வணக்கம் தலை ! வழக்கம் போல தலைப்பை பார்த்து என்ட்ரி கொடுத்த பார்ட்டியானா சிகப்புல இருக்கிறத மத்தும் படிச்சுருக..
தத்துவம்னு ஒரு தனிபதிவும் போத்திருக்கேன். அதை படிக்க CLICK HERE.
"ஏய் ! நீ தானே ஒரு சந்தர்ப்பத்துல சொன்னே .பெண் பலான நேரத்துல கண்ணை மூடி தனக்கு விருப்பமானவனை கற்பனை பண்ணிக்கிறான்னு"
"இந்த உலகத்துல எல்லாமே உண்மைதான். எல்லாமே பொய் தான்.ஆனால் எந்த பொய்யும் 100 சதம் பொய் கிடையாது. எந்த நிஜமும் 100 சதம் நிஜம் கிடையாது. எந்த பொய்யும் 24 மணி நேரம்,365 நாளும் பொய்யா இருக்க முடியாது. எந்த நிஜமும் 24 மணி நேரம்,365 நாளும் நிஜமா இருக்க முடியாது. மாறாதது எதுவுமில்லே மாற்றத்தை தவிர"
" ஏய் இந்த குழப்பற வேலையெல்லாம் வேணா உண்மைய சொல்லு. அந்த நேரத்துல பெண் ஏன் கண்ணை மூடிக்கிறா?"
"சமஸ்கிருதத்துல பஞ்சேந்திரியானாம் நயனம் பிரதானம்னு ஒரு வாக்கியம் உண்டு. மனிதனோட சக்தி பல வகைல வீணாகுது. அதிலயும் கண்வழியா அதிகம் வீணாகுது. உலகம் கடல் மாதிரி. மனித மனம் படகு மாதிரி. படகுக்கு கீழே கடல் நீர் இருக்கலாம். ஆனா படகுக்குள்ள கடல் வரக்கூடாது.மனித மனம்ங்கற படகுக்குள்ள உலகங்கற கடல் நீரை அனுப்பற முக்கிய,பெரிய ஓட்டை கண். கண் திறந்திருக்கும்போது ரேடியோல வர்ர வாய்ஸ் யாருதுனு கூட சரியா கெஸ் பண்ண முடியாது. அட் தி சேம் டைம் கண்ண மூடிட்டு கேட்டா பி.ஜி.எம்.ல வர்ரது வயலினா வீணையானு கூட கெஸ் பண்ணலாம். கண் மனிதனோட மனோ சக்தியை வெளியே அனுப்புது. சக்தி குறைஞ்சா உன்னால உன் பார்வைய உள் நோக்கி திருப்ப முடியாது. பெண் இன்ட்ராவர்ட் அவளுக்கு தனக்குள்ள ,தன் அறைக்குள்ள, தன் வீட்டுக்குள்ள என்ன நடக்குதுங்கறத கவனிக்கிறதுலதான் ஆர்வம். ஏன்னா அவளோட இன உறுப்பின் அமைப்பே அப்படி. செக்சுங்கறது மனித உடலோட மையம் மட்டுமில்லே. மனித மனதோட மையமும் அதான்.அதனால தான் தியானம் பண்றவங்க கண்களை மூடிக்கிறாங்க. ஊனக்கண்ணை மூடும்போது உன் கவனம் குவியுது. கான்சன்ட்ரேஷன் அதிகரிக்குது. ஷி வில் பிகம் மோர் ரெசிப்டிவ். அதாவது அவள் மேலும் உள்வாங்குபவளா மாறிர்ரா.பை தி பை பலான நேரத்துல பெண் மல்லாந்து படுத்திருக்கிறப்ப கண்ணை மூடினா அது மேல் நோக்கி செருகும். அப்போ அவளோட கவனம் ஆட்டோ மெட்டிக்கா ஆக்னா சக்கரத்து மேல போயிரும்.அப்போ உடலுறவு ஒரு யோகமா, தியானமா மாறுது. அதனால தான் உடலுறவுக்கு பின்னாடி கூட பெண் ஆக்டிவா இருக்கமுடியுது. "
