முன் கதை சுருக்கம்
என் பேரு முகேஷு வயசு22.டிகிரி முடிச்சுட்டு 'ச்சும்மா' இருந்த நேரம் அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் தன்னோட டூர் பஸ்ஸுக ரெண்டையும் பார்த்துக்க கூப்டாரு. நல்லாவே டெவலப் ஆச்சு. எனக்கு வெளி வேலைல இருக்கிற ஆர்வம் க்ளரிக்கல் வேலைல இல்லாததை பார்த்த ஓனர் மாயாவ எனக்கு உதவியா அப்பாயிண்ட் பண்ணார். மாயா என்னைவிட பத்து வயசு பெரியவ. குஷ்பு தனமான ஃபிசிக். ரொட்டீன் உமன் இல்லே வேலைல எமன். அவளுக்கு 4 அக்கா எல்லாரும் மேரீட். அவியளுக்கு கல்யாணம் பண்றதுக்குள்ளாற அப்பா சலிச்சு போயி செத்துப்போயிட்டாரு. மிச்சம் மீதி நிலத்தையும், எஃப்,டிக்களையும் மாயா பேருக்கு வச்சிட்டார். இதனால அக்கா புருசங்க 4 பேரும் இவளை கவுத்து சொத்து பணம் அடிச்சுரலாம்னு பார்க்க இவ டவுனுக்கு ஜூட். போது போறதுக்கு நம்ம டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலை. சபார்டினேட்டா வீக் எண்ட்ல மீட் பண்றதுண்டு. நேரு ஸ்ட்ரீட்ல அறையெடுத்து தங்கியிருக்கா. அறைனு சொன்னது அவ தனியா இருக்காங்கற கான்செப்ட்ல . சின்ன வீடுன்னு சொல்லலாம். ( பாக்யராஜ் படத்துல வர்ர வீடில்லங்கண்ணா). எனக்கு அம்மா 1984லயே டிக்கட்.பாலச்சந்தர் தனமான அப்பா, ரெண்டு அண்ணன் ,ஒரு தம்பி, பொம்பளையிலயே சேர்த்தியில்லாத பாட்டி. ஊர்ல நத்தம், நாடோடி,புறம்போக்கு ,ப்ளாக் டிக்கட் எல்லாத்தோடயும் டச். அப்பப்ப ரீஃபில் பண்ணிக்கிறதுக்காக பலான வீடுகள். ஒரு நாள் ஞா கிழமை மாயாவோட அறைக்கு போறேன். வாயில் நுரை. பக்கத்துல பூச்சி மருந்து பாட்டில். எப்படியோ ஒரு போலி டாக்டர்,அவர் மூலமா கவர்ன்மென்ட் ஹெட் நர்ஸு மூலமா காப்பாத்தி வுட்டாச்சு. என்னம்மா விசயம்னு கேட்டா பழைய காதலனாம். மாயாவோட அப்பா பார்த்த சம்பந்தம் பெண் பார்க்க வர்ரப்பல்லாம் மொட்டை கடிதாசு போட்டு கெடுக்கிறது வேலை. தங்கச்சிக்கு முடியாம இவர் பண்ணமாட்டாராம்.அதுவரை மாயா வாயாம இருக்கனுமாம். மாயா மாதிரி கேரக்டர் அவனை எப்படி டைஜஸ்ட் பண்ணிக்கும்.தங்கச்சி கல்யாணத்துக்கு செக் கிழிச்சு கொடுத்து "ஓடிப்போடா"ன்னிருக்கா. அந்த நாய் வெளில போய் " நீ என்னை வச்சிருக்கிறதாவும் என் மேல ஆசைப்பட்டு செக் கொடுத்ததாவும் ஊரெல்லாம் சொல்லுவேன்னு" சொல்ட்டு போக மாயா தற்கொலை முயற்சி. பாபுரெட்டி ஆட்கள் துணையோட மாயா கிராமத்துக்கு போயி மேற்படி நாயை தூக்க முயற்சி. கிராமத்தாளுங்க எங்களை மரத்துல கட்டி வச்சு செமை காட். மாயா ஜீனும், கார்ட்டூன் போட்ட பஞ்சு மிட்டாய் டீ ஷர்ட் ,சம்மர் கட்டுனு என்னை இம்சிக்க நானும் ஓஞ்சு போன்னு ஈடுகொடுக்க படக்குனு முகத்தை வாரி நெஞ்சுல அணைச்சுக்கிட்டா. நான் பேசாம எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கயேன். அந்தாளும் விடோயர்தான்னேன்..அவள் உனக்கு அம்மா தானே வேணம் வாடா செல்லம்னு நெஞ்சோட அணைச்சிக்கிட்டா. மறு நாள் ஓனர் அவர் சம்சாரத்தை மெட்ராஸ் அப்போலோ கூட்டிப்போகனும்னாரு. மாயாவை துணைக்கு கூட்டிப்போறனு சொல்ட்டு மாயாவுக்கு போன் போட்டு விவரம் சொன்னேன்."சரி வரேன்"ன்னா. ஆஃபீஸ் போய் என்ன மாயா.. நீ ரூமுக்கு போய் பேக்கிங் முடி நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னேன். " என்ன நினைச்சிருக்கே என்னப்பத்தி .. "ன்னு சீறினாள் மாயா.
