4 ஆயிருச்சு. நல்ல வேளையா எங்க சித்தப்பா வந்தாரு. கட்டையா,குட்டையா இருந்தாலும் பேச்சு மட்டும் அடிக்கிற மாதிரியே இருக்கும் . அவர்தான் எல்லாத்தயும் காமாண்ட் பண்ணிக்கிட்டிருந்தார்.
எல்லா சாங்கியமும் முடிஞ்சு குளிச்சு ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி வரவச்சிருந்த சாப்பாட்டை சாப்டாப்ல பேர் பண்ணிட்டு மாடிக்கு போனேன். காலைல இருந்து சிகரட்டே பிடிக்காதது ஞா வந்தது. கீழே வந்து சட்டைய எடுத்து மாட்டிக்கிட்டு கிளம்பினேன். அப்பா, "எங்கடா போற இந்த நேரத்துல.. " ன்னிட்டு முனக அது காதுல விழாதமாதிரி வெளியே வந்தேன். மறுபடி நடை ..காலனி என்ட்ரன்ஸ்ல பங்க் கடை. திறந்திருந்தது. ஒரு பாக்கெட் சிகரட் வாங்கிக்கிட்டு பத்த வச்சேன். நெஞ்செல்லாம் அந்த விஷப்புகை போய் நிரம்பினதும் ஒருவிதமான ரிலீஃப் .
சுடுகாட்ல பாடி புதைச்சுட்டு வெளிய வரப்ப ஒரு ஆளு எல்லாத்துக்கு பீடி கொடுத்துக்கிட்டிருந்தப்ப வயசு வித்யாசமில்லாம எல்லாரும் வாங்கி நாலு தம் இழுத்து போட்டதை பார்த்தேன். ஆனால் அப்ப அந்த எண்ணமும் வரலை. அந்த சாங்க்யம் ஏன்னும் யோசிக்கலை.
இப்பத்தான் புரிஞ்சது. பங்க் கடைக்காரர் க்டை மூடறதை வெறுமனே பார்த்துக்கிட்டிருந்தப்ப அப்பா நடந்து வர்ரது தெரிஞ்சது. கடைசி தம்மை இழுத்துட்டு சிகரட்டை கீழே போட்டு நசுக்கினேன். அப்பாவை நோக்கி வேகமா நடந்தேன்.
அப்பா" என்ன புள்ளடா நீ எங்க போறேனு கேட்டுக்கிட்டே இருக்கிறேன்.. நீ பாட்டுக்கு வந்துட்டே"ன்னு குறைபட்டுக்கிட்டார். "ரீஃபில் வாங்க வந்தேம்பா"ன்னேன். இது அப்பாவுக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்ச கோட் வேர்டு.
"கருமம் கருமம் .. தபாரு..உன் காதுல ஒரு விஷயத்த போடறேன். உடனே போய் யாரையும் கேட்டுராத.சாவுக்கு வந்த நம்ம சொந்தக்காரங்கள்ள சிலர் நீ வயசுல பெரிய பொண்ணை கட்டிக்கிட்டதாலதான் தம்பி இப்படி அகாலமா போயிட்டான் அது இதுன்னு பேசிக்கிட்டாங்களாம். ஒரு வேளை இந்த பேச்சு மாயா காது வரைக்கும் கூட போயிருக்கலாம். இந்த நேரத்துல ஷி மே பி இன் நீட் ஆஃப் யுவர் ப்ரசன்ஸ் நீ பாட்டுக்கு இப்படி சொல்லாம கொள்ளாம ரீஃபில் வாங்க வந்தேன் ..வாழைப்பழம் வாங்கவந்தேன்னா அந்த பொண்ணு என்ன நினைக்கும். கூட இருந்து ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுடா"
"எந்த தே..டியா அவ இந்த மாதிரி ல....ட சென்டிமென்ட் எல்லாம் பேசினது.. நீ யாருனு சொல்லு அவ எப்படியாப்பட்ட தே..யானு நான் ப்ரூஃப் பண்றேன்"
"அடி செருப்பால என்ன பேச்சு... யார் கிட்டே பேசறே.. அறைஞ்சு பல்லு கில்லெல்லாம் பேத்துருவன்"
அப்பாவுக்கு இந்த அளவுக்கு கோவம் வந்ததுமே கண்டுகிட்டேன்.. பார்ட்டி எங்க அத்தைதான். சரி இரு வரேன்னு நினைச்சிக்கிட்டு..