" நீ உண்மைய சொல்றியா பீலா விடறியான்னே தெரியமாட்டேங்குது. நீ கண்ட புஸ்தவத்தையும் படிக்கிறியே தவிர நீ சொல்ற எதுவுமே அந்த புக்ஸ்ல இல்லே"
"த பார்ரா .. நான் இல்லாதப்ப அன் அலமாரிய எல்லாம் குடையறனு அர்த்தம்"
"சே .. போன வெள்ளிக்கிழமை நீ முன்னாடி போய்ட்டே .. உங்கப்பா சஷ்டி பஞ்சாங்கத்தை எடுத்து சஷ்டி எப்ப வருது பாரும்மான்னாரு. நான் பஞ்சாங்கத்தை பிரிச்ச உடனே கண்ல பட்ட முதல் பக்கத்துல சாந்தி முகூர்த்தம் பத்தி தான் போட்டிருந்தது. பெண் ருதுவாகி குளித்து சுத்தமான ஐந்து நாட்கள் கழித்துனு போட்டிருந்துச்சு. இதென்னடா தலையெழுத்துனு சஷ்டி எப்போனு பார்த்துட்டு மூடி வச்சுட்டேன். ஞாயிற்றுக்கிழமை நீ ஊர்ல இல்லாத நேரத்துல உன் புக்ஸை எல்லாம் புரட்ட ஆரம்பிச்சேன். "
"அப்படி போடு அரிவாளை.. மொத்தத்துல செக்ஸு சப்ஜெக்டுக்குள்ள இழுத்துருச்சுனு சொல்லு"
" சீ போ உனக்கு வேற எண்ணமே கிடையாது"
"மொத்தத்தையும் படிச்சு என்னதான் புரிஞ்சிக்கிட்டே "
"எனக்கு ஒன்னுமெ புரியலை. ச்சும்மா ஹிண்டு பேப்பர் படிக்கிற மாதிரி படிச்சேன் . நீ பேச பேச ..........."
"தினத்தந்தி மாதிரி புரியுதுங்கறே.. ஜெய் ஆதித்தனார்"
"நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லை. நீ சொல்றதெல்லாம் நிஜமா ? இல்லே பீலாவா?"
"அது எனக்கேதெரியாது..இந்த ஜோசிய புஸ்தகங்கள படிச்சதுல கொஞ்சமா குழம்பிட்டேன். எனக்கு லக்னத்துல குரு உச்சம். அதனால தெய்வீக ப்ரேரணை இருக்குமாம். சூரியன் ஆத்மகாரகன், புதன் வித்யாகாரகன் இவிக ரெண்டு பேரும் சேர்ந்ததால தெரியாத விஷயத்தையெல்லாம் தொட்டு கலக்குவேனாம். ஆத்மாலருந்து வித்தை அப்படியே இடைதேர்தல் நடக்கிற தொகுதில பணம் மாதிரி கொட்டுமாம்.தர்கத்துக்கு அதிபதியான செவ்வாய் ஜீவனாதிபதியாகி வித்யாஸ்தானத்துல ஞான காரகனான கேதுவோட சேர்ந்ததால வெறுமனே தர்க்கத்தை வச்சே சத்தியத்தை பிடிச்சுருவனாம். போன ஜென்மத்துல கத்துக்கிட்ட வித்தையெல்லாம் ஞா வந்துருமாம்................."
"அப்பாடாஆஆஆஆஆஆ ஆச்சா ..இன்னம் இருக்கா? எனக்கு அதெல்லாம் தேவையில்லை. நீ இந்த நாட்டுக்கு தலைவனாவியா?"
"ஆனாலும் ஆகலாம் உயிரோட இருந்தா"
"ஆர் யு ஜோக்கிங்?"
" நோ ..ஸ்டேட் போலீஸ்லருந்து ,இன்டலிஜென்ஸ் வரை என்னை வலை வீசி தேடப்போறாங்க"
"எப்படிடா இவ்ள கன்ஃபார்மா சொல்றே?"