இப்போ தொடர்ந்து படிங்க..
எனக்கு ஒன்னுமே புரியலை. "ஏய் ! என்னாச்சு உனக்கு நான் என்ன உனக்கு உத்தரவா போட்டேன். ஓனருக்கு போட்டுக்கொடுத்து உன்னை மாட்டிவிட்டேனா இல்லையே ஆக்சுவலி ஓனர் வேணான்டா அந்த பொண்ணு சவுண்ட் பார்ட்டி நல்லாருக்காதுன்னு சொல்ட்டாரு. நான் தான் ஒரு நப்பாசைல, சந்தர்ப்பம் இது .உதவ முடியுமானு போன் பண்ணி கேட்டேன். முடியாதுன்னா முடியாதுனு சொல்லிரவேண்டியதுதானே.. அப்போ வரேனு சொல்லிட்டு இப்ப சீறி விழறே" என்று பொரிந்து தள்ளினேன்.
" இடியட், நான் பூச்சி மருந்து குடிச்சு சாக பிழைக்க விழுந்து கிடந்தப்போ டாக்டர்கிட்டே கூட்டிப்போக முடியுமான்னு நான் உன்னை கேட்டேனா .. நீயாதானா தூக்கிட்டு போனே"
"ஆமாம்"
"நான் சொன்னேனா விலேஜுக்கு போய் அடிவாங்கி சாகுடான்னு"
"இல்லையே "
" நீ ஏன் அதையெல்லாம் செய்தே?"
"ஜஸ்ட் ஒரு ஹ்யுமேனிட்டேரியன் கன்சிடரேஷன் தான்."
"அது எனக்கு இருக்காதுன்னு நினைச்சியா? "
"என்னடா இது லொள்ளு தாங்க முடியலை .. உனக்கும் அந்த ஹெச்.சி இருக்கும்னு நம்பிதான் வரமுடியுமானு கேட்டேன்"
"அதென்ன ஹெ.சி"
"ஹ்யுமேனிட்டேரியன் கன்சிடரேஷன்"
"சரி அது எனக்கு இருக்குனு உனக்கு நம்பிக்கை இருந்ததில்லையா.. அப்புறம் என்னத்துக்கு ஃபோன்.. அப்ப உனக்குள்ள அவ நம்பிக்கையும் இருந்ததுன்னுதானே அர்த்தம்?"
"த பார்ரா என்னதான் தொடர் கதையா இருந்தாலும் தினசரி ப்ரேக்குக்காக இப்படி ஒரு பில்டப்பா .. பயந்தே போயிட்டேன். மாயா ! வெட்டிப்பேச்செல்லாம் அப்புறம் முதல்ல கோ ஹோம் அண்ட் பேக்" என்றேன் சுருக்கமாய். " உன்னை மெட்ராஸ்ல வச்சி பேசிக்கறேன்" என்று சைகை காட்டிவிட்டு கிளம்பினாள் மாயா."