"பின்னே என்னப்பா.. மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டமாதிரி.. சாவு வந்தவுக சாவ பார்த்துக்கிட்டு போவனும் இதெல்லாம் என்ன பேச்சு."
" டேய்.. என் கிட்டே பேசி என்ன பிரயோசனம் .. போய் அந்த பொண்ணை சமாதானப்படுத்து போ"
நான் ரூமுக்குள்ள போனப்ப மாயா கவிழ்ந்து படுத்துக்கிட்டிருந்தா. முதுகு குலுங்கறது தெரிஞ்சது..அட அத்தைக்காரி இந்தளவுக்கு சீன் க்ரியேட் பண்ணிட்டாளானு நினைச்சிக்கிட்டு.. பக்கத்துல போய் மெல்ல மாயா தலைமேல கைவச்சு "ஏய் .. என்ன இது .. எதுக்கு இப்படி அழறே.. போனவன் போயாச்சு ... நீயோ நானோ அழுது திரும்பி வரப்போறதில்லே....."ன்னேன்.
அவள் "முகேஷ் ! நான் அழறது உன் தம்பி டெத்தானதுக்காக இல்லே"ன்னா.
"பின்னே எதுக்கு அழறே?"
"நான் வயசுல பெரியவ, நீ சின்னவன். இப்படி சாஸ்திர விரோதமா கல்யாணம் பண்ணதாலதான் இப்படி ஆச்சுன்னு சொன்னாங்க..அப்படி சொன்னதுக்காக அழலே. அவங்க சொன்னது நிஜமோனு சந்தேகம் வந்துருச்சு அதான் அழுகை தாங்க முடியல"
"அப்படி சொன்னது யாருனு சொல்ட்டா?"
"எப்டி சொல்வே?"
"அது வந்து கர்ண பிசாசுனு ஒரு பிரயோகமிருக்கு. அதுக்கான மந்திரத்தை அட்சரலட்சம் சொல்லி சித்தியடைஞ்சிருக்கேன். அந்த பிசாசை நினைச்சு ஒருதரம் அந்த மந்திரத்த சொன்னா போதும். உடனே காதுல வந்து பதிலை சொல்லிரும்"
"ஏய் பொய் சொல்றே.."
"சரி இப்போ அந்த பிசாச தான் கேட்டு உனக்கு பதில் சொல்லப்போறேன்.. கரெக்டா இல்லையா நீயே சொல்லு "
"யாரு?உ"
"எங்க அ..த்...தை "
"அய் கரெக்டுப்பா .. எப்டி சொல்டே..?"
"அதான் சொன்னேனே கர்ண பிசாசுனு ..தபாரு..ஒரு பொம்பள எப்படியிருக்கனுங்கறதுக்கு எங்கம்மா உதாரணம்னா ஒரு பொம்பள எப்படி இருக்கக்கூடாதுங்கறதுக்கு உதாரணம் எங்க அத்தை . இத்தனைக்கும் எங்க மாமா,அப்பா ரெண்டு பேரோட கேரக்டரும் ஒன்னுதான். ரெண்டு பேருமே சாஃப்ட் கேரக்டர்,ரெண்டு பேருமே அம்மாவுக்கு சரண்டர். ஊர் சொத்துக்கு அலையமாட்டாங்க. லஞ்சம்,லாவணியத்துக்கு இடமே கிடையாது. மூலிகை வைத்தியம் ,ஜோசியம், ஆன்மீகம் இத்யாதில ஈடுபாடு உண்டு.
எங்கம்மாவுக்கும், அத்தைக்கும் நிறைய விஷயத்துல ஒற்றுமை உண்டு . ரெண்டு பேருமே அந்த பெண்ணடிமைகாலத்துலயே அதிர்ஷ்டவசமா எஸ்.எஸ்.சி வரை படிச்சவங்க. ரெண்டு பேருக்கும் கவர்ன்மென்ட் மாப்பிள்ளைதான். பின்னே எப்படி வந்தது இந்த வித்யாசம்ங்கற கேள்விக்கு என்னால பதில் சொல்லமுடியாது.