"என்னோட கடக லக்னத்துக்கு குரு டூ இன் ஒன். சத்ரு ,ரோக ,ருண வாதைகள தரவேண்டியதும் அவர்தான். தூர தேசங்கள்ளருந்து உதவிய தந்து உயர்ந்த பதவிய தரவேண்டியதும் அவர்தான். என் ஜாதகத்துல பத்துல ராகு இருக்கார். அதனால தலைமறைவு வாழ்க்கை கூட வாழவேண்டி வரலாம். மேலும் 9ல சனி இருக்கிறதால முன்ன பின்ன தெரியாத பஞ்சை பராரிங்க என்னை போஷிப்பாங்க. லக்னாதிபதி ரெண்டுல இருந்து எட்டை பார்க்கிறதாலயும், பாதகாதிபதியோட சேர்ந்ததாலயும் வாழ்க்கைல பல தடவை செத்துருவனாம், ஆனால் அந்த பாதகாதிபதி சுக்கிரங்கறதால அவரு சஞ்சீவி மந்திரத்தை வச்சிருக்கிறவர்ங்கறதால பிழைக்க வச்சுருவாராம். நான் பீலா விட்டாகூட என் வார்த்தைகள் நிஜமாயிருமாம்."
"அய்யோ அய்யோ என்ன நீ ஹோட்டல்ல சர்வர் லிஸ்ட் சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டே போற.முதல்ல இந்த புக்ஸையெல்லாம் பழைய பேப்பர் கடைக்கு போட்டுர்ரன். உனக்கு உன்.........னத பதவியும் வேணா.. பஞ்சை பராரிகளோட தலைமறைவு வாழ்க்கை வாழறதும் வேணா"
"ஷிட் என்ன பேசறே நீ எனக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்னு டாக்டர் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார்னு வை. அந்த சர்ட்டிஃபிகேட்டை கிழிச்சு போட்டுட்டா ஹெச்.ஐ..வி நெகடிவ்னு ஆயிருமா?"
மாயாவை லாஜிக்கலா பேசி மடக்கினப்ப நான் சொன்னதெல்லாம் நடந்துர
போகுதுனு நெனச்சி கூட பார்க்கலை. ஆனா நடந்தது. தமிழக அரசியலையும்,ஆந்திர அரசியலையும் ஒப்பிட்டு எழுதும்போது ஒருதரம் என்.டி.ஆர் ஆந்திர எம்ஜி.ஆர் இல்லே ஆந்திரத்து பெரியார்னு நகர தூதால கட்டுரை எழுதினேன். தன்னிலிருந்த பெரியாரின் குண நலன் களுக்கு சிகரம் வச்ச மாதிரி என்.டி.ஆர் டிவோர்சி+ வளர்ந்த பையனுக்கு தாயான லட்சுமி பார்வதிய கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
ஆளுங்கட்சில இருந்தும் கோஷ்டி அரசியல் காரணமா இந்த நாலு வருசத்துல ஜகன் சாரும் ரொம்பவே அல்லல் பட்டாரு. லோக்கல் இஷ்யூஸுக்காக (குடி நீர் , பஸ் ஸ்டாண்டை மாத்த கூடாது இத்யாதி) தொடர் உண்ணாவிரதமெல்லாம் இருந்தாரு. நான் கட்சி கிட்சியெல்லாம் தூர வச்சிட்டு போய் மாலை போட்டு வாழ்த்திட்டு வந்தேன்.
தேர்தல் வந்தது. என்.டி.ஆர் வெற்றி வாகை சூடினாரு. லோக்கல்ல மாவட்டத்துல நின்ன காங்கிரஸ் ஜாம்பவானெல்லாம் காலி. அடிச்சு பிடிச்சு சீட் வாங்கின ஜகன் சாரு மட்டும் ஜெயிச்சாரு. நானும் மாயாவும் போய் வாழ்த்திட்டு வந்தோம்.