அவள் கிளம்பவும் ஓனர் காரில் வந்து சேரவும் சரியாக இருந்தது.. " டேய் உங்கப்பன் கிட்டே ஒரு பேச்சு சொல்லிர்ரா.. அப்பறம் அவனுக்கு பதில் சொல்ல முடியாது என்னால..வீட்ல ரெடியாக இன்னம் டைம் பிடிக்கும் நீ போய் சாப்டுட்டு துணி கிணி எடுத்துக்கிட்டு வீட்டண்டை போய் அவளை ஏத்திக்க போறப்ப வழியில மாயாவை பிக்கப் பண்ணிக்க. டேங்க் ஃபுல் பண்ணிக்க. வண்டி காயிதமெல்லாம் வண்டியிலயே இருக்கு.. உன் லைசென்ஸ் , நம்ம விசிட்டிங் கார்டெல்லாம் எடுத்து வச்சிக்க"ன்னாரு
"பிழியனும்னு முடிவு பண்ணிட்டா கையில எந்த காயிதம் எடுத்து கொடுத்தாலும் கிழிச்சு போட்டுட்டு பின்னியெடுக்கிற போலீஸ் தமிழ் நாட்டு போலீஸ் ..இதெல்லாம் வேஸ்டுசார்" என்று சொல்லாமல் டீசலுக்கும் செலவுக்கும் ஓனர் கொடுத்த பணத்தை வாங்கி பிக் பாக்கெட்டில் வைக்க போக " டே டே .. அது லட்சுமிடா மேல் பாக்கட்ல வை"ன்னாரு.. தபார்ரா பாக்கெட்ல மேல் ஃபீமேலெல்லாம் இருக்கானு நினைச்சுக்கிட்டு கார்ல கிளம்பினேன்.. " டேய் மொள்ளடா மொள்ளடா " என்ற ஓனரின் குரல் தேய்ந்து மறைந்தது.
* * *
வீட்ல குளிச்சு சாப்டு ஓனரம்மாவ லக்கேஜோட ஏத்திக்கிட்டு மாயாவ பிக்கப் பண்ணிக்கிட்டேன். ஓனரம்மா ரொம்ப டீலா இருக்கவே நூல் பிடிச்ச மாதிரி 60 ...70 லயே போனேன். சாயந்திரம் 5.30க்கெல்லாம் ராணிப்பேட்டை. மெட்ராஸ்ல நமக்கு யார் தெரியும்னு ஸ்கெட்ச் பண்ணிக்கிட்டே ட்ரைவ் பண்றேன் ? அப்பத்தான் டக்குனு ஸ்பார்க் ஆச்சு .என் அண்ணனுங்க சொறி பார்ட்டிகளா இருந்தாலும் அவிக ஃப்ரெண்ட்ஸுக்கு நானுன்னா ஒரு ஆர்வம். எங்க பெரிய அண்ணன் நாகராஜ் ஃப்ரெண்டு பி.ஆர் யாதவ், ஸ்ரீதர் எல்லாம் சென்னைலதான் இருக்காங்க. ஸ்ரீதர் இங்கே ஏ.ஆர் சிக்கன் சென்டர்னு வச்சி நடத்தறாரு. யாதவுக்கு எங்க பாபு ரெட்டி டிச் அடிச்சாருன்னு சொன்னேனே அந்த எம்.எல்.ஏவோட நல்ல பழக்கம் அவரு ரெட்டி அப்போலோ எம்.டி யும் ரெட்டி. மேலும் அரகொண்டாவிலயும் ஒரு அப்போலோ இருக்கு.
கார் அண்ணா மேம்பாலத்துல நுழையுது. கிண்டிய நெருங்கின பிறகு டைம பார்த்தா 6.30 உடனே பார்க்கிங் இருக்கிற ஓட்டல் முன்னாடி காரை பார்க் பண்ணேன். மாயாவ ஓனரம்மாவ உள்ளாற கூட்டிப்போயி டிஃபன் ஆர்டர் பண்ணச்சொல்லிட்டு ஓட்டலை ஒட்டியிருந்த எஸ்.டி.டி பூத்துக்கு போயி டெலிஃபோன் டைரக்டரிய வாங்கி ஏ ஆர் சிக்கன் சென்டரை தேடினேன். நல்ல காலம் இருந்தது. ஃபோன் போட்டேன். பி.ஆர் தான் ஃபோன் அட்டெண்ட் பண்ணாரு. அப்போலோ தானே.. எங்க மச்சானுக்கு தெரிஞ்சவன் இருக்கான் நான் அவனை பிக் அப் பண்ணிக்கிட்டு வந்துர்ரன். இன்னைக்கே அட்மிஷன் போட்டு பயாப்சி எல்லாம் முடிச்சுரலாம். முடிஞ்சா நாளைக்கே ஆப்பரேசனுக்கு ஏற்பாடு பண்ணிரலாம்.. நீ இப்ப எங்கே இருக்கேன்னாரு... நான் ஓட்டலோட பேரை சொன்னேன். சரி ஹாஃபனவர்ல வந்துர்ரன். நீ அங்கயே இருன்னாரு.