கடுமையான போராட்டம்,உழைப்போடத்தான்,பலதை இழந்துதான் எல்லாரும் சர்வைவ் ஆகறோம். களம் வேறா இருக்கலாம். உழைப்பின் தன்மை வேறா ,எதை இழக்கறோம்ங்கறதுல வித்யாசம் இருக்கலாம். ஆனால் போராட்டம்,உழைப்பு,இழப்பு எல்லாம் ஒன்னுதான்.
ஒரே கசப்பான அனுபவத்தை கொண்டிருக்கிற ரெண்டு மனிதர்களோட மனப்பான்மை ஒரே விதமா இருக்கறதில்லை. ஒருத்தன் நாமதான் கஷ்டப்பட்டோம் பாவம் அடுத்த தலைமுறையாவது நம்ம கஷ்டத்தை அனுபவிக்காத முன்னேறட்டும்னு நினைச்சு சொல்லி தருவான்.இன்னொருத்தன் நானெல்லாம் கஷ்டப்பட்டுதான் முன்னுக்கு வந்தேன் இவன் மட்டும் .......... நோகாம வந்துரனும்னு பார்த்தா வுடுவனானு நெனப்பான்.
நான் எங்கம்மாவோட இளமைகாலத்தை பார்த்ததில்லை. ஆனால் எங்கத்தையோட டீன் ஏஜ் கதைகளை கேட்டிருக்கேன்.பாவாடை தாவணியோட மார்ல ஒரு ட்ரான்சிஸ்டரை கூட வளர்ப்பு நாயை அணைச்சிக்கிட்டு வீடு வீடா ஏறி கதை பேசிட்டு இறங்குவாளாம். புகுந்த வீட்ல கூட்டுக்குடித்தனம். பத்து பேருக்கு சோறாக்கனும். புருசங்காரனுக்கு தனிக்குடித்தனம் போற (வர்ர) ஐடியாவே இல்லைன்னு தெரிஞ்சதும் எலுமிச்சம்பழம் மண்டினு சொல்லி கூடைல விக்கிற கும்பல்ல மாட்டிவிட்டுட்டிங்கனு ஒரே புலம்பல். தினம் தினம் தாய் வீட்டுக்குவந்து சோகக்கதைகளை சொல்லவேண்டியது காசு,பணம்,காய்கறி,பாத்திரம், பண்டம்னு வாங்கிட்டு போவ வேண்டியது.அவளுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் .பொண்ணு என்னவிட ஆறுமாசம் சின்னது. அந்த காலத்து ஜமுனா மாதிரி இருக்கும். என்னை விட ஒரு க்ளாஸ் கம்மி. என் க்ளாஸ் மெட்ஸ் யார்ரா அந்த பொண்ணுன்னா தங்கச்சின்னுதான் சொல்வேன். அதும் பர்சனாலிட்டி அப்படி.
அந்த பொண்ணை என் பெரிய அண்ணனுக்கு கட்டனும்னு பார்த்தா முடியல. சின்ன அண்ணனுக்கு ட்ரை பண்ணா முடியல. எனக்கு லிங்க் பண்ண பார்த்தா முடியல. சதா குறை சொல்றது,முணுக்குன்னா கண்ல தண்ணி, கண்ட நேரத்துல திங்க வேண்டியது, கண்ட நேரத்துல தூக்கம். அதும் புத்தி வேறெப்படி வேலை செய்யும்.
நல்ல கதை,பாத்திரப் படைப்புகள் நல்லா இருக்கு.ஊர் வாசனை அதிகம்
ReplyDeleteஉருத்திரா அவர்களே,
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி. மறைந்த எழுத்தாளர் சுஜாதாதான் சொல்வார் கதை நடக்கிற ஜியாக்ரஃபி கூட முக்கியம். உனக்கு தெரிஞ்ச இடத்துல நடக்கிற மாதிரி கதை எழுதும்பார். சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சுஜாதா தான் நமக்கு குரு
அட...புது பொலிவா பக்கத்தை மாத்திட்டீங்க ரொம்ப நல்லா இருக்கு...எப்படித்தான் இவ்ளோ எழுதுறிங்க.....அட சாமி
ReplyDeleteசதீஷ் குமார் அவர்களே,
ReplyDeleteதங்களை போன்றோரின் பாராட்டே இந்த சாதனைக்கு (?) காரணம்.
மனமிருந்தால் மார்கமுண்டு
ஃபைன்ட் எ வில். தி வில் ஃபைண்ட்ஸ் தி வே