கல்கி பகவான் குறித்து தெரியாதவர்கள் இல்லை. ஆந்திர மானிலம், சித்தூர்,மாவட்டம், வரதய்ய பாளையம் மண்டலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தில் கணக்கற்ற கொலைகள் நடந்துள்ளதாய் தெலுங்கு தனியார் டிவி சேனல்கள் செய்தி ஒளிபரப்பின. விகாஸ் தாசாஜி( சீடர்),பவன் ரெட்டி ஆகியோர் கொலை செய்யப்பட்டு தற்கொலைகளாக மாற்றப்பட்டன என்றும், ட்ரைவர் ஸ்ரீனு என்பவர் சென்னை அருகே கொலை செய்யப்பட்டு அவரின் கொலை விபத்தாக சித்தரிக்கப்பட்டது என்றும் செய்திகள் ஒளிபரப்பாகின. இதையடுத்து ஆசிரமம் மீது அருகாமையில் உள்ள பத்தபல்லெம் கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள தகவல் மையத்திலிருந்த ஒரு ஊழியரை அடித்து உதைத்ததோடு,அங்கிருந்த ஃபர்னிச்சரையும் துவம்சம் செய்தனர்.தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய செய்திகளின் பின்னணி குறித்த விவரம் வருமாறு:
விஜயவாடாவை சேர்ந்தவர் நாராயணா. இவர் திங்கள் கிழமை ஹைதராபாத், சோமாஜி குடா ப்ரஸ் க்ளப்பில் நிருபர்களை சந்தித்து பேசினார்.தனக்கு முக்தி (?) வழங்குவதாக கூறி கல்கி பகவான் ரூ.15 லட்சம் பெற்றுக்கொண்டு , 12 வருடங்களாக "சேவை"செய்தும் தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகவும் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
"இளைஞர்களை கல்கி ஆசிரமத்தில் சீடர்களாக சேர்த்துக்கொள்ள ரூ.2000 வசூலிக்கப்படுவதாக கூறினார். அவர்கள் மேல்ம் 60 பேரை சேர்த்து விட்டால் ரூ.5000 வசூலித்துக்கொண்டு மகா சீடர்களாக சேர்த்துக்கொள்கிறார்கள்.
கல்கியிடம் எவ்வித சக்தியும் இல்லை.லேகியம் என்ற பெயரில் போதை பொருட்களை கொடுத்து கல்கி இளைஞர்களை அடிமைப்படுத்தி கொள்கிறார்.மானிலமெங்கும் ஆசிரம கிளைகள் திறக்கவிருப்பதாய் கூறி பினாமி பெயர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கப்படுகிறது.லட்சக்கணக்கான இளைஞசர்கள் தம் குடும்பத்தை மறந்து கல்கி மயக்கத்தில் இருக்கிறார்கள். அரசாங்கம் கல்கி மீது விசாரணை நடத்தி சட்டப்படி தண்டிப்பதோடு மேற்படி இளைஞர்களை உரிய கவுன்சிலிங் கொடுத்து கல்கி மயக்கத்தில் இருந்து மீட்க வேண்டும்."
நாராயணாவின் ஸ்டேட்மென்ட் இதுவரை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இறுதியில் "அவேக்" என்ற பெயரில் ஒரு அமைப்பை துவக்கி செயல்படப்பொவதாய் கூறினாரே பார்க்கலாம்.
பத்திரிக்கை ஆஃபீஸ்லருந்து வெளிய வந்தா பத்திரிக்கை துவக்கனும் , ஆசிரமத்துல இருந்து வெளிய வந்தா ஆசிரமம் ஆரம்பிக்கனும். நல்லா இருக்குப்பா நீதி..
திருச்சி திருப்பராய்துறையில் உள்ள ராமகிருஷ்ண மடம் கூட இப்படி துவக்கப்பட்டதே. அந்த காலத்தில் தமிழக நிதியமைச்சர் சி.சுப்ரமணியத்தின் அண்ணன் மகன் ஒருவர் மயிலாப்பூர் ரா.கி மடத்தில் இருந்தாராம். மடத்தில் தகராறு வந்து முருகன் பழனிக்கு வந்துவிட்டதை போல் திருப்பராய்த்துறை வந்தாராம். ஆசிரமம் துவக்கினாராம்.
சரி கல்கி ஆசிரம விஷயத்துக்கு வருவோம். சமீபத்துல வரதய்யபாளையம் மண்டலத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் இருந்து சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் தனிக்கட்சி அடச்சே.. தனி ஆசிரமம் துவக்க போகிறார்களாம்.
கேப்பயில நெய் வடியுதுன்னா கேட்கிறவன் கேணப்பயல் தானே.. இவிக காசு கொடுப்பாங்களாம் அவரு முக்திய கொடுப்பாராம். நல்ல காலம் கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ போடறேனு சொல்லல. மனித உரிமைகள் கமிஷனுக்கு புகார் கொடுக்க போறாராம் நாராயணன்.
மக்கள் பண வசதிக்கு ஏற்றார் போல் சாமியார்களை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் போலும்.
ReplyDeleteகல்கி நடுத்தர மக்களை குறிவைத்த இயக்கம் போலும்.
கோ.வி.கண்ணன் அவர்களே,
ReplyDeleteகல்கி சாமியார் ரொம்ப காஸ்ட்லி சாமியாருங்கோவ். நான் பதிவுல குறிப்பிட்ட தொகை இளைஞர்கள் அவருக்கு கொத்தடிமையா போக இவிங்க தர வேண்டிய கட்டணம் தேன். அன்னாரின் அருள் பெற லட்சங்கள் கொட்டிக்கொடுக்கவேண்டுமாம்