ஓட்டலுக்குள்ள போயி அரக்க பரக்க டிஃபன் சாப்டுட்டு வெளிய வந்து ஒரு சிகரட்ட பத்த வச்சேன். பிஆர் டூ வீலர்ல வந்து இறங்கினாரு. ஒரு நாள் முன்னாடி சொல்ட்டு வந்திருக்க கூடாது. சரி சரி நம்ம எம்.எல்.ஏவை போன்ல பிடிச்சு பேசிட்டன். அவரு ஹாஸ்பிட்டலுக்கு போன் போட்டு பேசிட்டாராம். கிளம்பு கிளம்புன்னு அவசரப்படுத்தினாரு. நான் நீங்களும் ஏறுங்க .மறுபடி உங்களை இங்கயே ட்ராப் பண்றேன்னேன். அவரு டூவீலரை லாக் பண்ணிக்கிட்டு கார்ல முன்னாடி ஏறினாரு. அவருக்கு இதெல்லாம் பழக்கம் போல ரிசப்ஷன்ல சௌஜன்யமா பேசி அட்மிஷனுக்கு ஏற்பாடு பண்ணாரு. நான் கவுண்டர்ல பணம் கட்டிட்டு வந்தேன். ரிசப்ஷனான்டை ஓனரம்மாவ சுத்தி ஒரே கும்பல் என்னடானு பார்த்தா சொந்தக்காரவுகளாம். ஓனரு ஏதோ தகவலுக்காக போன் போட்டு சொல்ல பெட்ஷீட்டும், கூஜா, கேரியருமா காத்திருக்காங்க. நான் கவுரவமா சொல்லிப்பார்த்தேன் "உங்களுக்கெதுக்கு சிரமம். (மாயாவ காட்டி) இவிக சித்தூர்லருந்து வந்திருக்காக பேஷா பார்த்துப்பாங்க"
அவங்க ஒத்துக்கற மாதிரி இல்லே. கீழே போய் ஓனருக்கு எஸ்.டி.டி.போட்டு பேசினேன். " சரிடா ஏதோ வெட்டும் குத்துமா இருந்த சொந்தங்க. அவளுக்கு உடம்புக்கு முடியலன்னதும் எல்லாத்தயும் மறந்துட்டு வந்திருக்காளுக அவிகளே பார்த்துக்கட்டும். நீ வந்துரு. த பாரு உடனே அரக்க பரக்க அடிச்சுக்கிட்டு வராத. ராத்தங்கிட்டு வெயிலுக்கு முன்ன புறப்படு. ஒரு தடவை ஆஸ்பத்திரி போய் டாக்டரை பார்த்து பேசிட்டு வா"ன்னாரு.
ஆஸ்பத்திரி சம்பிரதாயங்கள் எல்லாம் முடிஞ்சது. பி.ஆர் கேட்டார் " என்னப்பா எங்க தங்க போறே.. கூட யாரிவங்க" நான் விவரம் சொன்னேன். "அடடா இவங்களை கூட வச்சுக்கிட்டு லாட்ஜுல தங்கறது ரிஸ்க் .. நம்ம இடம் மேன்ஷன் ஹவுஸ் மாதிரி. என்ன பண்ணலாம்? ஆங்..இரு இரு ஸ்ரீதர் பெரியம்மா குடும்பத்தோட காசி போயிருக்காங்க .இவனை ராத்திரில போய் காவலுக்கு படுத்துக்க சொல்லி சாவி கொடுத்துட்டு போயிருக்காங்க. நானும் ஸ்ரீதரும் அங்கே போய் படுத்துக்கறோம். நீயும் எங்களோடவே வந்துரு. மேடம் சிக்கன் சென்டர் மாடில படுத்துக்கட்டும்"னாரு.
மாயா "அய்யய்யோ புது எடம் நான் தனியா எப்படிங்க? முகேஷும் கூட இருந்தா பரவாயில்லே" ன்னிட்டா.