"யோவ் ! உன் கேரக்டரே புரியலய்யா. எலக்சன் எதிர்த்து வேலை பார்க்கிறே . ஜெயிச்சா வாழ்த்த வந்துர்ரே. சரி உன்னை என்.டி.ஆர் நல்லா மயக்கி வச்சிருக்காரு .. நீ என்ன பண்ணுவே"ன்னு நக்கலடிச்சு அனுப்பினாரு.
ஆட்சிய பிடிச்ச என்.டி.ஆர் சந்திரபாபுவ நிதிமந்திரியாக்கினாரு. பிற்காலத்துல சி.எம்.ஆகிஅமல் படுத்தி செருப்படி வாங்கின பொருளாதார சீர்திருத்தங்களையெல்லாம் என்.டி.ஆர் முதல்வரா இருக்கிறப்பவே நிதி மந்திரிங்கற ஹோதால அமல் செய்ய பார்த்தார். என்.டி.ஆர் அந்த ஜீ.ஓக்களை நிறுத்தி வைக்க உத்தரவு போட்டார். பாபுவோட ஈகோ அடி வாங்கிருச்சு.
லட்சுமி பார்வதியை சாக்கா வச்சு கோஷ்டி சேர்க்க ஆரம்பிச்சாரு. இதுக்கு என்.டி.ஆரோட வெள்ளந்தியான குண நலனும் காரணம். முதல் தடவை அரசியல்ல குதிச்சு வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவிச்சுட்டு தன் பேச்சு பதிவு செய்யப்பட்ட ஆடியோ கேசட்டை ஆளுக்கொன்னா கொடுத்து அனுப்பிட்டாரு.
அப்போ இருந்த காங்கிரஸ் எதிர்ப்பு அலைல கண்டக்டர், டாக்சி ட்ரைவரெல்லாம் ஜெயிச்சு வந்துட்டாங்க.
1983க்கும், 1994க்கும் இடையில 11 வருஷம் கடந்து போயிருச்சே. அரசியல் எந்த அளவுக்கு கரப்ட் ஆகியிருக்கும். தேர்தல் செலவு எந்தளவுக்கு எகிறியிருக்கும். இதை யெல்லாம் யோசிக்காம மறுபடி ஆளுக்கொரு காசட்டை கொடுத்து அனுப்புவாராம்.
என்.டி.ஆர் சாம்பர்லருந்து "எப்படியோ சீட் கிடைச்சுருச்சு. தேர்தல் செலவுக்கு என்னடா பண்றதுன்னு கேண்டிடெட் நொந்து போய் வரப்ப தன் சேம்பருக்கு வரச்சொல்லி சந்திரபாபு கூப்டனுப்புவாராம். பணத்துக்கு "ஏற்பாடு" பண்ணுவாராம்.
இப்போ சந்திரபாபுவுக்கு அவிக ஈல்ட் ஆகித்தானே ஆகனும். இப்படியாக 1994 ஆகஸ்டுல ஜகத் பிரசித்தமான சந்திர பாபுவின் முதுகில் குத்தும் எபிசோட் நடந்தேறிச்சு. ஆட்சி போச்,கட்சி போச்.
நான் அவசர அவசரமா அவரோட ஜாதகத்தை ஆராஞ்சி தை மாசம் மூணாவது வாரத்துல உங்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டாங்கனு தந்தி கொடுத்தேன்.
ஜில்லா ஜில்லாவா போய் கூட்டம் போட்டு நடந்ததை மக்களுக்கு சொல்றேனு என்.டி.ஆர் சவால் விட்டாரு. கூட்ட செலவுக்கு செக் போட்டு அனுப்பினப்ப வங்கில அக்கவுண்டை நிறுத்தி வச்சிருக்கிறதா சொல்லிட்டாங்க.
அவர் அரசியலுக்கு வர்ரப்பவே பாக பிரிவினை எல்லாம் பண்ணிட்டு என் கிட்டே ஒன்னுமில்லேனு சொல்ட்டுதான் வந்தாரு. கட்சி மெம்பர்ஷிப் காசு டெப்பாசிட் ஆகியிருக்கிற வங்கிக்குதான் செக் அனுப்பினாரு. கோர்ட் லீவா இருந்தாலும் ஹவுஸ் மோஷனோ யூரினோ எல்லா தகிடுதத்தமும் செய்து செக் என் கேஷ் ஆறத நிறுத்திட்டாங்க.
ஜனவரி 18 ஆம் தேதி "என்.டி.ஆர் திடீர் மரணம்"னு தினசரிகள்ள செய்தி. கேவலம் ஒரு தேர்தல்ல அவரு தோத்துப்போனதுக்கே நொறுங்கி போன எனக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சி பாருங்க.
நான் ஒரு சாமானியன். ஜொள்ளு பார்ட்டி. குழப்ப வாதி. வில் பவர் இல்லாத ஆசாமி, சந்தேக கேஸு, மதில் மேல் பூனை, தாழ்வு மனப்பான்மை உள்ள பார்ட்டி. இதையெல்லாம் ஓவர் கம் ஆறதுக்குதான் என்.டி.ஆரை என் ரோல் மாடலா ஏத்துக்கிடேன். ஏதோ யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி ஓரளவுக்கு மோல்ட் ஆனேன்.. அவர் ஃபார்முலா சக்ஸஸ் ஃபார்முலான்னிட்டு அதுவே என் ப்ளூ ப்ரிண்ட்டுன்னு டிசைட் ஆயிட்டன். அந்த நேரம் பார்த்து கட்சி தோத்து போச்சு. இருந்தாலும் என்னை நான் தேத்திக்கிட்டேன். என் மனசை கொஞ்சமா உறுதிப்படுத்திக்கிட்டு பாசிட்டிவா யோசிச்சு அவரோட தோல்விக்கான காரணங்களை ஆராய்ச்சி பண்ணி தலைவர் வெற்றிக்கு ஒரு ப்ளூ ப்ரிண்ட் தயாரிச்சு அனுப்பினேன். எப்படியோ ஜெயுச்சுட்டார். ஆச்சு போச்சுனு இருந்தப்ப படக்குனு செத்தே போயிட்டாரு. தாளி அவரு ஒரு மூனு மாசம் உயிரோட இருந்திருந்தா சந்திரபாபுவுக்கு ஆனல் செக்ஸ் பண்ணியிருப்பாரு அது வேற கதை . செத்தே போயிட்டாரு.ஆட்டம் க்ளோஸ்.
என்.டி.ஆர்ங்கறது என்ன? மூணெழுத்தா? அவர் உடம்பா? அவர் உயிரா? அவர் கொள்கையா? எனக்கும் என்.டி.ஆருக்கும் என்ன சம்பந்தம்? இப்படி என்னென்னவோ யோசனைகள் குழப்பங்கள்.
கொஞ்ச நாள் அவர் சம்சாரம் லட்சுமி பார்வதி சில எம்.எல்.ஏக்களை வச்சுக்கிட்டு அரசியல் பண்ணுச்சி. எதுவும் போனியாவல.1999ல அடுத்த தேர்தல் வந்தது . தாளி எம்.எல்.ஏங்களை பிடிச்சி சி.எம் ஆயிர்ரது இல்லே கண்ணா இப்புடு சூடுனு களத்துல குதிச்சேன். ஜகன் சாருக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்தது. நான் நேர போய் "சார் ! நான் காங்கிரஸ் கொடிய பிடிக்க மாட்டேன். என்னோடது தனி ஆவர்த்தனம். சந்திரபாபு தலைமைல இருக்கிற தெ.தே. என்.டி.ஆரோட தெ.தேசமில்லை. அதை தோற்கடிங்கனு தான் பிரசாரம் பண்ணுவேன்"னு சொல்லிட்டு வந்தேன். சொன்னதை செய்யறது எவ்ளோ கஷ்டம், தடைகளை மீறி சொன்னதை செய்துட்டா எவ்ளோ கஷ்டங்கறதெல்லாம் அப்புறம்தான் புரிஞ்சது. ரோட்டுக்கு வந்த பிறகு...
No comments:
Post a Comment