பி ஆர்,"மேடம் ! நீங்க நல்லவங்களா இருக்கலாம். முகேஷும் பிஞ்சில பழுத்தவன். கிழவன் மாதிரி தத்துவமெல்லாம் பேசற பார்ட்டிதான் . உங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு.இல்லேங்கல. ஆனால் நானும் ஸ்ரீதரும் மேரீட் பர்சன்ஸா இருந்தாலும் என்னோட என் மனைவி தவிர வேற பொம்பளைங்களும் அந்த மாடி ரூம்ல ராத்தங்குவாங்க. ஸ்ரீதர் டைவர்சி அவனும் என் கேஸுதான். அந்த மாடி ரூம் வாஸ்து கூட நல்லதில்லிங்க. விடிகாலம் சிக்கன் சென்டர்ல வேலை செய்யற பசங்க வந்துருவாங்க. அவங்க பார்த்தா நல்லாருக்காது" ன்னாரு.
மாயா "அப்ப நாங்க ஊருக்கே போயிர்ரோம்"ன்னா. பி.ஆர் என்னை தனியா கூப்டு " என்ன கண்ணா கோழி முத்தலா இருந்தாலும் நின்னு விளையாடுது மிதிச்சியா இல்லியா. எப்படி வசதி .. திறப்பு விழான்னா கொண்டாடு போ இல்லேன்னா அவிகளை கன்வின்ஸ் பண்ணு"ன்னாரு.
"நான் ச்சே ச்சே எங்க நடுவுல அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சார் .. ஜஸ்ட் ஜோவியலா பழகுவாங்க அவ்ளதான்"னேன்
"சரி டைம் பத்தாகுது நேர ஓட்டல் போயி என் வண்டிய பிக்கப் பண்ணிக்கிட்டு போயிருவம். நாங்க ஸ்ரீதர் பெரியம்மா வீட்டுக்கு போறோம் புறப்படு"ன்னாரு.
பி.ஆர் ட்ரைவிங்க் சீட்ல ஏறி உட்கார்ந்தார். சிட்டில ராத்திரி தான் ட்ராஃபிக் அதிகம் நீ டயர்டாயிருக்கே ரெஸ்ட் எடுத்துக்கோன்னிட்டு சீறு சீறுன்னு சீறினார். பூனமல்லி ஹைரோட் , ரோகிணி தியேட்டரை தாண்டினதும் ஏ.ஆர் சிக்கன் சென்டர் சைன் போர்டு வரிசையா தென்பட ஆரம்பிச்சது. வெளிய இருந்து பார்க்க ஏதோ கம்ப்யூட்டர் சென்டர் மாதிரி இருக்கு. அலுமினியம் ஃபேப்ரிக்ஸ் என்ன, ஃபால்ஸ் ரூஃப் என்ன இன்டிரியர் என்ன?
ஸ்ரீதர் பாவம் அப்பத்தான் டிஃபன் பொட்டலத்தையும் குவார்ட்டர் பாட்டிலையும் திறந்து வச்சிருந்தார். பி.ஆர். "மேடம் நீங்க மேல போய் படுங்க.. கொஞ்ச நேரம் பேசிட்டு நாங்களும் புறப்படறோம். முகேஷ் இங்கயே தங்கட்டும் நீங்க போங்கன்னு மாடிக்கு வழி காட்டி எதுக்கு எந்த ஸ்விட்சுன்னல்லாம் காட்டிட்டு வந்தாரு.
ஸ்ரீதர் நல்ல கருப்பு. பி.ஆர் ஏறக்குறைய எம்.ஜி.ஆர் நிறம். அவர் அமிதாப் பச்சன் உயரம். இவர் நம்ம ஊர் கமல் உயரம். பி.ஆர் ஃபேர் அண்ட் லவ்லியெல்லாம் போட்டிருந்தார். ஸ்ரீதர் மாலைல முகம் கூட கழுவ மாட்டார் போல. ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர்னா இதுதான் போலும். ஆனால் ஒருத்தர் பொருளாதார காரணங்களால மனைவிய பிரிஞ்சி வாழ, இன்னொருத்தர் டைவர்சி. இனம் இனத்தோடு சேரும்னா இதானா..
ரெண்டு பேருமா முதல்ல என் வேலை ,ஓனர் ,மாயா பத்தி விசாரிச்சுட்டு என் அண்ணனோட ஃப்ளாஷ் பேக் சீன்ஸெல்லாம் சொல்லிக்கிட்டு மலரும் நினைவுகள்ள மூழ்கி போயிட்டாங்க. ஸ்ரீதர் ரொம்ப ரிலாக்ஸா விஸ்கி சிப் பண்ணிக்கிட்டே சாப்டார். பி.ஆர் முகமெல்லாம் பல். மனுஷனுக்கு கடந்த காலத்து மேல அவளோ காதல்.
பி.ஆர் தான் ஞா படுத்தினார் .ஸ்ரீதர் இருந்துக்கிட்டு" .சரி சரி டைம் 11.30 ஆகுது நாங்க போறோம் நீ படுத்துக்க.அண்ணன் ஃப்ரெண்ட்ஸ் அண்ணங்க மாதிரின்னு ஷை ஃபீல் பண்ணாதே. அண்ணன் ஃப்ரெண்ட்ஸ் உனக்கும் ஃப்ரெண்ட்ஸ்தான். எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது. கோ அஹெட்" ன்னிட்டு கிளம்பிட்டாரு.
நான் மேலே போனேன். மாயா ஃப்ரெஷ்ஷா குளிச்சுட்டு டிவில டிஸ்கவரி சேனல் பார்த்துக்கிட்டிருந்தா.
"ஏய் தூங்கலை?"
" நீ எங்கிட்டே பேசாத"
"தபார்ரா .. என்ன நீ பெண்டாட்டி மாதிரி கோச்சுக்கறே.. ஏதோ நம்ம ஃப்ரெண்ட் தம்பியாச்சேனு எவ்ளோ ஹெல்ப் பண்ணாங்க.. அம்மாவுக்கு அக்காமடேஷன் வேற அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. கர்ட்டசிக்காக ஒரு ஒன்னரை மணி நேரம் பேசக்கூடாதா என்ன?"
"ஜர்னில ஓனர் சம்சாரம். இங்கே இவங்க ஷிட்.."
"ஹலோ .. என்னம்மா வண்டி ஒரு சைடா ஓடுது.. உன் உத்தேசம் ஏதும் எனக்கு புரியல.. "
" என்னத்த புரியறது..நீ ஒரு அரை டிக்கட்டு"
" அப்போ நீ என்ன வாழ்ந்து முடிச்ச கிழவியாக்கும்.. என் டைரிய படிச்சா நொந்துருவ.. உனக்கு வயசு வேணா அதிகமா இருக்கலாம். ஆனால் அய்யா அனுபவம் ? கிட்டே நெருங்க முடியாது. ஒன்னே ஒன்னு சொல்றேன். ஒரு தரம் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து நாலு உருப்படிகளை பிக்கப் பண்ணோம். அவனுங்கல்லாம் வீட்டுக்கு அடங்கின புள்ளைங்க. ராத்தங்க முடியாது. சாயந்திரம் அஞ்சு மணில இருந்து ம்யூசிக்கல் சேர் மாதிரி ஆட்டம் போட்டுட்டு 9 மணிக்கெல்லாம் ஓடிப்போயிடானுங்க. பேசிக்கலா நான் கலைஞன் நல்ல ரசிகன். நடந்த கூத்தையெல்லாம் பார்த்துட்டு பேஸ்தடிச்சுருச்சு. முதல்ல குளிச்சிருங்க குட்டிகளானு குளிக்க வச்சேன். அப்புறம் சாப்பாடு வரவச்சேன். 12 மணி வரை அதையும் இதையும் பேசி காலத்த கழிச்சேன். ஹூம் ஒன்னும் பேரல. டக்குனு ஐடியா ஸ்பார்க் ஆச்சு. மொத்தத்தையும் உருவிட்டு, துணிகளை கையில் பிடிச்சிக்கிட்டு கட்டிலை சுத்தி ஓடச்சொன்னேன்.. "
"ஸ்டாப் ஸ்டாப்.. என்ன நீ உனக்கென்ன பெரிய்ய மன்மதன்னு நினைப்பா? குளுவான் மாதிரி இருந்துக்கிட்டு"
"இரு கண்ணு முடிக்கவே இல்லையே"
" நீ முடிச்சா முருகேசன் சாரோட கவிதை07 கதை முடிஞ்சுரும். ட்ராக் மாத்து"
"சரி உன் கதைக்கு வரேன் ஏதோ 4 மாமன் காரனுங்கள்ள எவனா ஒருத்தனோ ரெண்டு பேரோ மூலைல முடக்கி முத்தம் கித்தம் ட்ரை பண்ணியிருப்பானுங்க.. உன் லவரை தான் பாத்தேனே டேமேஜ் கிராக்கி"
"த்தூ ..உனக்கு இதை விட்டா வேற பேச தெரியாதா? "
"த பாரு நான் டூ இன் ஒன் மாதிரி. நீதான் பெண்டாட்டி மாதிரி கடுப்படிச்சே.. அரை டிக்கட்டுன்னே "
"சரிப்பா சரி தப்பு என்னோடதுதான். போய் குளி. தூங்குற வழிய பாரு. காலைல மறுபடி நீதான் ட்ரைவ் பண்ணனும். எங்கனாச்சும் மோதி கீதி தொலைக்கபோறே"
"அட்றா சக்கைன்னானாம். உயிர் மேல அவ்ள ஆசை இருக்கிறவ ஏன் அந்த ஒதகாத வேலை செய்யனும்.."
"முகேஷ் ! முகேஷ்! நீயே பாயிண்டுக்கு வந்துட்ட நான் பூச்சி மருந்து குடிச்சு சாககிடந்தேனே அப்போ உனக்கு என்ன தோணுச்சு?"
"அய்யோ பாவம் இட்லிபாப்பா மாதிரி வாய் நிறைய சிரிச்சிக்கிட்டிருந்தாளேனு ஒரு பச்சாதாபம்"
"என்னது இட்லி பாப்பாவா? ஒனக்கு வர வர திமிர் ஜாஸ்தியாயிட்டே போவுது உன்னை ..." என்ற படியே ஒரு தலையணையை என் மேல எறிஞ்சா.
அதை கேட்ச் பிடிச்சு" இன்னம் என்னென்ன நினைச்சேனு சொல்லிர்ரன் .ஷேப்புக்கேத்த சின்ன கண்ணா இருந்தாலும்"
" என்ன என்ன ஷேப்புக்கேத்த கண்ணா .. அப்படின்னா நான் யானையா? ஒரு தொடைல ஒரு கிள்ளு கிள்ளினேன்னு வை அப்புறம் மவனே நீ ஷார்ட்ஸ்தான் போட்டுக்கிட்டு திரியனும்...சரி சரி ஏதோ நல்ல ஃப்ளோல என்னென்னவோ சொல்ல வந்தே சொல்லி தொலை"
"எதை பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன்?"
"ஊம் என் கண்ணை பத்தி "
" தேங்க்ஸ் எடுத்து விடறேன்.. புடிச்சுக்கோ சிரிக்கிறப்ப மேலும் சின்னதானாலும் பளீர் பளீர்னு மின்னல் அடிக்குமே. அந்த கண்ணு இப்படி மூடிக்கிடக்கே. ச்சும்மா சியாலோ கார் மாதிரி ரோட்டுக்கு சரியா. ச்சும்மா அன்ன நடை போட்டு வருமே வென்னிலா ஃபேமிலி பேக் மாதிரி ஒரு செம கட்டையாச்சே.. இப்படி பிடுங்கி போட்ட கொடி மாதிரி கிடக்காளேனு மனசு அடிச்சிக்கிச்சு ஒரே தூக்கா தூக்கிட்டு வெளியே வந்தேன்.. என் மாயா நீ டயட் கியட் எல்லாம் மெயின்டெயின் பண்ணமாட்டியா அபவ் 58 கேஜி இருப்பேனு நினைக்கிறேன்"
" முகேஷ் வேணா நிப்பாட்டிரு .. பேச்சு போற போக்கே சரியில்லை .. இடியட் முந்தா நேத்துதான் எங்கப்பாவ கல்யாணம் பண்ணிக்கறியானு கேட்டே.. உனக்கு அம்மாதாஏ வேணம் வாடா கண்ணானு நெஞ்சோட அணைச்சுக்கிட்டேன்.. இப்ப என்னடான்னா தமிழ் சினிமா கணக்கா வர்ணிக்கிறே"
"உனக்கு ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்னா என்ன தெரியுமா?"
"சொல்லு"
"தாய் மேலான காதலால மகன் தந்தைய வெறுக்கறது"
No comments:
Post a Comment